புதிய ஆலயத்தின் மகிமை (ஆகாய் 2:1-3)
கிமு 520 அக்டோபர் 17 அன்று தேவனின் வார்த்தை ஆகாய்க்கு உரைக்கப்பட்டது (ஆகாய் 2:1-9). அது ஒரு பண்டிகைக் காலமாக இருந்தபடியால் , அப்போது இஸ்ரவேலர்கள் பாவநிவாரண நாளையும் கூடாரப் பண்டிகையையும் கொண்டாடிக்கொண்டிருந்தனர் . ஆலயம் அழிக்கப்பட்டு 66 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகாய் ஜனங்களோடு பேசினார். சாலொமோனின் ஆலயத்தையம் அதன் பிரமாண்டத்தையும் பார்த்த சிலருக்கு அது சாத்தியமாக இருந்தது. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு அஸ்திவாரமாக வேலை தொடங்கியபோது, ஆசாரியர்கள், லேவியர்கள் மற்றும் முதியவர்கள் முதல் ஆலயத்தைப் பார்த்தவர்கள், மகா சத்தமிட்டு அழுதனர், உரத்த குரலில் கத்தினார்கள் என்று எஸ்றா எழுதியிருந்தார். ஆனாலும் சந்தோஷத்தின் சத்தம் என்னவென்றும் அழுகையின் சத்தம் என்னவென்றும் பகுத்தறியக் கூடாதிருந்தது என்று எழுதிருந்தார் (எஸ்றா 3:12-13).
"நல்ல பழைய நாட்கள்" என்ற மாயை எல்லா தலைமுறையின் காலங்களிலும் இருக்கும். வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு இடங்களில், பல்வேறு தலைமுறைகளுக்கு மத்தியில் தேவனின் பணியையும் ஒப்பிடுவது நியாயமற்றது மற்றும் தேவையற்றது. ஆகாயின் நாளில் மக்கள் சாலொமோனின் சாதனையைப் பற்றி ஒப்பிடுவது ஒரு உந்துதலாக இருக்காது.
உண்மையில், நம் அனைவருக்கும் பற்றாக்குறை மற்றும் சிறுமை உணர்வு உள்ளது. நாம் ஆராதிக்கிற தேவன் பெரிய தேவன். அவருடைய ராஜ்யம் பெரியது. அவருடைய வழிகள் பெரியவை. நமக்கு முன் இருந்தவர்கள் பயங்கரமாய் சாதித்துள்ளார்கள் என அப்பெரியவர்களைக் காண்பித்து சாத்தான் நம்மை தூண்டுவான். இவ்வாறு, நாம் தொடங்குவதற்கு முன்பே சாத்தான் துன்மார்க்கமாக நம்மை ஊக்கமிழக்கச் செய்து நம்மைத் தோற்கடிக்க முயற்சிக்கிறான்.
பணியைத் தொடர்தல் (ஆகாய் 2:4-5)
1. பலமாக இருக்க வேண்டும் : தலைவர்களையும் ஜனங்களையும் பலமாக இருக்கும்படி தேவன் கட்டளையிட்டார். அதாவது கர்த்தரிலும் அவர்களுக்கு உண்டான தேவனுடைய நோக்கத்திலும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதாகும் .
2. வேலையைச் செய்ய வேண்டும்: கர்த்தருடைய ஜனங்கள் பிரயாசப்பட்டு அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். மலையேறிச் சென்று கட்டுமானத்திற்காக தேவையான மரக்கட்டைகளைக் கொண்டு வர வேண்டும். எனவே இது ஒரு கடினமான வேலை.
3. பயப்படாமல் இருக்க வேண்டும்: கர்த்தர் உடன்படிக்கையின் தேவன். எனவே ஜனங்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்து வந்த தேவன் அதை நிறைவேற்ற அவர்களுடனே கூட இருக்கிறார்.
பெரும் மகிமை நிறைந்த தேவாலயம் (ஆகாய் 2:6-9)
சர்வவல்லமையுள்ள தேவன் , இந்த பூமியை மீண்டும் ஒரு முறை அசைக்க போகிறார் என்பதற்கு புதிய ஏற்பாட்டில் மேற்கோள் காட்டப்பட்ட ஆகாயின் ஒரே வசனம் இதுதான் (எபிரெயர் 12:26). தேவன் வரப்போகும் நியாயத்தீர்ப்பு நாளிற்கு ஏற்றவாறு இப்பொழுது இருக்கும் சூழ்நிலையை மாற்றுவார் .
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே , ஆகாய் மற்றும் எஸ்றாவின் நாட்களில் கட்டப்பட்ட ஆலயத்திற்கு மேசியா வருவார் என்று போதகர்களும் தீர்க்கத்தரிசிகளும் எதிர்பார்த்தனர். எனவே, சாலொமோன் கட்டிய ஆலயத்தைவிட இந்த ஆலயம் மகிமை வாய்ந்ததாக இருக்கும் என்று கருதினர் . இந்த தீர்க்கத்தரிசனத்தின் இரண்டாவது நடைமுறையாக , ஆயிர வருட அரசாட்சியின் போது அனைத்து நாடுகளும் தங்கள் பொக்கிஷங்களை ஆலயத்திற்கு கொண்டு வருவார்கள் என்று ஏசாயா 60:5ல் எழுதப்பட்டுள்ளது.
தேவன் சர்வலோகத்தின் தேவன் மேலும் அனைத்தையும் உண்டாக்கினவர் . எனவே, வெள்ளியும் பொன்னும் அவருடையது என்று தேவன் சொன்னார். "பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது" (சங்கீதம் 24:1). தேவனே எல்லாவற்றையும் உருவாக்கினார் என்பதை அறிந்துகொள்ளும் போது , நம்மையும் அதிக தாராளமாக கொடுக்கச் செய்கிறது.
