2நாளாகமம் 32:7 நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்.
2இராஜாக்கள் 6:16(8-23); சங்கீதம் 138:3; நீதிமொழிகள் 28:1
1. தைரியமாய் பேசுங்கள்
அப்போஸ்தலர் 4:13(1-14) பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத் தைக் கண்டு, ஆச்சரியப்பட்டார்கள்... எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது.
அப்போஸ்தலர் 4:31(31-37) அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய் சொன்னார்கள்
அப்போஸ்தலர் 18:26(24-28); அப்போஸ்தலர் 26:26(1-32)
2. தைரியமாய் போதியுங்கள்
அப்போஸ்தலர் 9:29(26-29) பர்னபா கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய் பிரசங்கித்து கிரேக்கருடனே பேசி தர்க்கித்தான்.
அப்போஸ்தலர் 14:3(1-4) கர்த்தரை முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய்ப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம் பண்ணினார்.
அப்போஸ்தலர் 19:8; அப்போஸ்தலர் 28:31
3. தைரியமாய் எழுதுங்கள்
ரோமர் 15:16 (பவுல்) தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரியமாய் எழுதினேன்.
எபிரெயர் 8:10; எபிரெயர் 10:16 என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன். 2கொரிந்தியர் 1:1; கலாத்தியர் 1:2; எபேசியர் 1:1; பிலிப்பியர் 1:1; கொலோசெயர் 1:2; 1தெசலோனிக்கேயர் 1:1; 1தீமோத்தேயு 1:2; தீத்து 1:1
Author: Rev. M. Arul Doss