வெளிப்படுத்தின விசேஷம் 15- விளக்கவுரை

அதிகாரம்- 15
அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி - இரண்டாம் 3 ½   வருடம்

பின்புஇ வானத்திலே…கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன். (வச 1)

அந்திக் கிறிஸ்துவின் இரண்டாம் 3 ½ வருட காலக்கட்டத்தில் மகாஉபத்திரவ காலம் என்றழைக்கப்படும் பகுதியில் பூமியில் தேவ கோபாக்கினை ஊற்ற ஏழு தூதர்கள் ஆயத்தமாயிருக்கிறார்கள்.
அந்தி கிறிஸ்து ஆட்சியின் முதல் 3 ½ வருட காலக் கட்டத்தில் இரத்த சாட்சியாக மரித்தவர்கள் உயிர்த்து பரலோகத்தில் காணப்படுகிறார்கள்.

அந்திக் கிறிஸ்துவின் ஆட்சிகாலத்தில் இந்த பூமியில் சம்பவிப்பவை வெளிப்படுத்தல் புத்தகத்தில் இரண்டுமுறை எழுதப்பட்டுள்ளது. அதிகாரங்கள்  6 முதல் 11 வரையும்இ 13 முதல் 19 வரையும் இரண்டு கோணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இச்சம்பவங்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன. (2 கொரி 13: 1)

வச 1: அந்திக் கிறிஸ்துவின் இரண்டாம் 3 ½ வருட காலக்கட்டமாகிய மகாஉபத்திரவ காலத்தில் பூமியில் கடைசி தேவ கோக்கினையாக இறுதியான ஏழு வாதைகளை அனுப்ப 7 தூதர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள். இதைக்குறித்து வெளி 11: 18 இல் முன்குறித்து எழுதப்பட்டதை வாசிக்கலாம்.
• தேவனுடைய இறுதி நியாயத்தீர்ப்பு – சங் 37: 38
• தேவனுடைய பலமான ஆக்கினை - நீதி 23: 18
இந்த வசனங்களும் தேவனுடைய நியாயத்தீர்ப்பு திட்டங்களை தீர்க்கதரிசனமாக உரைத்துள்ளன. 
          
வச 2- 4: அந்தி கிறிஸ்துவின் முதல் 3 ½  வருட அராஜக ஆட்சியில் அந்திகிறிஸ்துவின் முத்திரையை பெறாமல் தங்களுடைய சாட்சியினிமித்தம்; இரத்தசாட்சிகளாய் கொல்லப்பட்டவர்கள் உயிர்த்து பரலோகத்தில் காணப்படுகிறார்கள். ஜெயங்கொண்ட கிறிஸ்தவர்களாய் வாழ்ந்து மரித்தவர்கள் கர்த்தருடைய இரகசிய வருகையில் முதல் வரிசையில் உயிர்த்தவர்களாகவும்இ அந்திகிறிஸ்துவுக்கு எதிர்த்து நின்று இரத்தசாட்சிகள் இரண்டாம் வரிசையில் உயிர்த்தெழுந்தவர்களாகவும் எண்ணப்படுவார்கள். வெளி 4: 6 
இந்த இரத்த சாட்சிகள் பரலோகத்தில் பலிபீடத்திற்கு கீழேயிருந்து ஏறெடுத்த ஜெபங்களுக்கு இங்கே தேவன் பதில் கொடுத்தார் என்று அறிந்துகொள்ளலாம். வெளி 6: 10.
இவ்விதமாக உயிர்த்தெழுந்த பரிசு;தவான்கள் சிங்காசனத்திற்கு முன்பாக சுரமண்டலங்கள் தொனிக்கப்பாடுகிறார்கள். அவர்கள் மோசேயின் பாட்டைப் பாடுவதன்மூலம் நியாயப்பிரமாண கட்டளைகளுக்கு உண்மையுள்ளவர்களாகவும் ஆட்டுக்குட்டியானவரின் பாட்டைப்பாடுவதன்மூலம் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே கிருபையால் இரட்சிக்கப்பட்டவர்கள் என்பதும் அற்த்தமாகிறது. மத்தேயு 5: 17எபேசியர் 2: 5
அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிகாலம் 7 வருடங்கள் என்று தேவன் குறுகியகாலமாக அனுமதித்ததினிமித்தம் பலரும் இரட்சிக்கப்பட சாத்தியமாயிற்று. மத்தேயு 24: 22
முடிவாக தேவன் செய்யப்போகும் நியாயத்தீர்ப்புஇ நீதியை நினைத்து ‘இப்படிப்பட்ட தேவனுக்கு யார் பயப்படாமல் இருக்க முடியும்’ என்றும் பாடுகிறார்கள். சகரியா 12: 9, 14: 16  சங்கீதம்;  8: 3,4.  66: 3,4

