அதிகாரம்.4
‘பரலோகத்தின் தரிசனமும் பரிசுத்தவான்களின் ஸ்தானமும்’ ‘Vision of Heaven and the position of Saints’
இநத அதிகாரத்தில் பரலோகத்தின் காட்சியும் அங்கு பிதாவாகிய தேவனோடு எண்ணிறந்த தேவதூதர்கள் சூழ்ந்திருக்க பரிசுத்தவான்களின் ஸ்தானங்களும் யோவானுக்கு காண்பிக்கப்பட்டது.
ஓவ்வொன்றாக நாம் சிந்திக்கலாம்.
இவைகளுக்குப்பின்பு இதோ பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன்….(வச 1)
• பரலோகத்தில் ஒரு சிங்காசனமும் அதில் வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பான ஒருவர் வீற்றிருந்தார்.( வச 2, 3). அவர் பிதாவாகிய தேவனேயாவார். சங்கீதம் 47: 8, தானியேல் 7:9, 13 அவரையே குறிக்கிறது.
• சிங்காசனத்தின மத்தியிலும் அதைச்; சுற்றிலும் நான்கு ஜீவன்கள் இருந்தன.(வச 6- 8).
எசேக்கியேல் தீர்க்கதரிசியும்கூட இந்த நான்கு ஜீவன்களை தனது தரிசனததில் கண்டிருக்கிறான். எசேக்கியேல் 1: 5- 24. இந்த நான்கு ஜீவன்களின் சாயல் வசேஷ அதிகாரங்களும் குணாதிசயங்களும் பெற்ற தேவதூதர்களைப்போலிருந்தது. அவர்கள் தேவனுடைய சிங்காசனத்தைப் பாதுகாக்கும் பணியிலமர்த்தப்படடதைப்போல தேவனுடைய சிங்காசனத்தைச் சுற்றியிருந்தார்கள்.இப்படிப்பட்ட விசேஷ தூதர்களைக் குறித்து ஆதியாகமம் 3: 24 இல் ஏதேன் தோட்டத்தை பாதுகாக்கும் பணியிலிருந்ததாகவும், யாத்திராகமம் 37: 8, 9 வசனங்களில் தேவனுடைய கிருபாசனத்தையே சுற்றியிருந்ததாகவும் பார்க்க முடியும். ஆகவே, இந்த நான்கு ஜீவன்களும் கேருபீன்களும் சேராபீன்களும் போன்ற தேவதூதர்கள் என்று அறிகிறோம். இந்த ஜீவன்களுக்கு முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களிருப்பது இவைகள் எல்லா பக்கங்களிலும் பார்க்கமுடியும் என்பதும் இவற்றின் ஆழ்ந்த பார்வைக்கு மறைவாக ஒன்றும் இருக்கமுடியாது என்பதும் தெரிகிறது. ஆயினும், இவைகள் சர்வ வியாபகமோ, சர்வ ஞானமோ உள்ளவை அல்ல. சர்வ வல்ல தேவனே அப்படிப்பட்டவர். இந்த நான்கு ஜீவன்களும் ஏசாயா 6: 2, 3 வசனங்களில் வாசிப்பதுபோல தேவனை துதித்துப்பாடுவதையும் காண்கிறோம்.
• சிங்காசனத்தைச் சூழ வேறு இருபத்தி நான்கு சிங்காசனங்கள் இருந்தன. அதில் 24 மூப்பர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.(வச 4). இந்த 24 மூப்பர்களும் பழைய ஏற்பாட்டு கால பரிசுத்தவான்கள். 1 நாளாகமம் 24 1- 4, வெளி 7: 4- 8.
மேலும், இவர்கள் புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களோ, கிறிஸ்துவின் மணவாட்டியோ அல்ல என்பதை பின்வரும் வசனங்களை வாசித்துத் தெரிந்து கொள்ளலாம். எபே 2: 7, எபி 11: 39, 40. வெளி 3: 21.
தேவனுடைய ராஜ்ஜியத்தில் கிறிஸ்துவின் மணவாட்டி, புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் இவர்களுடைய ஸ்தானத்தைக் குறித்து பின்வரும் அதிகாரங்களில் தெரிந்து கொள்ளுவோம்.
