விமான நிலையத்தில் உள்ள ஒதுக்கப்பட்ட உறவிடம் அருகே, உதவியாளர் ஒருவர் புலம்பிக்கொண்டிருந்தார். “இவர் ஒரு கோடீஸ்வரர். விமான நிலையத்திற்குள் நுழைவது முதல் அவர் விமானம் ஏறும் வரை சேவையை அவர் கோருகிறார். ஆனால் தெருக் கடையில் இருந்து ஒரு கோப்பை தேநீர் கூட வாங்க முடியாதளவு சில்லறைக் காசுகளை அவர் விட்டுச் செல்கிறார்”. இது ஒரு பிச்சைக்கார மனப்பான்மை. ஆனால் வேதாகமம் கற்பிக்கிறது; “அவன் ஏழைகளுக்கு இலவசமாகப் பொருள்களைக் கொடுக்கிறான். அவனது நன்மை என்றென்றைக்கும் தொடரும்” (சங்கீதம் 112:9).
உடைமைகள்:
ஒரு குரங்கு ஒரு ஜாடியில் பாதாம் கொட்டைகளைப் பார்த்தது. அது தன் கையை உள்ளே வைத்து எவ்வளவு தன்னால் எடுக்க முடியுமோ அவ்வளவையும் பிடித்தது ஆனால் கையை வெளியே இழுக்க முடியவில்லை. அது ஒன்று அல்லது இரண்டு பாதாம் கொட்டைகளை எடுத்தால், கையை வெளியே எடுக்கலாம். ஆனால் குரங்கு முழுவதையும் விரும்பியது. அதே போல்தான், பணக்காரர்கள் முடிந்தவரை கைப்பற்ற விரும்புகிறார்கள், ஆனால் அந்த செயல்பாட்டில் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்து, ஆஸ்தி என பிரிய முடியாமல், கர்த்தருடைய இரண்டாம் வருகையில் மக்கள் பின்தங்கியிருக்கும் நிலை ஏற்படலாம். ஆம், லோத்தின் மனைவியை நினைவில் வைக்க வேண்டியது மிக மிக அவசியம் (லூக்கா 17:32).
முன்னுரிமையில் ஒரு பெருமை:
சிலர் பணக்காரர்களாகவோ அல்லது உயர் வகுப்பினர் அல்லது சாதியைக் குறித்தோ அதில் தங்கள் பாக்கியத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, ஆஸ்தி தேவன் கொடுத்த பாக்கியம், கௌரவம், செழிப்பு; அதை அனுபவிக்க வேண்டும், அதை ஏழைகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறார்கள்.
இறுக்கமான கைகள்:
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும், இந்த தேசத்தில் உங்களில் யாராவது ஒருவன் ஏழை எளியவனாக இருந்தால், அவர்கள் மத்தியில் நீங்கள் யாரும் சுயநலமுள்ளவர்களாக இருந்துவிடக்கூடாது. நீங்கள் அந்த ஏழை எளியவனுக்குக் கைகொடுத்து உதவ மறுத்துவிடக் கூடாது (உபாகமம் 15:7) என்பதாக தான் வேதாகமம் போதிக்கிறது. சிலாக்கியத்தின் அல்லது முன்னுரிமையின் பெருமை, ஒரு நபரின் அகங்காரத்தை அதிகரிக்கிறது, இது சுயநலத்தில் விளைகிறது. அது அவர்களை மற்றவர்களிடம், குறிப்பாக ஏழைகளிடம் கடின இதயம் கொண்டவர்களாக ஆக்குகிறது.
விற்றுக் கொடுங்கள்:
பணக்காரன் தன்னிடம் இருந்த செல்வத்தை விற்று, ஏழைகளுக்குப் பங்கிட்டு, பின் சிலுவையை எடுத்துக்கொண்டு தம்மைப் பின்பற்றும்படி கர்த்தரால் அறிவுறுத்தப்பட்டான் (மத்தேயு 19:21). ஒருவேளை, சொத்துக்களை விற்க அவர் தயாராக இருந்திருக்கலாம், ஆனால் ஏழைகளுடன் பகிர்ந்து கொள்வதில் சிரமம் இருந்திருக்கலாம். பணக்காரர்கள் செல்வத்திற்கும் ஆஸ்திக்கும் தகுதியானவர்கள், ஏழைகள் அதற்குத் தகுதியற்றவர்கள் என்று நினைக்கிறார்கள். ஏழைகளுக்கு கொடுப்பது என்பது தகுதியற்றவர்களுக்கு கொடுப்பது போலவும், அதிலும் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததையும் பரம்பரைச் சொத்தையும் ஏன் கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள் போல.
ஆவிக்குரிய மனப்பான்மை:
"நீங்கள் மனந்திரும்புங்கள், உங்கள் பணப்பையும் மனம் திரும்பட்டும்" என்பதாக ஒரு பிரசங்கியார் சொன்னார்.
ஏழைகளிடம் தாராளமாக இருப்பது ஆவிக்குரிய மனப்பான்மை என்பதை நான் உணர்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்