வச 5- 7: பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்படுகிறது. வெளி 11: 19
• இது பழைய ஏற்பாட்டு சாட்சியின் கூடாரம் போன்றது – யாத் 25: 816
• இங்கிருந்துதான் கடைசி 7 வாதைகள் பூமிக்கு அனுப்பப்படும்.
• கிருபையை ஏற்றுக்கொள்ளாதவர்கள்மேல் நியாயப்பிரமாணத்தின் தீர்ப்பு செலுத்தப்படும்.

வச 8 : தேவனுடைய ஆலயம் மகிமையால் நிறைந்திருந்தது.
• வல்லமையும் நீதியும் நிறைNறுவதால் மகிமையின் புகையால் ஆலயம் நிரம்பிற்று. யாத் 40: 35ஏசாயா 6: 4, எசேக் 44: 4
• தேவகோபாக்கினை செலுத்தப்பட்டு முடிந்தபிறகுதான் அடுத்து உயிர்த்தெழுதல் பெறுவோர் ஆலயத்தில் பிரவேசிக்க முடியும்.

 

Author: Rev. Dr. R. Samuel 


வெளிப்படுத்தின விசேஷம் 15- விளக்கவுரை

மோசேயின் பாட்டும் ஆட்டுக்குட்டியானவரின் பாட்டும்

இந்த அதிகாரம்தான் வெளிப்படுத்தலிலேயே மிகச்சிறிய அதிகாரம், 6ம் அதிகாரத்தில் ஆரம்பித்த தேவ கோபத்தினாலுண்டான 7 முத்திரைகளின் நியாயத்தீர்ப்பும், 7 தூதர்களின் எக்காள நியாயத்தீர்ப்பும் முடிந்தன. தேவனுடைய உக்கிர கோபமும், 7 கலச நியாயத் தீர்ப்பும் 16ம் அதிகாரத்தில் முடிவு பெறுகின்றன, ஆகவே இந்த 15ம் அதிகாரம் 7 கலச நியாயத்தீர்ப்பிற்கு ஒரு முன்னுரையாகவுள்ளது.

ஆதிகால முதல் தேவன் தம்முடைய கோபத்தை பாவம் செய்தவர்கள் மேல் ஊற்றி நியாயந்தீர்த்திருக்கிறார். பாவம் செய்த ஆதாமையும், ஏவாளையும் ஏதேனை விட்டுத் துரத்தினார். நோவாவின் காலத்தில் அக்கிரமம் பெருகினதால், நோவா குடும்பம் தவிர மற்றவர்களை வெள்ளத்தால் நியாயந்தீர்த்தார்.

