வெளிப்படுத்தின விசேஷம் 16,17- விளக்கவுரை

அதிகாரம் -16, 17

‘சிங்காசனத்திலிருந்து ஆயிற்று என்று..பெருஞ்சத்தம் பிறந்தது’
‘வாநசந உயஅந ய பசநயவ எழiஉந கசழஅ வாந வாசழநெஇளயலiபெஇ ஐவ ளை னழநெ’
வெளி 16: 1- 21(17)

முன்னரை:-
1. தேவ கோபத்தின் கடைசி 7 வாதைகள் பூமியில் ஊற்றப்படும்.
2. கர்த்தருடைய சேனைக்கும் சாத்தான் சேனைக்கும் கடைசி மகாகொடிய யுத்தம் நடக்கும்.
3. அந்தி கிறிஸ்துவின் ஆட்சி பூமியில் அழிக்கப்படும்.

வச 1: கிறிஸ்து இந்த உலகத்திற்கு திரும்பி வந்து தமது ஆட்சியை ஸ்தாபிப்பதற்கு முன் அந்திகிறிஸ்துவின் ஆட்சியை அழிப்பார். அது தேவனுடைய கடைசி 7 கோப கலசங்கள் பூமியில் ஊற்றப்படுவதன் மூலம் நிறைவேறும்.
• 7 கோப கலசங்கள் ஊற்றப்படும்போது வரும் வாதைகளும் 7 எக்காளங்கள் ஊதப்பட்டபோது வந்த வாதைகளும் ஒன்று என்ற கருத்தும் நிலவுகிறது.வெளி 8,9.
• இந்த கடைசி வாதைகள் எகிப்தின்மீதும் பார்வோன் மீதும் அனுப்பப்பட்ட வாதைகளுக்கு ஒப்பிடப்படுகிறது. யாத் 7 , 8, 9, 10 பாட்டு 190- 3,5

வச 2: முதலாம் கலசம் - பூமியும் பூமியின் குடிகளும் பாதிக்கபபடுகிறார்கள். யாத் 9: 10, 11.வெளி 8:7 
மிருகத்தின் முத்திரையைதரித்துக்கொண்டவர்கள் மேல் தேவனுடைய தண்டனை வந்தது. வெளி 14: 9- 11
தேவ எச்சரிப்பை அசட்டைசெய்ததின் விளைவு. நமக்கும் எச்சரிப்பு. கலா 6:17, யாக் 1: 27.
         
வச 3: இரண்டாம் கலசம் - சமுத்திரம் பாதிக்கப்படுகிறது. யாத் 7: 20, 24.வெளி 8:8, 9.
சமுத்திரத்து மச்சங்கள் மாண்டுபோனதால் தண்ணீர் ரத்தமாக காட்சியளிக்கிறது.

வச 4- 7: மூன்றாம் கலசம் - நதி நீர் நிலைகள் பாதிக்கப்படுகிறது. யாத் 8: 6-10.வெளி 8:10,11.
தேவன் நீதியாய் நியாயம் செய்ய தீமையை அழிக்க வேண்டியுள்ளது. எபி 1: 9
தேவ கிருபையை விருதாவாக்கினபடியால் கிருபையின் காலத்திற்குபிறகு மன்னிப்பில்லை. யோவான் 3: 17- 19, 1 கொரி 15: 10. கலா 2:21 

வச 8-9: நான்காம் கலசம் - சூரியனும் சந்திரனும் பாதிக்கப்படுகிறது. ஆதினால் பூமியின் உஷ்ணம் அதிகமாகிறது. அது இப்பொழுதே ஆரம்பித்து விட்டது. வெளி 8:12, 13.
மனந்திரும்பவில்லை – தேவ தண்டனையை தப்பிக்க மனந்திரும்புதல் அவசியம். மத் 3: 8, 11,12. 4:17.

வச 10- 11: ஐந்தாம் கலசம் - அந்திகிறிஸ்து பாதிக்கப்படுகிறான். யாத் 10: 20, 21.வெளி 9:1-12.
அந்திகிறிஸ்துவின் ஆட்சியில் குழப்பம் உண்டாகிறது. ஆகவே அவன் அற்புதங்களை நடப்பித்து உலக ராஜாக்களை ஏமாற்றி தன்வசம் திருப்பி கிறிஸ்துவிக்கு விரோதமாக கடைசி யுத்தத்திற்கு அர்மகெதோன் என்ற இடத்தில் கூட்டி சேர்க்கிறான்.

வச 12- 16: ஆறாம் கலசம்- கர்த்தர் ஐபிராத் நதியை வற்றிப்போகச்செய்து ஜாதிகளின் ராஜாக்கள் யுத்தத்திற்கு கூடிசேர பெரும்பாதையை உண்டாக்குகிறார்.தங்கள் அழிவைநோக்கி தாங்களே வருகிறார்கள். 
எச்சரிப்பின் சத்தம்- வாசிக்கிறவர்களுக்கு (வச 15)

பாட்டு 189- 2,1

வச 17- 21: ஏழாம் கலசம்- ‘ஆயிற்று’ என்ற சத்தம்.
• தேவ நியாயத்தீர்ப்பு மூன்று பிரிவுகள்மேல் செலுத்தப்பட்டு முடிகிறது.
1)எருசலேம் 2)புறஜாதிகள் 3) மகாபாபிலோன்.
• அந்திகிறிஸ்துவின் ஆட்சி அழிக்கப்பட்டு முடிகிறது.

Author: Rev. Dr. R. Samuel Topics: Tamil Reference Bible Revelation

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download