ஆகாய் அதிகாரம் 1 நுட்பநோக்கு விளக்கவுரை

தேவன் தலைவர்களுடன் உரையாடுகிறார் (ஆகாய் 1:1)
தேவனுடைய வார்த்தை ஆகாய் தீர்க்கதரிசிக்கு உரைக்கப்பட்டது. இது யூத தேசத்தின் தலைவர்களுக்கு உரையாற்றப்பட்டது. யூதாவின் ஆளுநரான செயல்த்தியேலின் குமாரன் செருபாபேல் மற்றும் பிரதான ஆசாரியனாகிய யோத்சதாக்கின் குமாரன் யோசுவா ஆகியோருக்கும் கொடுக்கப்பட்டது. ஜனங்கள் மட்டுமல்ல, தலைவர்களும் தங்களைத் தாழ்த்தி, சிந்தித்து, மனந்திருந்த வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
சாக்குபோக்குகள்: இன்னும் நேரம் வரவில்லை
தேவனால் மக்களின் எண்ணங்களை மதிப்பிடவும், அவர்களின் அணுகுமுறையை அறிந்து கொள்ளவும், அவர்களின் ஏக்கங்களையும் முன்னுரிமைகளையும் புரிந்து கொள்ளவும் முடியும் (நீதிமொழிகள் 16:2). தேவனுக்கு ஜனங்களின் முணுமுணுப்புகளும் அதிருப்திகளும் தெரியும் (யாத்திராகமம் 6:5).
கி.மு. 520ம் ஆண்டு, நாடுகடத்தப்பட்டவர்கள் திரும்பி வந்து 18 ஆண்டுகளாக எருசலேமில் வாழ்ந்தனர். அந்த 18 ஆண்டுகளில், 14 ஆண்டுகளாக, தேவாலயம் கட்டும் திட்டம் கைவிடப்பட்டு, உதாசீனப்படுத்தப்பட்டது. எஸ்றா புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது போல் கட்டுமானத்தின் ஆரம்பம் மகிமையாக இருந்தது. லேவியர்கள் தங்கள் எக்காளங்களை ஊத, லேவியர்கள் கைத்தாளங்களுடன் தேவனைப் புகழ்ந்து பாடினர் (எஸ்றா 3:10-11). ஆனால் இரண்டு வருடங்களுக்குள் அவர்கள் சோர்வடைந்து, கவனம் இல்லாமல் போனார்கள், அவர்களால் எதிர்ப்பைத் தாங்க முடியவில்லை. இன்னும் நேரம் வரவில்லை என்று கூறி தங்கள் செயலற்ற தன்மையை நியாயப்படுத்தினர். ஆகாய் மக்களை சாக்குப்போக்கு சொல்லாமல், ஆலயம் கட்டும் பணியைத் தொடருமாறு ஊக்கப்படுத்தினார். இன்னும் சொல்லப்போனால் அந்த ஜனங்கள், தேவனைப் புறக்கணித்து, அவருடைய தேவைகள் மற்றும் முதன்மையானதைச் செய்து முடிக்காமல் அவர்கள் மீது சாபத்தைக் கொண்டு வர அவர்களே காரணமாய் இருந்தார்கள் .
1) பாழடைந்த நிலம்: 
எழுபது ஆண்டுகள் கைவிடப்பட்ட பிறகு பிறகு, வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம் வளமானதாகவோ அல்லது சாகுபடிக்கு ஏற்றதாகவோ இல்லை. மேலும் அங்கு நிறைய இடிபாடுகள் அகற்றப்பட்டதால், வீடுகள், திராட்சைத் தோட்டங்கள், சந்தை மற்றும் தேவாலயத்தை  மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் தேசத்து ஜனங்களின் ஆவிக்குரிய வாழ்வு என அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் .
2) கடின உழைப்பு: 
அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப கடினமாக உழைத்தனர். எனவே, அவர்கள் எல்லா நேரத்திலும் அந்த முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அவர்களின் கடின உழைப்பே அவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள உதவியது, எனவே அவர்களால் ஆலயத்தை கட்டி எழுப்பவும் ஆவிக்குரிய காரியங்களுக்கும் நேரத்தை செலவிட முடியாமல் தடையாய் இருந்தது.
3) பணம்: 
உண்மைதான், அவர்களிடம் போதுமான பணமும் இல்லை. ஏனென்றால் அவர்கள் சம்பாதித்ததெல்லாம் அவர்களுக்கு போதியதாக இல்லை, மாயமாய் மறைந்தது (ஆகாய் 1:6). தேவன் அதை ஆசீர்வதிக்காததால் அது மறைந்து போனது (பற்றாக்குறையானது) .