மூப்பர்கள் என்ற வார்த்தையே இவர்கள் தலைவர்கள், முற்பிதாக்கள், கோத்திரப்பிதாக்கள் என்பதைக் காட்டுகிறது. மேலும், சிங்காசனம் இவர்களுக்குக் கொடுக்ப்பட்டது, தேவனால் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட அதிகாரத்தையும், பொறுப்பையும் காண்பிக்கிறது. ஆகவே, மேற்குறிப்பிட்ட வசனங்களின் அடிப்படையில் இந்த 24 மூப்பர்களும் இஸ்ரவேலரின் 12 கோத்திரங்களின் தலைவர்கள் என்பதே சரியான விளக்கமாக தெரிகிறது. எனவே, இவர்கள் பின்வரும் காலங்களின் பிரிவு விளக்கங்களில் ‘நியாயப்பிரமாணத்தின் காலத்தில்’ வரும் பரிசுத்தவான்கள் என்பது மிகச்சரியாக விளங்குகிறது.
பரலோகத்தில் பரிசுத்தவான்களின் ஸ்தானங்களை அறிவதற்கு, ஆதாம் முதற்கொண்டு இன்றுவரையான ‘காலங்களின் பிரிவு’(னுiளிநளெயவழைn ழக Pநசழைனள) குறித்த சத்தியத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
காலங்களின் பிரிவு (Dispenstion of Periods)
1. மனசாட்சியின் காலம் ; (Conscience Period) – ஆதாம் வீழ்ச்சியடைந்த காலம் முதல் நியாயப்பிரமாணம மோசேக்கு கொடுகக்ப்பட்ட நாளுக்கு முன் வரையான காலம் மனசாட்சியின் காலமாகும்.இந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் நல் மனச்சாட்சியின் படி வாழ எதிர்பார்க்கப்பட்டார்கள். ரோமர் 2: 14, 15. இந்த காலத்து பரிசுத்தவான்களின் ஸ்தானம் பரலோகத்தில் மற்ற இரண்டு காலத்து பரிசுத்தவான்களின் ஸ்தானத்தைவிட தேவனுடைய சிங்காசனத்திலிருந்து தூரமாகவே இருக்கும்.
2. நியாயப்பிரமாணத்தின் காலம் (Law Period) பழைய ஏற்பாட்டில் மோசேக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட காலம் முதல் புதிய ஏற்பாட்டில் பெந்தகோஸ்தே நாள்வரை நியாயப்பிரமாணத்தின் காலமாகும். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனம் என்றழைக்கப்படும் நியாயப்பிரமாணத்தைப் பெற்ற இஸ்ரவேலர் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்படிந்து வாழ எதிர்பார்க்கப்பட்டார்கள். யாத்திராகமம் 19: 20. இவர்களுடைய ஸ்தானம் மனசாட்சிகாலத்து பரிசுத்தவான்களைவிட தேவனுடைய சிங்காசனத்திற்கு அருகாமையிலும் கிருபையின் காலத்து பரிசுத்தவான்களைவிட தூரமாகவும் இருக்கும்.
3. கிருபையின் காலம் (Grace Period) புதிய ஏற்பாட்டின் பெந்தகோஸ்தே நாள் முதல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரை கிருபையின் காலமாகும். இந்த காலத்து பரிசுத்தவான்(விசுவாசிகள்) தேவ கிருபையாலும் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினாலும் இரட்சிக்கப்பட்டவர்களாவர். எபேசியர் 2: 5,8. யோவான் 1: 17.
இந்த கிருபையின் காலத்து ஜெயங்கொள்ளும் பரிசுத்தவான்கள், முந்தின இரண்டு காலத்து பரிசுத்தவான்களைவிட சில மேன்மையானவற்றை பெற்றவர்களாக தேவனுடைய சிங்காசனத்திலேயே இருப்பார்கள். இவர்களே கிறிஸ்துவின் திருச்சபை என்னப்படுகிறவர்கள். இவர்கள் கிறிஸ்துவின் மணவாட்டியாக அவருடைய சிங்காசனத்தில் நித்தியமாக பங்கு பெறுவார்கள். வெளி 19: 7, எபிரேயர் 11: 39, 40.
- சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில் இருந்தது(வச 3) – அது இவர் உடன்படிக்கையை காக்கிற தேவன் என்பதை நினைப்பூட்டுவதாக காணப்பட்டது. ஆதி 9: 13 – 17
- சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன.(வச 5)
தேவனுடைய நீதியான நியாயத்தீர்ப்பு கீழ்படியாத தேசங்கள்மேல் செலுத்தப்படுவதை இந்த காட்சி தெரிவிக்கிறது. 2 சாமுவேல் 22 14, 15.
- ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.(வச 5).
தேவனுடைய ஆவியின் நீங்காத முழு பிரசன்னத்தை இது காண்பிக்கிறது.
- சிங்காசனத்திற்கு முன்பாக பளிங்குபோன்ற கண்ணாடிக்கடலிருந்தது.(வச 6)
உலகத்தோற்றமுதற்கொண்டு சத்தியத்திறகாகவும் கர்த்தihப்பற்றிய சாட்சிக்காகவும் இரத்த சாட்சிகளாக மரித்தவர்களின் கூட்டத்தை இது காண்பிக்கிறது. வெளி 6: 9, வெளி 15: 2.
பரலோகத்தில் தேவனுக்கு செலுத்தப்பட்ட மகிமையான ஆராதனையை யோவான் தனது தரிசனத்தில் இங்கு காண்கிறான். நான்கு ஜீவன்களும் 24 மூப்பர்களும் தேவனுக்கு எல்லா மகிமையையும் கனத்தையும் முழு அர்ப்பணிப்போடு செலுத்துகிறார்கள். மேலும் அவர் ஒருவரே துதிக்கும் தொழுதுகொள்ளுதலுக்கும் பாத்திரர் என்று தங்கள் வாயினால் அறிக்கையிட்டு உறுதிசெய்கிறார்கள்.(வச 9- 11)
Author: Rev. Dr. R. Samuel
4ம் அதிகாரம் யோவான் கண்ட பரலோக சிங்காசனம்
வ 1 இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப் பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன்
முதல் மூன்று அதிகாரங்களில் சபைகளின் நடுவில் உலாவின இயேசு இப்பொழுது பரலோகத்தில் இருக்கிறார். இனி சம்பவிக்க வேண்டியவைகளை யோவானுக்குக் காட்டும்படி அவனைப் பரலோகத்திற்கு ஏறிவரச் சொன்னார். அங்கே யோவான் ஒரு திறந்த வாசலைக் காண்கிறான். அது என்ன வாசல் ? பரலோகத்திலுள்ள தேவனிருக்கும் இடத்திற்குப் போகும் வாசலா? அல்லது பூமியிலிருந்து பரலோகத்திற்குப் போவதற்கான வாசலா?
மூன்று விதமான வாசல்களைப் பார்க்கிறோம்
1. வாய்ப்பின் வாசல் வெளி,3:8 சுவிசேஷம் அறிவிக்க திறந்த வாசல்
2. இயேசு தட்டும் நம் இருதயத்தின் வாசல் வெளி. 3:20
3. இனி சம்பவிப்பவைகளை வெளிப்படுத்துவதற்காக திறக்கப்பட்ட வாசல் வெளி, 4:1 ஏன் திறக்கப்படுகிறது?
1. தேவ தரிசனங்களைக் காண எசேக் , 1:1
2. மனிதன் ஆவியானவரை நாடும் பொழுது பரிசுத்த ஆவியானவர் இறங்குகிறார் . ஆவியானவர் இறங்குவதற்காக வாசல் திறக்கப்படுகிறது. மாற் ,1:10
3. தேவனுடைய மகிமையை வெளிப்படுத்த யோ. 1:51 அப் . 7:56
4. விசுவாசிக்கு இரட்சிப்பு, திருப்தி பாதுகாப்பு அளிப்பதற்காக இயேசு எனும் வாசல் திறக்கப்படுகிறது (யோ. 10: 7, 9)
5. தேவனுடைய ஜனம் உட்பிரவேசிக்க மீகா, 2:13
வெளி 4: 2, 3 யோவான் ஆவிக்குள்ளானான் - ஒரு தங்காசனத்தையும் , அதில் வீற்றிருக்கிறவரையும் கண்டேன் . பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளும் சிங்காசனத்தையும் அதில் வீற்றிருக்கிறவரையும் தரிசனத்தில் கண்டார்கள் .
