யோபு 42:2 தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
எபேசியர் 3:20; எரேமியா 32:19
1. தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்
தானியேல் 3:17 (13-30) நாங்கள் (சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ) ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்
தானியேல் 6:16,20 தானியேல்-தரியு ராஜா; ஏசாயா 46:4; எரேமியா 20:13; சங்கீதம் 91:3; சங்கீதம் 97:10
2. உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்
எபிரெயர் 2:18 (16-18)அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். 1கொரிந்தியர் 10:13; 1சாமுவேல் 7:12; 2நாளாகமம் 14:11; சங்கீதம் 37:40
3. பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்
2கொரிந்தியர் 9:8(6-15) நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரண முடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயு மிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்
எபிரெயர் 6:14; எபேசியர் 1:6-8; ஆதியாகமம் 13:6; 22:17,18; 26:5,24
4. நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார்
ரோமர் 4:21 (17-22) தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறை வேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப் படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்
ஆதியாகமம் 26:3; எண்ணாகமம் 23:19; 1இராஜாக்கள் 8:15,24
5. நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறார்
ரோமர் 14:4 மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்?... அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.
யாக்கோபு 4:12; 1பேதுரு 5:10; சங்கீதம் 41:12
Author: Rev. M. Arul Doss