பழைய வாசல் !

(நெகே 3:6)  
எருசலேமின் பழைய வாசல், பழங்கால எருசலேமின் முக்கியமானதொரு நுழைவாயிலாகக் கருதப்பட்டு வந்ததால் எருசலேமின் வடமேற்குப் பகுதியிலிருந்த இது, பழையவாசல் என்று அழைக்கப்பட்டது. சிதிலமடைந்த இதையே மூன்றாவது வாசலாகப் பழுதுபார்த்துக் கட்டினார் நெகேமியா.

"இந்து தேசம்" என்ற பெயர் வேதத்தில் இருப்பதினால் நமது இந்தியாவின் பழமையை நாம் அறியலாம். உலக வரலாற்றிலிருந்தும் நமது தேசத்தின் பல நூற்றாண்டுகாலப் பழமையையும் பாரம்பரியங்களையும் நாம் அறிகிறோம்.

என்ன தான் விக்கிரக ஆராதனை நிறைந்த தேசமாயிருந்தாலும், இந்திய மண்ணுக்கென்று தொன்றுதொட்டு வழங்கிவரும் அதின் கலாச்சாரங்களும், சன்மார்க்க ஒழுக்க நெறிகளும், மனிதாபிமானங்களும், பரஸ்பர அன்பும், சகிப்புத்தன்மையும், ஒழுங்குகளும் இங்கே நிறையவே உண்டு. நற்பண்புகளும், குடும்பக் கட்டமைப்பும், மரியாதை மதிப்புகளும், நற்குணசீலங்களும், கற்பும் வீரமும் நிறையவே நிறைந்த தேசமிது.

ஆனால் இந்த ஒழுக்க நற்சீலங்கள் என்ற "பழைய வாசல்" இன்று மேற்கத்தியப் படையெடுப்பால் பாழாகியிருப்பது உண்மை. தாராளமயமாக்கல் என்ற கொள்கை உட்புகுந்த நாள் முதல் இந்தப் "பழைய வாசல்" நாகரீக மோகம் என்ற நெருப்பினால் இங்கே சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கவில்லையோ?

* ஆங்கில மோகம் தாய்மொழியைத் தள்ளிவிட்டுத் தரைமட்டமாக்கவில்லையோ?

* தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் தாக்கம், நமது மேலான மதிப்பீடுகளையும், குடும்ப உறவுகளையும் ஒன்றுமில்லாமல் போகச் செய்துவிடவில்லையோ?

* பன்னாட்டுக் கம்பெனிகளின் வருகையும், மேற்கத்தியத் தாக்கமும் நமது வாலிபர்களின் நடைஉடை பாவனை, உரையாடல்களை அடியோடு மாற்றி, நவீன கலாச்சாரம் ஒன்றையே இன்றைய இளைஞர்களுக்குள் உருவாக்கி விடவில்லையோ?

* வளர்ந்த நாடுகளில் குடியேறத் துடிக்கும் இன்றைய இந்திய இளைஞர் பட்டாளத்தின் நோக்கம் பணமும் அந்தஸ்தும் தானோ?

* நாடு முழுவதுமே கிராமப்புற எல்லைகள் வரை கூடப் பரவலாகக் காணப்படும் கலாச்சாரப் புரட்சியினால் காணக்கிடக்கும் சுட்டெரிக்கப்பட்ட பழைய வாசல்களைப் பார்க்கிறீர்களே!

* ஒற்றுமை, அன்பு, ஐக்கியம் என்பவைகள் எல்லாம் காற்றோடு கலந்து தீவிரவாதம் ஒன்றே தலைதூக்கி நிற்பதைப் பார்க்கிறீர்களே!

* சினிமா, இசை மற்றும் சமூக வலைதளங்களினால் சின்னாபின்னமாகிக் கிடக்கும் தேசத்தின் பாரம்பரிய பழைய வாசல்களின் பரிதாப நிலையைப் பார்க்கிறீர்களே!

* சபை எவ்வழியோ, தேசம் அவ்வழி என்றார் தங்ஸ். லியோனார்ட் ரேவன்ஹில் அவர்கள். சபை என்று தன் பூர்வ பாதைகளை விட்டு விலகியதோ, அன்றே தேசத்தின் நற்குண அஸ்திபாரங்களும் ஆட்டம்காண ஆரம்பித்ததே! சபையிலே நமது பிள்ளைகளின் ஈழ்ங்ள்ள் ஸ்ரீர்க்ங் ம், நடவடிக்கைகளுமே உலகத்தோடு உலகமாகியிருக்க, தேசத்தின் பழையவாசல்களாம் பாரம்பரியக் குணநலன்களைக் குறைசொல்வது எப்படி?

