ஒரு கோடீஸ்வரனின் மகனுக்கு திருமணம் நடந்தது. ஒரு பத்திரிகையாளர் அவரைப் பேட்டி கண்டபோது, அவர் ஒரு விலங்கு பிரியர் என்று கூறினார். மேலும், உலகம் முழுவதும் உள்ள விலங்குகளுக்காக உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையை உருவாக்குவதே அவரது வாழ்க்கை லட்சியமாக இருப்பதாக தெரிவித்தார். ஐ.நா (ஐக்கிய நாடுகள்) மற்றும் WHO (உலக சுகாதார அமைப்பு) ஆகியவற்றின் படி, உலக மக்கள் தொகையில் ஐம்பது சதவிகிதத்தினருக்கு நவீன மருத்துவம் இன்னும் கிடைக்கவில்லை. மிகப்பெரிய செல்வந்தர்களின் முரண்பாடான முன்னுரிமைகளாக இதைப் பார்க்க முடிகின்றது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய பூமிக்குரிய ஊழியத்தில் நோயுற்றவர்களைக் குணப்படுத்தினார், பார்வையற்றவர்களின் கண்களைத் திறந்தார், தொழுநோயாளிகளைச் சுகமாக்கினார், காதுகேளாதோர் குணமடைந்தார்கள், முடவர்கள் நடந்தார்கள், இறந்தவர்களை எழுப்பினார் (மத்தேயு 11:4-6). உலகின் கிழக்கில் உள்ள பண்டைய மருத்துவ முறைகள் மருத்துவ அறிவைப் புனிதமானதாகக் கருதி மற்றவர்களுக்குக் கற்பிக்காத நிலையில், மிஷனரிகள் உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்று மருத்துவமனைகள், செவிலியர் பயிற்சி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகளைத் திறந்தனர். ஆனால் அர்ப்பணிப்புள்ள மிஷனரிகளின் சேவைகளால், உலகில் நான்கில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே நவீன மருத்துவம் கிடைத்துள்ளது.
அணுகக்கூடியது:
இன்று உலகில் பல தொலைதூர இடங்கள் உள்ளன, அங்கு கிராமப்புற மக்கள் எந்த வகையான மருத்துவ சேவையையும் அணுக முடியாது. அத்தகைய மருத்துவ சேவையைப் பெற, அவர்கள் காடு, வனப்பகுதி, பாலைவனங்கள் மற்றும் ஆறுகளைக் கடந்து பல கிலோமீட்டர்கள் நடக்க வேண்டும்.
கிடைக்கிறது:
இந்த மக்கள் தேசிய அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு நிறுவனத்திற்கு சென்றாலும், அது செயல்படாமல் இருக்கலாம். எல்லா சேவைகளும் கிடைக்காமல் போகலாம். சில சமயங்களில் பெண்களுக்கு மருத்துவமனையில் பிரசவம் நடத்துவதற்கு மகளிர் மருத்துவ நிபுணர்கள் இல்லை. மூன்றாம் உலக நாடுகளில் பெரும்பாலான கிராமப்புறங்களில் மருத்துவம் அல்லாத பணியாளர்களைக் கொண்ட வெற்றுக் கட்டிடங்கள் மட்டுமே உள்ளன.
மலிவு விலை:
மக்கள் மருத்துவ நிறுவனங்களை அணுகினாலும், சேவைகள் கிடைத்தாலும், பலரால் செலவீனங்களை எதிர் கொள்ள முடியவில்லை. சில இடங்களில் சில அடிப்படை மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன, மேலும் தடுப்பூசிகள் உலக சுகாதார அமைப்பின் (WHO) மூலம் வளங்களைத் திரட்ட முடியும். ஆயினும்கூட, பல நோய்களுக்கு மருந்துகள் கிடைக்காமல் தான் இருக்கிறது.
சேர்ந்த செல்வம்:
துரதிர்ஷ்டவசமாக, செல்வத்தை குவித்துள்ள கோடீஸ்வரர், நவீன மருத்துவத்தை இலகுவாக அணுகக்கூடியதாகவும், கிடைக்கக்கூடியதாகவும், இலட்சக்கணக்கான மக்களுக்கு மலிவு விலையிலும் வழங்க முடியும். தேவன் தன் சாயலில் மனிதர்களைப் படைத்திருக்கிறார் என்பது அவருக்குப் புரியவில்லை. நோயுற்றவர்களைக் கவனிப்பது நம்மை சிருஷ்டித்த தேவனுக்கே சேவை செய்வதாகும் (மத்தேயு 25:36).
நவீன மருத்துவத்தை அணுகுவதற்கு இலகுவாக்கின மிஷனரிகளையும் அவர்களை அனுப்பியதற்காக தேவனிடம் நான் நன்றியுள்ள ஒரு நபராக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்