மூன்றாம் தீர்க்கதரிசனம் (ஆகாய் 2:10-19) டிசம்பர் 18, கி.மு.520
1. ஆசாரியர்களுக்கு ஒரு கேள்வி
ஆகாய் ஆசாரியர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டார், அவர்கள் சரியாக பதிலளித்தனர். பரிசுத்த பலிகளையோ அல்லது உணவையோ வைத்திருக்கும் பாத்திரம் அல்லது துணி, அதில் உள்ளவைகளை புனிதமாக்கவோ அல்லது புனிதப்படுத்தவோ முடியாது. அதே நேரத்தில், ஒருவர் இறந்த உடலைத் தொட்டால், அவர் தீட்டுப்படுகிறார் என்று உள்ளது. ஆசாரியர்கள் இதை நன்கு புரிந்து கொண்டனர். இது மிகவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது: தொற்றுநோய் தூய்மையற்றதாகும், அதே சமயம் பரிசுத்தம் அப்படி இல்லை. உதாரணமாக, ஒரு ஆரோக்கியமான குழந்தை நோய்வாய்ப்பட்ட குழந்தையால் நோய்வாய்ப்படலாம், இருப்பினும், நோய்வாய்ப்பட்ட குழந்தை ஆரோக்கியமான குழந்தையிடமிருந்து ஆரோக்கியத்தைப் பெற முடியாது.
அதுபோல பரிசுத்த நகரத்தில் வசித்தாலோ அல்லது பரிசுத்த ஆலயத்திற்கு செல்வதாலோ பரிசுத்தமாக முடியாது. அங்கு உள்ள ஜனங்கள் தேவனுடைய வார்த்தையை நிராகரித்ததால் அவர்கள் பரிசுத்தமற்றவர்கள் ஆயினர். நாடு கடத்தப்படாமல் திரும்பியவர்கள், வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குத் திரும்பியதால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தையைப் படிக்காவிட்டாலும், புரிந்து கொள்ளாவிட்டாலும், கீழ்ப்படியாவிட்டாலும், தேவன் தங்களை ஆசீர்வதிப்பார் என்று நம்பினார்கள் .
தேவனின் வாக்குத்தத்தம் (ஆகாய் 2:15-19)
மக்கள் தண்டிக்கப்படும் செயல் அவர்களை தேவனிடம் கொண்டு வரவில்லை என்று ஆகாய் தீர்க்கதரிசி கூறினார். ஆனால் இப்போது அவர்கள் தேவனிடம் திரும்பியுள்ளனர். ஏனென்றால் அவர்கள் தங்கள் முன்னுரிமைகளை சரியான வரிசையில் வைத்ததால், தேவன் அவர்களை ஆசீர்வதிப்பார் என்று கூறினார்.
தேசங்களின் மீது ஆளுகை உள்ள தேவன் (ஆகாய் 2:20-22) (நான்காவது தீர்க்கதரிசனம் 18 டிசம்பர், கி.மு.520 )
ஜனங்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டு திரும்பியபோது, அவர்கள் முக்கியமற்றவர்களாக உணர்ந்தார்கள். ஏனென்றால் வலிமைமிக்க தேசங்களையும், பலமான அரசர்களையும், படைகளையும் சுற்றியிருப்பதைக் கண்டபோது, அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை உண்டானது. இப்போது தேவன் அனைத்து நாடுகளின் மீதும் அவருக்கு உள்ள ஆளுமையையும் அதிகாரத்தைப் பற்றியும் அவர்களுக்கு நினைவூட்டுவதற்காகப் பேசுகிறார். அவர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் என்றும், அவருடைய பொக்கிஷம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
செருபாபேலுக்கு ஒரு வாக்குறுதி (ஆகாய் 2:23)
செருபாபேலுக்கு முத்திரை மோதிரம் வழங்கப்படும் என்று தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டுள்ளது இது சிம்மாசனம் அல்லது கிரீடம் அல்லது செங்கோல் போன்ற அரச அதிகாரத்தின் அடையாளமாகும். மீட்பின் திட்டத்தில் இது ஒரு முக்கியமான தீர்க்கதரிசனம். அவர் மரியாள் மற்றும் யோசேப்பு ஆகிய இருவரின் வம்சாவளியில் இருப்பவர். மரியாள் மற்றும் யோசேப்பு ஆகிய இருவரின் வரிசையிலும் இருந்த கடைசி நபர் செருபாபேல் ஆவார். லூக்காவால் பதிவு செய்யப்பட்ட கர்த்தராகிய இயேசுவின் இரத்த வம்சாவளியை மரியாள் கொண்டிருந்தார் (லூக்கா 3:27). யோசேப்பு மூலம் கர்த்தராகிய இயேசுவின் பரம்பரையில் தாவீது ராஜாவின் சட்டப்பூர்வ வாரிசாக யோசேப்பு இருந்தார் (மத்தேயு 1:12).
செருபாபேலுக்கு சொல்லப்பட்ட வாக்குறுதி, வரவிருக்கும் மேசியாவைப் பற்றிய வாக்குறுதியாகும். ஆதாம், நோவா , ஆபிரகாம் , மோசே மற்றும் தாவீதின் உடன்படிக்கைகள் மூலம் தேவனுடைய மீட்பின் திட்டம் தேசத்தின் வரலாற்றில் வெளிப்படுகிறது. ஆமென்.
Author: Rev. Dr. J. N. Manokaran