மிகாயா- 1 ராஜா 22:19; தாவீது சங் , 47:8; ஏசாயா 6:1. வெளிப்படுத்தின விசேஷத்தில் , 2, 8, 9 அதிகாரங்கள் தவிர அனைத்து அதிகாரங்களிலும் சிங்காசனம் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்காசனம் அவருடைய மகிமையை வெளிப் படுத்துகிறது.
Handel Manuel “Messiah” ” என்ற ஒப்பற்ற இசைக் கோர்வையை உருவாக்கினவர் , அவரிடம் , “ உங்களால் இது எப்படி முடிந்தது? என்று கேட்ட போது அவர் , “வானங்கள் திறந்தது; தேவனை அவருடைய சிங்காசனத்தின் மேலிருக்கக் கண்டேன் ; அந்த மகிமையைக் கண்டதினால் 20 நாட்கள் சாப்பிடாமலிருந்து எழுதினேன் ” என்றார் . சிங்காசனத்தில் வீற்றிருந்த!” ஒருவர் ”, பிதா ஒருவரும் காணக்கூடாதவர் . ஆவியானவரைக் காண முடியாது; எனவே வானத்தில் வீற்றிருந்த இயேசுவையே யோவான் கண்டான். இருந்தபோது அவருடைய மார்பில் சாய்ந்திருந்தவன் தான். ஆனாலும் சிங்காசனத்தில் வீற்றிருந்தவரின் மகிமை அத்தனை பயங்கரமான சேரக்கூடாத ஒளியாயிருந்தது.
வெளி 4:3 சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்த தேவனை, யோவான் மனித வடிவில் விவரிக்க முடியாமல் ஜோதியாகவும், விலையேறப்பெற்ற கற்களாகிய வச்சிரக்கல், பதுமராகம், மரகதம் ஆகியவற்றின் பிரகாசமாகவும் வர்ணித்தான். (1தீமோ.6:16, சங் ,104:2) இவை மூன்றும். தீரு ராஜாவின் உடையிலிருந் தன (எசேக் , 28:13) இம்மூன்றும் பரலோகத்தின் அஸ்திபாரங்களிலுமுண்டு வெளி. 21:19)
எசேக் 1:26ல் அந்த சிங்காசனத்தின் மேல் மனுஷ சாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது. அது இயேசுவே.
4:2 வானத்திலே ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது.
4:3 அந்த சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில் இருந்தது. அது பார்வைக்கு மரகதம்போல் தோன்றிற்று, எசேக் 1:26ல் எசேக்கியேல் நீலரத்தினம் போல விளங்கும் ஒரு சிங்காசனத்தைக் கண்டான். வ28ல் மழை பெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படி காணப்படுகிறதோ அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது. ஆதி. 9:10-14ல் நோவாவோடு செய்த உடன்படிக்கைக்கு அடையாளமாக தன் வில்லை வானத்தின் மேகத்தில் வைத்தார். அவருடைய அந்த வில்லே சிங்காசனத்தை சுற்றிலும் காணப்பட்டது.
பரலோகத்தின் நடு மையமே தேவனுடைய சிங்காசனம் இருக்கும் இடம் ,
வ 4. அந்த சிங்காசனத்தைச் சூழ 24 சிங்காசனங்களிருந்தன. 24 மூப்பர்கள் வெண்வஸ்திரம் தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி அந்த சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக் கண்டேன். இரண்டு கேள்விகள் எழுகின்றன. 1 ஏன் 24 சிங்காசனங்கள் ? தேவன் ஏதோ ஒரு காரணத்திற்காக வைத்திருக்கிறார். அவ்வளவுதான் நமக்குத்தெரியும் , ஆனாலும் பல தேவ மனிதர்கள் சில விளக்கங்கள் கொடுக்கின்றனர்.