4) மனித வளம்: 
அனைவரும் தங்கள் வீடுகள், குடும்பங்கள் வயல்களை மற்றும் வியாபாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால், தேவனுடைய ஆலயம் கட்டும் பணியில் ஈடுபட அவர்களுக்கு நேரம் இல்லை. அது முக்கியமான வேலையாக இருந்தாலும் கூட அந்த வேலையைச் செய்ய யாரும் முன்வரவில்லை.
5) விளைச்சலில் தோல்விகள்: 
அவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தபோது, வறட்சி மற்றும் பயிர் இழப்புகள் வந்தன (ஆகாய் 1:10-11). எனவே தேவனுடைய ஆலயத்தைக் கட்டுமளவு தாராளமான காணிக்கை என எதுவும் அவர்களிடம் இல்லை.
6) எதிரிகள்: 
ஆலயம் கட்டுவதற்கு எதிராக பலர் கிளம்பி அதை கட்ட விடாமல் தடுத்தனர், மேலும் அவர்கள் அவர்களை அச்சுறுத்தினர், துன்புறுத்தினர், மிரட்டி எதிர்ப்பை தெரிவித்தனர் (எஸ்றா 4:1-5).
7) தேவனின் விருப்பம்: தேவனுடைய நேரமும் வேளையும் வரவில்லை என்று அவர்கள் உறுதியாக இருப்பது போல் காண்பித்தனர். அதாவது தாங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் வல்லவர்கள் போல ஒரு பிம்பத்தைக் கொடுத்தனர். 
8) தவறான கணக்கீடு: 
பாபிலோனியர்களால் சுமார் எழுபது ஆண்டுகள் நாடுகடத்தப்பட்டு இருப்பார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசனம் கூறினார். அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு மூன்று தொகுதிகளாக நாடு கடத்தப்பட்டனர்: கி.மு 605, கி.மு. 597 மற்றும் கி.மு. 587 ஆகும் . தானியேல் விசுவாசத்தில், சிறைப்பிடிக்கப்பட்ட ஆண்டுகளைத் தீர்மானிக்க ஆரம்பப் புள்ளியாக ஆரம்ப ஆண்டைக் கருதினார். (தானியேல் 9) ஆனால், இவர்கள் நாடுகடத்தப்பட்ட இறுதியாண்டை எடுத்து 69வது ஆண்டாகக் கணக்கிட்டு இன்னும் காலம் வரவில்லை என்று கூறினர். இன்னும் ஒரு வருடம் கூட அவர்கள் காத்திருந்திருக்கலாம் ஆனால் இது வாக்கு பண்ணப்பட்ட நிலத்தை உளவு பார்க்கச் சென்ற பத்து உளவாளிகள் செய்ததைப் போன்ற நம்பிக்கையற்ற செயலாக இருந்தது. (எண்ணாகமம் 13)
தவறான முன்னுரிமைகள் (ஆகாய் 1:3-4)
எருசலேமில் இருக்கின்ற ஆலயம் சாலொமோன் அரசனால் கட்டப்பட்டதாகும். அது ஒரு கம்பீரமான மற்றும் பிரம்மாண்டமான ஆலயமாக இருந்தது. இப்போது அது பாழடைந்த நிலையில் இருக்கின்றது. இருப்பினும், இஸ்ரவேலர் அதைப் பற்றி கவலைப்படவில்லை. ஆலயம் சிதிலமடைந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் வசதியாகவும் ஆடம்பரமாகவும் வாழ்ந்தனர். தவறான முன்னுரிமைகள் காரணமாக அவர்கள் ஆலயத்தை இடிபாடுகளில் இருக்க அப்படியே விட்டுவிட்டனர், அதே நேரத்தில் அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தினர். அங்கு பல வீடுகளைக் கொண்ட பணக்கார யூதர்கள் இருந்தனர். ஒன்று நகரத்திலும் மற்றொன்று கிராமப்புறத்திலும் அவர்களுக்கு வீடுகள் இருந்தும் தேவனுடைய ஆலய பணிக்கு பணம் கொடுக்க முன்வரவில்லை.
உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள் (ஆகாய் 1:5-6)
ஆகாய் ஜனங்களை தங்கள் செயல்கள் குறித்து பரிசீலிக்கவும், சுய மதிப்பீடு செய்யவும் சொல்கிறார். அவர்கள் விதைகளை விதைக்கின்றனர், ஆனால் அவர்கள் வழக்கத்தை விட குறைவாகவே அறுவடை செய்தனர். அவர்கள் வீட்டிற்கு கொண்டு வந்த போது கூட, அவர்களுக்கு அது திருப்தி அளிக்கவில்லை . அவர்கள் சாப்பிட்டாலும் குடித்தாலும் நிறைவாகவோ அல்லது திருப்தியாகவோ அவர்களுக்கு இல்லை. அவர்கள் தேவைகளுக்கு வேண்டிய உடைகள் போதுமானதாகவும் வசதியாகவும் இல்லை. அவர்களுடைய நிதிநிலைமை ஓட்டைகள் கொண்ட பையில் நாணயங்களை வைத்ததுபோல் இருந்தது. அது மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி இருந்தது (உபாகமம் 11:16-17) பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால், அவர்கள் தேவனால் தண்டிக்கப்பட்டு நியாயந்தீர்க்கப்படுகிறார்கள் என்பதை இஸ்ரவேல் ஜனங்கள் அறியாமல் இருந்தனர்.
ஆலயத்தை மீண்டும் கட்ட அழைப்பு விடுத்தல் (ஆகாய் 1:7-11)
அவர்கள் தங்கள் வாழ்க்கையை கவனிக்க வேண்டும், அதில் உள்ள தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும். தேவனுடைய மக்கள் அவருடைய பணியைச் செய்ய அழைக்கப்படுகிறார்கள். ‘மலைகளுக்குப் போய் விறகு கொண்டு வாருங்கள்.’ என்று தேவன் சொன்னார் . அவர்களால் அதை நடைமுறை படுத்த முடியாது. ஆனால் தேவனால் அதைச் செய்ய முடியும் அவர் செய்வார் .பெரும்பாலும் நம்முடைய சொந்த வேலைக்காக நாம் ஆர்வமுடன் பங்கேற்பதை அவர் விரும்புகிறார். அவர்களின் வாழ்க்கை தேவனைப் பிரியப்படுத்த மறுசீரமைக்கப்பட வேண்டும். ஆலயம் கட்டுவது மட்டும் வேலை இல்லை, முழு இதயத்துடனும் மகிழ்ச்சியான இதயத்துடனும் அவர்கள் தேவனுடைய மற்றும் அவர்களுடைய பணியைச் செய்ய வேண்டும் என்பதே தேவனுடைய திட்டம்.
தேவன் மக்களால் புறக்கணிக்கப்பட்டபோது, அவர்களால் அதிகம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் தங்கள் வீடுகளைக் கட்டினார்கள், ஆனால் அதை அனுபவிக்க முடியவில்லை. அவர்களுக்கு தானியம், திராட்சைரசம் மற்றும் எண்ணெய் ஆகியவற்றைக் கொடுத்த அவர்களின் அடிப்படை பயிர்கள் மூலம் அவர்கள் ஆசீர்வதிக்கப்படவில்லை.
ஜனங்களின் கீழ்ப்படிதல்
தலைவர்களான செயல்த்தியேலின் மகன் செருபாபேலும், பிரதான ஆசாரியனாகிய யோத்சதாக்கின் மகன் யோசுவாவும் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நடந்துகொண்டார்கள். எஞ்சியிருந்த ஜனங்கள் ஆகாய் சொன்ன கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தார்கள். அவர்கள் தேவனின் பிரசன்னத்தையும் கண்டு அஞ்சினர். அவர்கள் தேவனின் அதிகாரத்தை மற்றவர்கள் புறக்கணித்ததுபோல் செய்யாமல் ஏற்றுக்கொண்டார்கள், எனவே அவர்கள் தேவன் அனுப்பிய தூதரையும் அவருடைய செய்தியையும் ஏற்றுக்கொண்டார்கள்.
தேவனின் வாக்குறுதி (ஆகாய் 1:13-15)
தேவன் அவர்களுடன் இருப்பதாக உறுதியளித்தார். அவர்களை ஊக்கப்படுத்தவும், வலுவூட்டவும், பயிற்றுவிக்கவும் , பலப்படுத்தவும் அவர் அவர்களோடு கூடவே இருப்பேன் என்றார். தேவன் அவர்களின் இதயங்களைத் தொட்டார் மேலும் தலைவர்கள் முதல் எஞ்சியவர்கள் வரை உள்ள ஜனங்களின் இதயங்களையும் தொட்டார். எனவே, அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்து வேலைகளைச் செய்தனர்.

Author: Rev. Dr. J. N. Manokaran



Topics: Rev. Dr. J .N. மனோகரன் Tamil Reference Bible Haggai

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download