வெளிப்படுத்தின விசேஷம் 1- விளக்கவுரை

அதிகாரம்- 1

 “மகிமைபடுத்தப்பட்ட கிறிஸ்துவின் தரிசனம்”
“Vision of the Glorified Christ” 

1. வச 1- 8 - இனி சம்பவிக்கப்போகிறவைகளை கர்த்தர் யோவானுக்கு வெளிப்படுத்துகிறார். நடந்து முடிந்த சரித்திரத்தை அல்ல. 
யோவானுக்கு சர்வ மகிமையோடு தரிசனமளித்தவர் சர்வ பூமிக்கும் அவ்விதமாகவே சீக்கரத்தில் ஒருநாள் வெளிப்படுவார். அவரை சிலுவையில் அறைந்தவர்களும் கூட அவர் வருவதை கண்டு புலம்புவார்கள்.சங்கீதம் 96: 13 

2. வச 9, 10: கி.பி 65 ஆம் ஆண்டு, பவுல் மரித்து 30 ஆண்டுகள் கழித்து யோவான் சுவிசேஷகனுக்கு பத்மு தீவிலே கிறிஸ்து தமது சர்வ மகிமையோடு காட்சியளித்தார். சுவிசேஷகனானிய யோவான் தான் செய்த சுவிசேஷ திருப்பணிகளுக்காக தண்டனையாக இங்கு நாடு கடத்தப்பட்டிருந்தான். யோவான் தான் தன்னந்தனியே தள்ளப்பட்டிருந்த ஆபத்தான சூழ்நிலையை குறித்து முறுமுறுக்காமல், தனது நேரத்தை ஊக்கமான ஜெபத்தில் செலவிட்டு ஆவிக்குள்ளான அனுபவத்திற்கு கடந்து சென்றான். சர்வ வல்ல தேவன் தன்னோடு இடைபடுவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டதால் மகிமைபடுத்தப்பட்ட கிறிஸ்து யோவானுக்கு தரிசனையானார். 

நம்முடைய திட்டங்களும் வழிகளும் முடக்கப்பட்டுவிட்டன என்று நாம் நினைக்கிற சூழ்நிலையில், கர்த்தர் நம்மை சந்திக்க வேண்டுமாயின், முறுமுறுக்காமல், சோர்ந்து போகாமல் தொடர்ந்து அவரை நம்பி ஊக்கமாக ஜெபிக்கும்போது கர்த்தர் தமது சித்தத்தின்படி பெரிய திட்டத்தை நிறைவேற்றுவார். சங்கீதம் 93: 1, எரேமியா 29: 11

3. வச 4, 11, 19: கர்த்தர் சின்ன ஆசியாவிலுள்ள(Asia Minor-Turkey) 7 சபைகளுக்கு மிக முக்கியமான செய்தியை யோவான் மூலம் அனுப்புகிறார். இந்த 7 சபைகளும் உள்ள துருக்கியின் கிழக்குக் கடற்கரைக்கு மிக அருகாமையில் பத்மு தீவு அமைந்துள்ளது. எனவே யோவான் மிக எளிதில் ஆவியானவரின் செய்தியை 7 சபைகளுக்கும் அனுப்ப முடிந்தது. 7 என்பது பூரணத்தைக் காட்டுகிறது. ஆகவே இந்த 7 சபைகளும் உலகிலுள்ள அனைத்து சபைகளுக்கும் அடையாளமாக இருக்கிறது.

4. வச 12,13, 20: கர்த்தர் தமது சபை உலகத்திற்கு ஒளியாயிருக்க வேண்டுமென்பதற்காக, அதன் மத்தியில் உலாவி தொடர்ந்து பராமரித்து போஷித்து உயிர்ப்பித்துக்கொண்டேயிருக்கிறார். மத்தேயு 5: 14- 16.ஏசாயா 42: 3

5. வச 14,15:  கிறிஸ்து யோவானுக்கு தம்மை சர்வ வல்ல தேவனாக காண்பித்தார். பூரண மகிமையோடு தம்மை வெளிப்படுத்தினார். யோவான் கண்ட இந்த தரிசனம் தானியேல் பக்தன் கண்ட தரிசனத்திற்கு ஒப்பாக இருந்தது. தானியேல் 7: 9

6. வச 16,20,6: கர்த்தர் தமது வலது கரத்தில் 7 சபைகளுக்குறிய 7 தூதர்களை ஏந்தி நட்சத்திரங்களாக பிரகாசிக்கச்செய்கிறார். இந்த 7 தூதர்களும் யார் என்ற விளக்கம் வேதத்தில் பார்க்கும்போது, 1) சபைகளின் ஊழியர்கள் (2 கொரி 8: 23)  2) சபைகளின் பணிவிடை தேவ தூதர்கள்  எபி 1: 14. சங் 104: 4, யோவான் 5: 33, 35.

