எபிரெயர் 4:13 அவருடைய (கர்த்தருடைய) பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய, கண்களுக்கு முன்பாக நிர்வாணமா யும் வெளியரங்கமாயும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
1. பேசுகின்ற வார்த்தைக்கு கணக்குக் கொடுக்கவேண்டும்
மத்தேயு 12:36(31-37) மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும்
யோபு 35:13 தேவன் வீண் வார்த்தைக்குச் செவிகொடார்
எபேசியர் 5:6 வீண் வார்த்தைகளினாலே மோசம்போகாதபடிக்கு எச்சரி 1தீமோத்தேயு 6:20; 2தீமோத்தேயு 2:16 சீர்கேடான விண்பேச்சுகளுக்கு விலகு
தானியேல் 3:29 தூஷண வார்த்தையைச் சொல்லுகிறவன் துண்டிக்கப்...
கொலோசெயர் 3:8 தூஷணமும் வம்பு வார்த்தையையும் விட்டுவிடுங்கள்
2. பெறுகின்ற கடனுக்கு கணக்குக் கொடுக்கவேண்டும்
மத்தேயு 18:23-24 (21-35) பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப் பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.
ரோமர் 13:8; 1யோவான் 4:11 ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர கடனே யல்லாமல் மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்
1யோவான் 3:16 சகோதரருக்காக ஜீவன்தர கடனாளிகளாயிருக்கிறோம்
ரோமர் 15:25-27 உதவிசெய்ய கடனாளி
2தெசலோனிக்கேயர் 1:3; 2:13 தேவனை ஸ்தோத்தரிக்க கடனாளி
3. ஏற்கின்ற பொறுப்புக்கு கணக்குக் கொடுக்கவேண்டும்
மத்தேயு 25:14-15,19(14-30) பரலோகராஜ்யம் புறதேசத்துக்குப் பிரயாண மாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது. (அவனவனுடைய திறமைக்கேற்ப 5,2,1 தாலந்து கொடுத்தல்)
யோவான் 3:35 பிதாவானவர் குமாரனிடம் எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தல்
2கொரிந்தியர் 5:18 ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார் (பவுல்)
(பொறுப்பு: குடும்ப பொறுப்புக்கு, ஊழிய பொறுப்புக்கு, உலக பொறுப்புக்கு, திருச்சபை பொறுப்புக்கு கணக்குக்கொடுக்கவேண்டும்)
Author: Rev. M. Arul Doss