பாபேலில் பாஷைகளை தாறுமாறாக்கி நியாயந்தீர்த்தார். சோதோம் கொமோராவை அக்கினியினாலும், கந்தகத்தினாலும் அழித்தார். தொடர்ந்து நூற்றாண்டுகளாக தேவ கட்டளைகளை மீறி விக்கிரகங்களை வணங்கின இஸ்ரவேலை (10 கோத்திரங்களை) கிமு.722ல் அசிரியனைக் கொண்டு அழித்தார், பாவம் செய்த யூதாவை, கிமு 586ல் பாபிலோனுக்கு அடிமையாக்கி நியாயந்தீர்த்தார்,

இந்த 15ம் அதிகாரம் துன்ப காலத்தின் நடுவிலிருந்து மூன்றரை ஆண்டுகளுக்கு (3 1/2) அதாவது அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி முடிவடையும் வரையுள்ள கொடுந்துன்ப காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களைச் சுட்டிக்காட்டுகிறது.

இந்த ஏழு தூதர்களும் தேவனுடைய உக்கிர கோபத்தால் நிறைந்த கலசங்களின் நியாயத் தீர்ப்பைப் பூமியிலுள்ளவர்கள் மேல் ஊற்ற ஆயத்தமானார்கள். இந்த ஏழு வாதைகளும் முடியும் வரை ஒருவரும் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கக் கூடாதிருந்தது "எந்தப் பரிசுத்தவானின் ஜெபம் கூட உட்பிரவேசியாதபடி தேவன் தம்மை மறைத்துக் கொண்டார். (சிலர் நியாயத்தீர்ப்பு வேளையில் தேவனுடைய இரக்கத்திற்காக மன்றாடினால் தேவன் இரக்கப்பட்டு மோட்சத்திற்குள் சேர்த்துக் கொள்வார் என்று நினைக்கிறார்கள். அது நடவாத காரியம் என்பதை இந்த வசனம் தெளிவாகச் சொல்லுகிறது. ஆகையால் சகோதரனே! இப்பொழுதே ஜெபம் பண்ணி இரக்கத்தைப் பெற்றுக்கொள். மரணம் ஒரு நியாயத்தீர்ப்பு. அது பாவத்தின் சம்பளம்... மரித்துப்போன ஒருவருக்காக ஜெபிப்பதில் ஒரு பயனுமில்லை. மரித்த எந்தப் பரிசுத்தவானும் இன்னொருவனுக்காக ஜெபிக்கவும் முடியாது)

இந்த ஏழு (7) என்பது முடிவைக் காட்டுகிறது. பூமியின் 3ல் ஊற்றப்படுகிறவாதைகளும், நியாயத்தீர்ப்புகளும் முடிந்துபோயிற்று என்பதைக் காட்டுகிறது. சாத்தானின் கோபத்தினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ என்றாலும் அதைவிட ஜீவனுள்ள தேவனின் கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே! ஆனால் இந்த நேரத்தில் விசுவாசிகள் களிகூறுவார்கள், ஏனெனில் அவர்கள் பரலோகத்தில் இருப்பார்கள்!

வ1 பின்பு வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக்கண்டேன். அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது,

இந்த ஏழு தூதர்களும் தங்கள் கலசங்களிலுள்ள தேவ கோபத்தை மற்றி நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் பொழுது, அத்திக்கிறிஸ்துவின் ஆட்சி முடிந்துபோம், கொடுந்துன்பக் காலமும் முடிந்துபோம், அந்திக்கிறிஸ்துவையும், மிருகத்தையும் வணங்கினவர்கள் மேலுள்ள தேவ கோபம் முடிவடைகிறது.

வ2 அன்றியும், அக்கினி கலந்த கண்ணாடிக்கடல் போன்ற கடலையும், மிருகத்திற்கும், அதின் சொரூபத்திற்கும், அதின் முத்திரைக்கும், அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக் கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்.