7. வச 17, 18: மரித்தும் உயிரோடு எழுந்தவர் கிறிஸ்து ஒருவரே. நம்மையும் உயிரோடு எழுப்புவார். லூக்கா 24: 5, யோவான் 5: 33,35.

Author: Rev. Dr. R. Samuel 


வெளிப்படுத்தின விசேஷம் 1- விளக்கவுரை

அதிகாரம் 1:

யோவான் இயேசுவை தரிசித்தல்

யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம்

யார்மூலம்? தேவன் - இயேசு - தூதன் - யோவான் - நமக்கு

வச 1-3 ஆசீர்வாதம்; வ 4-8 இயேசுவைப் பற்றிய யோவானின் சாட்சி வ 9-20 யோவானின் தரிசனம்.

வெளிப்படுத்தல் என்றால், மூலபாஷையில், மூடி மறைத்திருந்ததை இறந்து காட்டுதல் என்று அர்த்தம், ஒரு நாடகத்தில் இரை போடப்பட்டிருக்கும் வரை திரைமறைவில் உள்ளதை ஒருவரும் பார்க்க முடியாது, ஆனால் திரையைத்தூக்கும் பொழுது மேடையில் நடப்பதை எல்லாரும் பார்க்க முடியும். இதுவே வெளிப்படுத்தல், சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவற்றை மூடியிருந்த திரையைத் தேவன் விலக்கிmயோவானுக்குக் காட்டி, காண்பதை ஓர் புத்தகத்தில் எழுதி பூமியிலுள்ள யாவரும் அறிந்து கொள்ளும்படி செய் என்றார்.அதுவே யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம், சம்பவங்கள் இயேசுவையும், அவரது மகிமையையும் வெளிப்படுத்தினாலும், சீக்கிரம் சம்பவிக்க வேண்டியவைகளை உலகிலுள்ள யாவருக்கும், விசுவாசிகளுக்கும் விசுவாசியாத உலக மக்களுக்கும் வெளிப்படுத்தி, எச்சரித்து உணர்வடையச் செய்வதே இந்த புத்தகத்தின் நோக்கம், சீக்கிரத்தில் நடக்க வேண்டிய சம்பவங்களைப் பல வழிகளில் பிரிக்கலாம்

கீழே கொடுக்கப்பட்டுள்ளதும் ஒரு வழி.
1. சபைகளைக் குறித்தக் காரியங்கள் (அதி. 1.3)
2. பரலோகத்தில் நடக்கும் சம்பவங்கள் (4.5)
3. துன்பகால சம்பவங்கள் (6-19)
4. 1000 வருட அரசாட்சி (20)
5. புதிய வானம் புதிய பூமி ( 21-22)
OR
1. பூமியிலுள்ள சபைகள் (1-3)
2. ஆட்டுக்குட்டியானவரும், ஏழு முத்திரைகளும் (4-7)
3. ஏழு தேவதூதர்களும், ஏழு எக்காளங்களும் (8-11)
4. சாத்தானாலும், மிருகத்தினாலும் உபத்திரவப்படுத்தப்பட்ட சபை (12-14)
5. தேவகோபாக்கினையின் ஏழு கலசங்கள்(15-16)
6. பாபிலோனின் நியாயதீதீர்ப்பு( 17 - 19:10)

7.கடைசி நியாயத்தீர்ப்பும், கடைசி வெற்றியும்(19:11 -22)

இந்த புத்தகத்தில் ஏழு பாக்கியவான்களைக் குறிப்பிட்டுள்ளது:

1. வ 3 இந்தத் இர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், 'கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள்.

2. 14:13 கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல்பாக்கியவான்கள்.

3. 16:15 விழித்துக்கொண்டு தன் வஸ்திரங்களைக்காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான் .

4. 19:9 ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் . 

5. 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவான்.

6. 22:7 இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.

7. 22:14 அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள்பாக்கியவான்கள்.