* முதலாவது, சபை தன் மூல அஸ்திபார உபதேசங்களுக்கும், பூர்வ பாதைகளுக்கும், முற்பிதாக்களின் வாழ்க்கைக்கும், கிறிஸ்துவின் அடிச்சுவடுகளுக்கும் திரும்பட்டும்! தேசத்தின் பழைய வாசல்கள் தானாகவே கட்டப்படும்!

ஜெபம்

■ இன்றைய வாலிப சமுதாயத்துக்காக ஜெபிப்போம்..

■ தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சமூக வலை தளங்களில் சிக்கிச் சீரழியும் இந்தத் தலைமுறைக்காக ஜெபிப்போம்..

■ வெளிநாட்டு மோகத்தினால் தாய்மொழியையும், சொந்த மண்ணின் அடையாளத்தையுமே தொலைத்து நிற்கும் இந்தத் தலைமுறைக்காய் ஜெபிப்போம்..

■ சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கும் தேசத்தின் பழைய வாசல்களாம் மரியாதை மதிப்பு என்ற மதிப்பீடுகள், பரஸ்பர அன்பு, மனிதாபிமானம், உதவி, சகிப்பு, ஐக்கியம் - இவைகளை ஜெபத்திலே கட்டியெழுப்புவோம்!

■ குடும்ப உறவுகள் சீர்குலைந்து சின்னாபின்னமாகி, கணவன் மனைவிக்கு வெளியேயான தவறான உறவுகள், கண்ஸ்ங்-ண்ய்-ல்ஹழ்ற்ய்ங்ழ்ள் என்ற திருமணமாகாமலே ஒரே கூரையின் கீழ் கணவன் மனைவியாக ஒன்றாய் பல வருடங்கள் வாழும் கலாச்சாரம், துணைகளையும் நண்ப நண்பிகளையும் நோக்கத்துக்கேற்ப மாற்றிக்கொள்ளும் மேலை நாட்டுச் சரக்குகள், மலிவான விவாகரத்துகள், குடும்பப்பிரிவுகள் என்று ஆகிப்போன சமுதாயச் சீர்குலைவுகளுக்கு மத்தியில் பூர்வீக வாசல்களை பரிசுத்தமான ஜெபத்தால் புதுப்பித்துக் கட்டுவோம்!

■ சொந்த தேசத்தின் பரிதாப நிலையைக் குறித்த பாரத்தை தேவன் நமது வாலிபர்களுக்குத் தரும்படியாய் ஜெபிப்போம்..

■ இவைகள் யாவும் முதலாவது சபையிலிருந்தே துவங்கும்படியாகவும், சபையின் இந்தத் தலைமுறை தன் அஸ்திபார உபதேசத்துக்கும் பூர்வ பாதைகளுக்கும், பழைய வாசலுக்கும் திரும்பும்படியாய் ஜெபிப்போம்...

■ ஆராதனை என்ற பெயரில் தேவ வசனத்துக்கு இன்று ஏற்பட்டிருக்கும் கொடிய பஞ்சம் நீங்கி, நமது சபைகள் மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல கர்த்தருக்காகவும் அவரது வசனத்துக்காகவும், அவரது மகிமைப் பிரசன்னத்துக்காகவுமே தாகத்தோடு கதறி, சபை தன் பழைய வாசல்களை எழுந்து கட்டும்படியாய் ஜெபிப்போம்..

■ ஆரம்ப நாட்களின் பெந்தேகொஸ்தே சபைகளில் அடிக்கடியாய்க் கேட்கப்படும் "பிரதிஷ்டை" என்ற வார்த்தையே இன்று காணவும் கேட்கவும் கிடைக்காமல் போன நமது சபைகளில் பிரதிஷ்டை, வேறு பிரிந்த வாழ்க்கை என்ற பழைய வாசல்களைப் பழுதுபார்த்துக் கட்டுவோம்!

■ வாழ்க்கையின் நோக்கம், சபையின் நோக்கம் (டன்ழ்ல்ர்ள்ங் ர்ச் ஐண்ச்ங், டன்ழ்ல்ர்ள்ங் ர்ச் இட்ன்ழ்ஸ்ரீட்) இரண்டையும் சபை மீண்டும் கண்டுபிடித்து, தன் பழுதுபட்ட பழைய வாசல்களைக் கட்டியெழுப்புவதாக!

■ இன்றைய நாட்களில் சபைகளில் மிக அதிகமாகக் காணப்படும் குடும்ப விவாகரத்துகள், ஆத்துமப் பிணைப்புகள், முறையற்ற உறவுகள் - இவைகள் நீங்கி பரிசுத்த உறவுகளாம் பழைய வாசல்களை ஜெபத்தால் திரும்பக் கட்டுவோம் வாருங்கள்!

Author: Pr. Romilton



Topics: Bible Articles

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download