வெளி.4:6ல் உள்ள அதே பளிங்கு போன்ற கண்ணாடிக் கடலைத்தான் யோவான் இங்கேயும் காண்கிறான்... ஆனால் ஒரு வித்தியாசம்; இந்தக் கடலில் அக்கினி கலந்திருந்தது. அதாவது, தேவனுடைய கோபத்தைப் பிரதிபலித்தது. அதனருகே நின்றவர்கள் வெற்றி கீதம் பாடினார்கள். பூமியிலுள்ளவர்களோ இவர்களைக் கொன்று அந்திக்கிறிஸ்து ஜெயமடைந்தான் என்று நினைத்தார்கள். உண்மை என்னவென்றால், அந்திக்கிறிஸ்துவின் முத்திரையைத் தரியாமல் தங்கள் மரணத்தினால் அவனை ஜெயித்தார்கள்., 1 கொரி. 15:54ல் மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிறபடி இவர்கள் ஜெயம் பெற்று பாடினார்கள்.

வ3 என்ன பாடினார்கள்? மோசேயின் பாட்டையும், ஆட்டுக்குட்டியானவரின் பாட்டையும் பாடினார்கள். மோசே செங்கடலைப் பிளந்து அதன் வழியாக இஸ்ரவேலை நடத்திச் சென்றபொழுது, பார்வோன் மேலும், அவன் சேனைகள் மேலும் வெற்றி பெற்று யாத்திராகமம் 15ம் அதிகாரத்தில் அந்த வெற்றி யைக் கொண்டாடி செங்கடலருகே பாடினார்கள். இவர்களோ அந்தக்கிறிஸ்துவின் மேல் வெற்றி பெற்று கண்ணாடிக் கடலருகே நின்று பாடினார்கள். பார்வோனை வென்ற மோசேயின் பாட்டையும், சாத்தானை ஜெயித்த ஆட்டுக்குட்டியானவரின் பாட்டையும் பாடினார்கள். இரண்டுமே வெற்றிப்பாடல்கள். இரண்டிற்கும் பல ஒற்றுமைகளுண்டு.

மோசேயின் பாடல் : இது வேதாகமத்தில் யாத்திராகமம் 15ம் அதிகாரத்திலுள்ளது.

யாத், 15:1-19 வரையுள்ளதைப்பாடினார்கள். தேவனைப் புகழ்ந்து பாடினார்கள். கர்த்தாவே, தேவர்களில் உமக்கொப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறதில் உமக்குப்பானவர் யார்? கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரீகம் பண்ணுவார் என்று பாடினார்கள்.

ஆட்டுக்குட்டியானவரின் பாட்டு வெளி. 5:9-10, 15:3-4

தேவரீர் புத்தகத்தை வாங்கவும், அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும் ஜனங்களிலும், ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள். மேலும் சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள், பரிசுத்தவான்௧களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள் கர்த்தாவே யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர். எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாக வந்து தொழுது கொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின (வெளி.15:3-4) என்றார்கள். 

1. மோசேயின் பாடல்: பூமியில் செங்கடலோரத்தில் பாடியது                                       
ஆட்டுக்குட்டியானவரின் பாடல்: பரலோகத்தில் பளிங்குக் கடலோரத்தில் பாடியது

2. மோசேயின் பாடல்: எகிப்தின் மேலடைந்த வெற்றியைப் பாடியது                                                                  ஆட்டுக்குட்டியானவரின் பாடல்: பாபிலோனின் மேலடைந்த வெற்றியைப் பாடியது

3. மோசேயின் பாடல்: பார்வோனின் சேனைகளை அழித்ததினால் பாடியது                                                     ஆட்டுக்குட்டியானவரின் பாடல்: சாத்தானின் சேனைகளை அழித்ததினால் பாடியது.   