வ 3: “வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறைவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள்” 

யோவான் காலத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். இன்று நம்மெல்லார் கையிலும் வேத புத்தகமுண்டு. அக்காலத்திலோ ஒருவரிடத்திலும் வேத புத்தகம் கிடையாது. வாசிக்கத் தெரிந்தவர்களும் மிகமிகச் சொற்பம், ஆகவே, வாசிக்கிறவன் என்ற ஒருமையும், கேட்கிறவர்கள் என்ற பன்மையும் ஜெபஆலயங்களில் மட்டுமே நடந்திருக்க முடியும், கேட்டவர்கள், அதைத் தங்கள் இருதயத்தில் பதித்து, அதைக் கைக்கொண்டிருப்பார்களென்றால் நிச்சயமாய் அவர்கள் பாக்கியவான்களே!

வாசிப்பதினாலும், கேட்பதினாலும் பரலோகம் போக முடியாது, கைக்கொள்ளுகிறவர்களே பரலோகம் போகும்
பாக்கியவான்கள். ஆகவே இந்த புத்தகத்தை அடிக்கடி. கவனமாய் பயபக்தியோடு படிக்க வேண்டும், எத்தனை முறை வாசித்தாலும் விளங்கவில்லையே! எப்படி கைக்கொள்ளுவது? சுவிசேஷகர் ஜாண்வெஸ்லிக்கும் இதே பிரச்சனை இருந்தது: ஆனாலும் விளக்க உரை நூலின் உதவியோடு, சிலவற்றை புரிந்துகொண்டார். புரியாதவைகளைப் பரலோகம் சென்ற பின் அறிந்து கொள்வேன் என்றார். நாமும் இப்படியே விசுவாசிக்க வேண்டும். பலகாரியங்கள் நமக்கு விளங்கவில்லையென்றாலும் நம்புகிறோம் செய்கிறோம். நம் சரீரம் வியாதியினால் பெலவீனப்படுகிறது. சத்துணவு சாப்பிடுகிறோம் சரீரம் எப்படி பெலப்படுகிறது? தெரியாது!ஆனாலும்சாப்பிடுகிறோம் சரீரம் பெலப்படுகிறது! தாகம் எடுக்கிறது தண்ணீர் குடிக்கிறோம் தாகம் தீர்கிறது. தண்ணீர் எப்படி தாகத்தைத் தீர்க்கிறது தெரியாது. ஆனாலும் தாகம் தீர்க்கும் வழி தெரியும். அப்படியே இந்தப் புத்தகத்திலுள்ள விளங்கக் கூடியவைகளைக் கடைப்பிடிப்போம், விளங்காதவைகளை விசுவாசிப்போம் பரலோகம் போகும் பாக்கியவான்களாகுவோம்.

வ 4: யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கு எழுதுகிறதாவது:

நாம் வசிக்கும் இந்திய தேசம் ஆசியாக்கண்டத்திலிருக்கிறது, இந்த ஆசியாவா சொல்லப்பட்டுள்ளது? இல்லை. வேதாகமத்தின் கடைசிப்பக்கத்தில் பவுல் அப்போஸ்தலன் பிரயாணம் பண்ணின தேசங்கள் என்ற வரை படத்தைப் பார்த்தால் எந்த ஆசியா என்பது விளங்கும், இது ரோமப் பேரரசின் ஒரு மாகாணம், இதற்கு எபேசு தலைநகரமாயிருந்தது, இந்த ஆசியாவில் ஏழுக்கும் அதிகமான சபைகள் இருந்தன. “ஏழு” என்பது வேதத்தில் பூரணத்தைக் குறிக்கும் ஒரு எண், எனவே முக்கியமான ஏழு சபைகளுக்கு மட்டும் இந்த நிருபத்தை அனுப்ப யோவான் கட்டளை பெற்றான். அதுவே ஏழு சபைகளுக்கும் அனுப்பப்பட்டு வாசிக்கப்பட்டது.

தேவனுடைய பெயர்களில் அவர் காலத்துக்குட்படாத நித்தியர் என்பதைக்குறிக்கும் பெயர் “இருக்கறவராகவே இருக்கிறேன்" என்பது (யாத், 3:14) இதை நினைவில் கொண்டே போவான் இருக்கிறவரும், இருந்தவரும், வரப்பேரகிறவரும் என்று வரிசைப்படுத்தி எழுதியிருக்கிறான்,

இந்த வரிசை தேவனுடைய திரித்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது..

