மத்தேயு 25:1-13

25:1 அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.
25:2 அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.
25:3 புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.
25:4 புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.
25:5 மணவாளன் வரத் தாமதித்தபோது அவர்கள் எல்லாரும் நித்திரைήயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.
25:6 நடுராத்திரியிலே: இதோ மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப்புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.
25:7 அப்பொழுது அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.
25:8 புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.
25:9 புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.
25:10 அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.
25:11 பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.
25:12 அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25:13 மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.




Related Topics



விழித்திருந்தாலும் ஆயத்தமாக இல்லையே!-Rev. Dr. J .N. மனோகரன்

"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன்,...
Read More




நேர காரணி-Rev. Dr. J .N. மனோகரன்

"ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு" (பிரசங்கி 3:1) என்பதைக் குறித்து ஞானி...
Read More




பாரத்தை ஒதுக்கி வையுங்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

இது நல்ல தெரிவுகளை தேர்ந்தெடுங்கள் என்பது பற்றியது மட்டுமல்ல, நமது ஆவிக்குரிய வாழ்க்கை, ஊழியம் மற்றும் தேவன் கொடுத்த நோக்கம் ஆகியவற்றைத் தடுக்காத...
Read More




ஆயத்தமின்மை-Rev. Dr. J .N. மனோகரன்

திட்டமிட தவறுகிறவர்கள், தோல்வியடைய ஆயத்தமாகிறார்கள். அதாவது சரியான ஆயத்தமின்மை தோல்வியில் அல்லது முட்டாள்தனத்தில் முடிவடையும்.  ஐந்து முட்டாள்...
Read More




தூக்கம் அவசியமானதா?-Rev. Dr. J .N. மனோகரன்

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், தூக்கம் சோம்பேறித்தனமானது மற்றும் தேவையற்றது என்று தான் நினைத்ததாகக் கூறினார்.  தனது 30...
Read More




உபரியும் தட்டுப்பாடும் -Rev. Dr. J .N. மனோகரன்

"பற்றாக்குறையை விட உபரியை நிர்வகிப்பது எளிதானது என்பதால், உபரி இருப்பது நல்லது” என்பதாக ஒரு ஞானி கூறினார். ஆம், உபரியைக் கொண்டிருக்கும் போது,...
Read More



அப்பொழுது , பரலோகராஜ்யம் , தங்கள் , தீவட்டிகளைப் , பிடித்துக்கொண்டு , மணவாளனுக்கு , எதிர்கொண்டுபோகப் , புறப்பட்ட , பத்துக் , கன்னிகைகளுக்கு , ஒப்பாயிருக்கும் , மத்தேயு 25:1 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 25 TAMIL BIBLE , மத்தேயு 25 IN TAMIL , மத்தேயு 25 1 IN TAMIL , மத்தேயு 25 1 IN TAMIL BIBLE , மத்தேயு 25 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 25 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 25 TAMIL BIBLE , Matthew 25 IN TAMIL , Matthew 25 1 IN TAMIL , Matthew 25 1 IN TAMIL BIBLE . Matthew 25 IN ENGLISH ,