பாரத்தை ஒதுக்கி வையுங்கள்

இது நல்ல தெரிவுகளை தேர்ந்தெடுங்கள் என்பது பற்றியது மட்டுமல்ல, நமது ஆவிக்குரிய வாழ்க்கை, ஊழியம் மற்றும் தேவன் கொடுத்த நோக்கம் ஆகியவற்றைத் தடுக்காத பொருத்தமான தெரிவுகளாக இருப்பது அவசியம்.  எபிரெய நூலின் ஆக்கியோன் சீஷர்களை முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் பாரமான யாவற்றையும் தள்ளி வைக்குமாறு அறிவுறுத்துகிறார் (எபிரெயர் 12:1).

தவறான முதன்மைகள்:
சில சீஷர்கள் தங்களுக்கு எது முதன்மையானது என்பதை தவறாகப் புரிந்துகொள்வதின் நிமித்தம் அவர்களின் ஆவிக்குரிய யாத்திரை தாமதமாகிறது அல்லது ஒரே இடத்திலேயே தங்கி விடுகிறது. ஆம், எப்போதும் தேவ ராஜ்யத்திற்கு முதன்மையையும் நம் முக்கியத்துவத்தையும் அளிக்கும் போது, மற்ற அனைத்தும் ஒரு சீஷருக்கு இரண்டாம் பட்சமாகிறது அல்லது குறைவான முதன்மையாகிறது (மத்தேயு 6:33).

கவலைகள்:
சிலர் தேவையற்ற கவலைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.  அருட்பணிக்காக தேவன் கொடுத்த சுமை இலகுவானது, உலக கவலைகள் கனமானவை.  ஊழியம் மற்றும் பணிகளில் நாம் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களைப் பற்றிய கவலைகள் மற்றும் உலக கவலைகள் பலவீனமான நம்பிக்கையை விளைவிக்கும்.

ஆயத்தமற்றது:
முட்டாள் கன்னிகள் சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான நோக்கத்திற்காக, ஆனால் சரியான ஆயத்தம் இல்லாமல் இருந்தனர்.  ஒத்திவைக்கும் பழக்கம் அல்லது சோம்பல் அல்லது அசட்டுத்தனம் அவர்களை முட்டாள்தனமாகவும் தவறவிடவும் செய்தது (மத்தேயு 25:1-13).

பொது விவகாரங்கள்:
ஒரு போர்ச்சேவகன் பொதுமக்களின் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்று பவுல் எச்சரிக்கிறார். "நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கனுபவி. தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்" (2 தீமோத்தேயு 2:3‭-‬4). பொதுமக்கள் பெரும்பான்மையினர், போர்ச்சேவகர்கள் சிறுபான்மையினர்.  ஆயினும்கூட, அவர்கள் சிறப்பு வாய்ந்தவர்கள், அழைக்கப்பட்டவர்கள், பணியமர்த்தப்பட்டவர்கள் மற்றும் பொறுப்புகள் உடையவர்கள்.  சட்டத்திற்குப் புறம்பான அல்லது முறையற்ற அல்லது ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர்கள் தங்கள் கடமைப் பதவியிலிருந்து விலகிச் செல்ல முடியாது. ஆம், எல்லாவற்றையும் அநுபவிக்க அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது (1 கொரிந்தியர் 6:12) அல்லவா.

இங்கும் அங்கும் அலுவலா!:
ஆகாப் பெனாதாத்திற்கு எதிராகப் போரிட்டு அவனைத் தோற்கடித்தான்.  பெனாதாத் ஒரு பொல்லாத அரசன், தேவன் அவனைத் தண்டிக்க விரும்பினார்.  இருப்பினும், ஆகாப் அவனை விடுவித்து, அவனுடன் ஒரு உடன்படிக்கை செய்தான்  (1 இராஜாக்கள் 20:26-34). தேவன் ஆகாபிடம் ஒரு தீர்க்கதரிசியை அனுப்புகிறார், அவர் ஒரு உவமையைச் சொன்னார்.  ஒரு போரில், ஒரு கைதியை காவலில் வைக்க ஒரு சிப்பாய் நியமிக்கப்பட்டார்.  இருப்பினும், சிப்பாய் கவனமாக இருக்கவில்லை, கைதி தப்பினான்; "உமது அடியான் இங்கும் அங்கும் அலுவலாயிருக்கும்போது, அவன் போய்விட்டான்" (1 இராஜாக்கள் 20:40) என்று சொன்னவுடன் ஆகாப் சிப்பாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்குகிறான். இதில் பெனாதாத் என்பவன் கைதி, தவற விட்டவன் ஆகாப், ஆகையால் ஆகாப் தான் தேவனால் தண்டிக்கப்பட வேண்டியவன் என தீர்க்கதரிசி சுட்டிக் காட்டுகிறார், ஆம், இது ஒரு  கவனக்குறைவான வேலை அல்லவா.

துரதிர்ஷ்டவசமாக, பலவித பாரங்களை சுமக்கும் விசுவாசிகள், ஒரே இடத்திலேயே தங்கி விட்டனர். 

தேவையற்ற பாரங்களை நான் ஒதுக்கி (தள்ளி விடுகிறேனா) வைக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download