1. அந்த 24 பேர்கள் யாரென்றால் , 12 கோத்திரப் பிதாக் களும் 12 அப்போஸ்தலர்களும் , இன்னுமொரு விளக்கம் என்னவென்றால் தாவீது ஆலயத்தில் பணிசெய்ய ஆசாரியர்களை 24வகுப்புகளாகப்பிரித்தான் 1நாளா.24ம் ௮தி. இதனால் தேவனை துதிக்கப் பரலோகத்தில் 24 சிங்காசனங்களில் 24 மூப்பர்களை வைத்திருந்தார் ,
2. 24 மூப்பர்கள் யார் ? மனிதர்களா அல்லது தேவதூதர்களா?
நிச்சயமாய் மனிதர்களாகத்தான் இருக்கமுடியும் , ஏனென் றால் வெளி. 5:9 ல் மூப்பர்கள் “எங்களை மீட்டுக் கொண்டீர் ”? என்று பாடினார்கள் . விழுந்துபோன மனுக்குலத்தை மீட்கத்தான் இயேசு மனிதனானார் .
வ 5. மின்னல்கள் , இடிமுழக்கங்கள் , சத்தங்களும் புறப்பட்டன: இது தேவனின் அதிகாரத்தை வெளிப்படுத்துகிறது. (மத் , 28:18)
தேவனுடைய ஏழுஆவிகள் : 7என்றஎண் பரிபூரணத்தைக் குறிக்கும் , ஏழு ஆவிகளும் தேவனுடைய பரிசுத்த ஆவியானவரின் ஏழு குணங்களைக் காட்டுகின்றன. அவையாவன:
ஞானத்தை அருளும் ஆவி,
உணர்வை அருளும் ஆவி
ஆலோசனையை அருளும் ஆவி
பெலனை அருளும் ஆவி
அறிவை அருளும் ஆவி
கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை அருளும் ஆவி
கர்த்தரின் ஆவி (ஏசாயா 11:2)
வச 6 பளிங்குக்கொப்பான கண்ணாடிக் கடலிருந்தது சிங்காசனம் கண்ணாடி போன்ற தளத்தின் மேல் இருந்தால் , கண்ணாடி பிரதிபலிப்பது தண்ணீரிருப்பது போல் தோன்றியிருக்கும். அது விஸ்தாரமான இடமாக இருந்ததால் , யோவானுக்கு கண்ணாடிக் கடல் போல் தோன்றியிருக்கலாம். வில்லியம் பார்க்ளே சாலமோன் அரண்மனையிலும் சிங்காசனம் இருந்த இடம் இப்படிக் கண்ணாடி போலிருந்ததைக் குறிப்பிடுகிறார். ஷேபா தேசத்து ராஜஸ்திரி அந்த இடத்திற்கு வந்த பொழுது தண்ணீர் இருப்பதாக நினைத்து தன் உடை நனைந்து விடாதபடி அதை சற்று தூக்கிக் கொண்டு நடந்தாளாம் . மேலும் பளிங்கு போன்ற கண்ணாடி பரிசுத்தத்தைக் குறிக்கும் ,
சிங்காசனத்தின் மத்தியிலும் , அதைச்சுற்றிலும் நான்கு ஜீவன்கள் இருந்தன.
இந்த நான்கு ஜீவன்களும் இயேசுவானவர் பூமியிலிருந்தபொழுது அவருடைய நான்கு தன்மைகளைக் குறிக்கின்றன.
வ 7 முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பானதாக இருந்தது
இது இயேசு யூதராஜசிங்கமானவர் என்பதைக் குறிக்கிறது மத்தேயு சுவிசேஷம் இயேசுவை யூதருக்கு ராஜாவாகக் காட்டுகிறது. மத் , 2ம் அதிகாரத்தில் , கிழக்கிலிருந்து, வந்த சாஸ்திரிகள் ஏரோதின் அரண்மனைக்குச் சென்று “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? என்று கேட்டது வேறு எந்த சுவிசேஷத்திலும் எழுதப்படவில்லை. சாஸ்திரிகள் கேட்ட கேள்விக்குப் பதிலாகப் பிலாத்து சிலுவையிலே “இயேசு யூதருடைய ராஜா” எனும் மேல் விலாசத்தைப் போடுவித்தான் .
