கடவுள் மனிதராகப் பிறந்தார். இயேசுவின் பிறப்பு உலக வரலாற்றை மாற்றியது. இயேசுவின் பிறப்பு பல்வேறு புராணங்களாக தமிழில் வடிவம் பெற்றுள்ளது. கடவுள் மனிதனாகப் பிறக்கமுடியும் என்னும் உண்மை இயேசுவின் பிறப்பால் வெளிப்பட்டது. மனிதராகப் பிறந்த கடவுளின் பிறந்த நாளை கொண்டாடவேண்டும். அநேகர் கொண்டாடிய விதங்கள் நமக்கு ஒரு முன்மாதிரி. மனிதனாகப் பிறந்த கடவுளின் பிறந்தநாளை எப்படி கொண்டாடவேண்டும்?
1. புகழ்ந்து கொண்டாடுவோம்
மரியாள்: லூக்கா 1:48-53 அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது. தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.
அன்னாள்: லூக்-2:38 அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கம் அவரைக்குறித்துப் பேசினாள்.
சாஸ்திரிகள்: பணிந்துகொண்டார்கள் - மத். 2:2,11
மத்தேயு: 1:23 இம்மானுவேல் என்று புகழந்தான்
யோவான் 1:1-4 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
தேவதூதர்கள்: லூக்கா 2:14. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று, தேவனைத் துதித்தார்கள்.
மேய்பர்கள் லூக்கா 2:20 கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு
சிமியோன்: லூக்கா 2:30-32: புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தைக் கண்டது
2. படித்து கொண்டாடுவோம்
மனிதனாகப் பிறந்த கடவுளை கண்டு கேட்டு படித்து அவரைக் கொண்டாடவேண்டும்.
தாவீது அருவான கடவுளுக்கு உரு கொடுக்க கற்றுக்கொண்டு கற்பிக்கிறான்: கன்மலை, கோட்டை, மேய்ப்பன், நியாயாதிபதி, சேனைகளின் கர்த்தர்.
யோவான் 1:14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது - கடவுளுடைய இரு தன்மைகளும் மனிதனாகிய இயேசுவிடம் இருந்ததைக் கண்டார்கள் - கற்றார்கள்
சாஸ்திரிகள்: அவருடைய நட்சத்திரத்தைக் கண்டார்கள்: மத்.2:2
பவுல்: பிலி.2:6-7 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.- நாமும் இயேசுவைப் போலாகவேண்டும்
கொலோ-2:9 தேவத்துவத்தின் பரிப10ரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.
கிறிஸ்துமஸ் காலங்களில் பிறப்பின் நோக்கம், பிறப்பின் ஆசீர்வாதங்கள், பிறந்தவர் ஒவ்வொருவருக்கும் எப்படிப்பட்டவர் என்று நாம் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக கற்றுக்கொள்ளவேண்டும்: காவல்துறையினருக்கு, துப்புறவுத் தொழிலாளர்களுக்கு, விவசாயிகளுக்கு, மற்றும்பலருக்கு…
பேதுரு அவரது 2ம் நிருபத்தில் 3:18ல் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்.
3. பறைசாற்றி கொண்டாடுவோம்
மனிதனாகப் பிறந்த கடவுளை நாம் பறைசாற்றவேண்டும்
அன்னாள்: லூக்-2:38 அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கம் அவரைக்குறித்துப் பேசினாள்.
தேவதூதர்கள்: லூக்கா 2:10-12: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
மேய்ப்பர்கள்: லூக்கா 2: 17. கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.
1யோவான் 1:1. ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
4. பரிசளித்து கொண்டாடுவோம்
சாஸ்திரிகள்: மத்தேயு 2:11 தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
பிதாவாகிய கடவுள் - யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
இயேசு: பிலிப்பியர் 2:6-8 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
இயேசு: ஸ்தானத்தை, ஸ்திரத்தை, சிலாக்கியத்தை நமக்காக பரிசளித்தார்
மத்தேயு 25:40 இயேசுவின் சகோதரர்களாகிய சிறியவர்களுக்கு செய்வது அவருக்கு கொடுக்கும் பரிசு
கடவுள் மனிதனாகப் பிறந்தது மனிதனுக்கு கிடைத்த பெரும்பரிசு. கொண்டாட்டத்தில் புகழ்ச்சி, புகழ்கிறவரைப் பற்றிய படிப்பினை, அவரைப் பற்றி படித்ததை பறைசாற்றல், அத்துடன் அவருக்கு பரிசளித்தல் - அவர் சார்பில் பரிசு கொடுத்தல் இருக்கவேண்டும். நமது கொண்டாட்டம் இயேசுவுக்கு புகழ்ச்சியும், அவரை அறிவிக்கிறதாயும், ஏழைகள் திருப்பதியடைவதாகவும் இருக்கவேண்டும்.
Author. Rev. Dr. C. Rajasekaran