மத்தேயு 12:31-37

12:31 ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப்பாவமும் எந்தத் தூஷணமும் மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.
12:32 எவனாகிலும் மனுஷகுமரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
12:33 மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.
12:34 விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.
12:35 நல்ல மனுஷன் இருதமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.
12:36 மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயதீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
12:37 ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்கப்படுவாய் என்றார்.




Related Topics


ஆதலால் , நான் , உங்களுக்குச் , சொல்லுகிறேன்: , எந்தப்பாவமும் , எந்தத் , தூஷணமும் , மன்னிக்கப்படும்; , ஆவியானவருக்கு , விரோதமான , தூஷணமோ , மனுஷருக்கு , மன்னிக்கப்படுவதில்லை , மத்தேயு 12:31 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 12 TAMIL BIBLE , மத்தேயு 12 IN TAMIL , மத்தேயு 12 31 IN TAMIL , மத்தேயு 12 31 IN TAMIL BIBLE , மத்தேயு 12 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 12 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 12 TAMIL BIBLE , Matthew 12 IN TAMIL , Matthew 12 31 IN TAMIL , Matthew 12 31 IN TAMIL BIBLE . Matthew 12 IN ENGLISH ,