4. மோசேயின் பாடல்: எகிப்திலிருந்து இஸ்ரவேலரை தேவன் வெளியே கொண்டு வந்ததினால் பாடியது ஆட்டுக்குட்டியானவரின் பாடல்: விசுவாசிகளை தேவன் பூமியிலிருந்து பரலோகத்திற்குள் கொண்டு வந்ததினால் பாடியது

5. மோசேயின் பாடல்: மோசேயின் பாட்டே வேதாகமத்தில் முதல் பாட்டு                                                        ஆட்டுக்குட்டியானவரின் பாடல்: ஆட்டுக்குட்டியானவரின் பாட்டே வேதாகமத்தில் கடைசி பாட்டு

6. மோசேயின் பாடல்: மீட்கப்பட்டவர்கள் பாடியது                                                                                                   ஆட்டுக்குட்டியானவரின் பாடல்: மத்திய ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டவர்கள் பாடியது.

வ5: இவைகளுக்குப்பின்பு நான் பார்த்த போது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது. பரலோகம் நிரந்தரமானது, அதில் ஒன்றும் மாறுவதுமில்லை, ஒழிந்து போவதுமில்லை. இந்த வசனத்தில் தேவாலயம் திறக்கப்பட்டது என்றிருக்கிறது. ஆனால் வெளி, 21:22ல் “அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும், ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்” என்றுள்ளது. அப்படியானால் இந்த ஆலயமென்பது என்ன? அது தேவனுடைய வல்லமையுள்ள பிரசன்னமேயொழிய வேறில்லை.

லூக்கா 1:18,19ஐ வாசித்துப் பாருங்கள், சகரியா காபிரியேல் தூதனின் வாக்கை சந்தேகித்த பொழுது காபிரியேல் சகரியாவை நோக்கி, “நான் தேவ சந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும் உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்” என்றான், பரலோகத்தில் எல்லாருமே தேவ சந்நிதியில் தான் இருக்கிறார்கள். தேவனுடைய கட்டளையில்லாமல் ஒருவனும் ஒன்றும் செய்வதில்லை. தேவ சந்நிதி பரிசுத்தமானது என்பதையே ஆலயம் குறிக்கிறது.

வ6 தேவனிடமிருந்து கட்டளை பெற்ற பின்னரே இந்த ஏழு தூதர்களும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்து (நியாயத்தீர்ப்பு செய்யுமுன் தேவ நீதியைத் தரித்துக் கொண்டவர்களாய்ப் புறப்பட்டார்கள்), மார்பருகே பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு (ராஜ அதிகாரத்தோடு) புறப்பட்டார்கள்.

வ7: தேவநீதியும், அதிகாரமும் பெற்ற பின்னரே பற்பல வாதைகள் நிறைந்த கலசங்கள் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது . இதுவே நியாயத்தீர்ப்பு செய்வதற்கான தகுதி. பரலோக தூதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

வ8: அப்பொழுது தேவனுடைய மகிமையினாலும், அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவாலயம் நிறைந்தது. அதாவது தேவனுடைய பூரண மகிமையும், வல்லமையும் வெளிப்பட்டது. நிறைவு என்பதற்கு பூரணம் என்று பொருள், “ஒருவரும் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கக் கூடாதிருந்தது' எப்படி பத்துக் கற்பனைகள் கொடுக்கப்படும் பொழுது மோசக்குக் கட்டளையிட்டாரோ யாத். 19:24 கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம் பண்ணாதபடிக்கு, எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதிருக்கக் கடவர்கள் என்றார். யாத்.40:15ல் மேகம் அதின் மேல் தங்கி கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், மோசே ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கக் கூடாமலிருந்தது. இதே காரியத்தை சாலமோன் ஆலயத்தை பிரதிஷ்டை பண்ணும்போதும் பார்க்கிறோம். 1 ரா. 8:1 அப்படியே நியாயத்தீர்ப்பின் போதும் செய்தார். நியாயத் தீர்ப்பின் போது எந்த பரிந்து பேசுதலும், ஜெபமும் உதவாது. இவையிரண்டும் திருபையின் காலத்தில் தான் பயன்படும், ஆகவே காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்வோம்.

Author: Rev. S.C. Edison



Topics: Tamil Reference Bible Revelation bible study Tamil Reference Bible Revelation

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download