தேவனுடைய பிள்ளைகள் யார்?

1. விசுவாசித்து அவரை ஏற்றுக்கொண்டவர்கள் 
யோவான் 1:12-13 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார் 
1யோவான் 5:1-5 இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்
கலாத்தியர் 3:26-27 நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.

2. தேவ ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள் 
ரோமர் 8:14 -17 மேலும், எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.

3. சமாதானம் பண்ணுகிறவர்கள் 
மத்தேயு 5:9 சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
ரோமர் 12:18 கூடுமானால் உங்களால் ஆனமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்

4. சத்துருக்களைச் சிநேகிக்கிறவர்கள் 
மத்தேயு 5:44-45 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக் களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக் கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படி செய்வதினால் நீங்கள் பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்.

நீங்கள் தேவனுடைய பிள்ளைகள்
கலாத்தியர் 4:6-7 நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார். ஆகையால் நீ அடிமையாயிராமல் புத்திர னாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய். எபேசியர் 1:6; 1யோவான் 3:1,2,10; ஓசியா 1:10; ரோமர் 9:26; பிலிப்பியர் 2:15

Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download