இரண்டாவது ஜீவன் காளை முகமுள்ளது
காளை எந்தக்கடினமான வேலைக்கும் பயன்படுவது வேலை செய்யும் பொழுதே சாட்டையால் அடிக்கப்படும் , தார்க்குச்சியினால் குத்தப்படும் .
இது இயேசுவைக் குறிக்கும் , தேவகுமாரன் ஊழியங்கொள்ளும்படிவராமல் ஊழியம் செய்யவே வந்தார் . மாற்கு சுவிசேஷம் பூமியிலே தேவகுமாரன் செய்த ஊழியத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது. அவருடைய ஊழியத்தைக் கண்ணால் கண்ட ஒருவன் எழுதினது போல எழுதப்பட்டது. இயேசுவின் பிறப்பைப்பற்றியோ, வம்சவரலாறையோ பற்றி எழுதாமல் அவருடைய ஊழியத்தை மட்டுமே எழுதியுள்ளது. மாற்கு சுவிசேஷம் இந்த இரண்டாம் ஜீவனுக்கு ஒப்பானது.
மூன்றாம் ஜீவன் மனுஷமுகம் போன்ற முகமுள்ளதாயிருந்தது.
இது இயேசு பூமியில் வாழ்ந்த போது பூரண மனுஷனாய் , மனிதத் தன்மையுடையவராய் வாழ்ந்தார் என்பதைக் குறிக் கிறது, யோ. 1:14ல் அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் , நமக்குள்ளே வாசம் பண்ணினார் ; அவருடைய மகிமையைக் கண்டோம் ; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. பவுலும் பிலி. 2: 6-7 ல் அவர் தேவனுடைய ரூபமாயிருந்ததும், தேவனுக்கு சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். இந்த மூன்றாம் ஜீவன் இயேசு பூமியில் மனிதனாய் வாழ்ந்ததை நினைத்துப் போற்றினது.
இது லூக்கா சுவிசேஷத்தின் மையப்பொருள் , மத்தேயு சுவிசேஷம் யூதருக்கு எழுதப்பட்டபடியால் இயேசுவை ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு என்று எழுதினான். ஆனால் லூக்காவோ இயேசுவை பூரண மனிதனாகக் காட்ட இயேசுவின் வம்சத்தை ஆதாமிலிருந்து துவக்கினான். ஆகவே இயேசுவை இரண்டாம்
ஆதாம் என்கிறோம்.
4:7 நான்காம்ஜீவன் பறக்கிறகழுகுக்கொப்பாகவுமிருந்தது
இது இயேசுவை தேவனாகவே காட்டுகிறது, இயேசு மனுஷகுமாரன் என்றாலும்தன்னை தேவகுமாரனாகிய மேசியா என்றே கூறினார் . ஜனங்கள் நம்பவில்லை. சமாரிய ஸ்திரியுடன் பேசும் பொழுது தான் மேசியா என்று கூறினார்
உபாகமம் 32:11, 12ல் தேவனை கழுகுக்கொப்பிடுவது சரியென்று தெளிவாகக் காணப்படுகிறது
சிங்கம் காட்டு மிருகங்களுக்கு ராஜா
காளை பாரஞ்சுமக்கும் மிருகங்களுக்கு ராஜா (முதன்மையானது)
மனிதன் சிருஷ்டிக்கு ராஜா
கழுகு பறக்கும் பட்சிகளுக்கு ராஜா. இந்த நான்கு ஜீவன்களும் தேவனை பரலோகத்தின் ராஜாயென்றே துதித்துப் போற்றின.
4:8 அந்த நான்கு ஜீவன்களும் இருந்தவரும் , இருக்கிறவரும் வருகிறவருமாகிய தேவனாகிய கர்த்தரை பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வின்றி துதித்துக் கொண்டிருந்தன. இந்த ஜீவன்கள் துதிக்கும்பொழுது இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து ஆராதித்தனர். இது பரலோகத்திலுள்ள ஒருமைப்பாட்டையும் , தேவனை துதிக்கும் ஆசையையும் காட்டுகிறது. நாமும் பரலோகத்திலிருக்கும் பொழுது இப்படியே துதித்துக் கொண்டிருப்போம்.
Author: Rev. S.C. Edison