இருக்கிறவரும் : முடிவில்லாத நித்திய பிதாவைக் குறிக்கும்

இருந்தவரும்: இது குமாரனாகிய இயேசுவைக் குறிக்கும் யோவான் 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது, எனவே இருந்தவர் என்பது குமாரனைக்குறிக்கும்,

வரப்போகிறவர்: இயேசு இன்னும் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழாததால் பரிசுத்த ஆவியானவர் இன்னும் அருளப்படவில்லை,

பெந்தேகோஸ்தே நாளில்தான் ஆவியானவர் அருளப்பட்டார். ஆகவே வரப்போகிறவர் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கும்.

எனவே இருக்கிறவரும், இருந்தவரும், வரப்போகிறவரும்என்பது தேவனின் திரித்துவ தன்மையைக் காட்டுகிறது.

சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகள் 7 வித்தியாசமான ஆவிகளைக் குறிக்காமல் பூரணராகிய
பரிசுத்தாவியையே குறிக்கும்,

வ 5: உண்மையுள்ள சாட்சி: யோவான் 5:37; 10:25 பிதாவுக்கு உண்மையுள்ள சாட்சி,

மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பலன்: இயேசு பூமியின் ராஜாக்களுக்கு அதிபதி: ராஜாக்களைத்தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ராஜாக்களின் இருதயங்களை நீர்க்கால்களைப் போல் திருப்புகிறவர் ராஜாதி ராஜாவுமானவர்.

வ 6: நம்மிடத்தில் அன்புகூர்ந்து; நாம் தேவனுக்குத் துரோகிகள், பலவீனர்கள் சத்துருக்களாயிருக்கையில் நமக்காக மரித்து தமது அன்பை வெளிப்படுத்தினார். நமது: பாவங்களுக்கான கிரயமாகத் தம்முடைய மாசற்ற, விலையேறப்பெற்ற பரிசுத்த ரத்தத்தை சிலுவையிலே சிந்தி நம்மைக் கழுவி மீட்டார். அந்த அன்பினாலேயே நம்மை ராஜாக்களும், ஆசாரியருமாக்கியிருக்கிறார். எதற்கு, ராஜா? பிசாசையும் அவன்சோதனைகளையும் ஜெயிக்கவும், பாவத்தை மேற்கொள்ளவும் நம்மை ராஜாக்களாக்கினார். நமக்காகப் பிதாவினிடத்தில் பேச. பலி செலுத்தும் ஒர் ஆசாரியன் தேவையில்லை என்றாக்கத் தாமே பலியாகி, நம்மை ஆசாரியர்களாக்க, பிதாவோடு நேரடியாகப் பேசும் சிலாக்கியத்தை உண்டாக்கினார்.

வ 7: இதோ மேகங்களுடனே வருகிறார் அப்.1:9.11ல் சொல்லப்பட்டிருப்பது இப்படி நிறைவேறும். இயேசுவின் வருகையே இப்புத்தகத்தின் முக்கியச் செய்தி, எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டதிலிருந்து வருகை ஆரம்பிக்கிறது. கண்கள் யாவும் அவரைக் காணும், இது டிவி, கம்ப்யூட்டர், செல்ஃபோன் மூலம் சாத்தியமாகும். இது யோவானுக்கோ அல்லது அந்த காலத்தில் வாழ்ந்தவர்களுக்கோ நிச்சயமாய் விளங்கியிருக்காது. உலகத்தார் யாவரும், விசேஷமாக யூத கோத்திரத்தார் யாவரும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள். இயேசுவை சிலுவையிலறைந்தவர்களும், ஒப்புக்கொடுத்தவர்களும் மரித்துப்போனார்களே, அவர்கள் எப்படிக் காண்பார்கள்?

தேவன் அவர்களை உயிரோடு எழுப்புவார். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை மகிமையின் ராஜாவாகக் காணும் பொழுது யூதர்களின் மனநிலை எப்படியிருக்கும்? ஐயோ! இவர் மேசியா என்றறியாமற் போனேனே! என்று புலம்புவார்கள். இன்றும் எருசலேம் தேவாலயத்தின் மேற்குச்சுவரில்  தலையை முட்டிமுட்டி 'மேசியாவே வாரும்! என்பவர்களும், இயேசுவை மேசியாவாகக் காணும் பொழுது, திகிலுற்று புலம்புவார்கள், சக.12:10-14 வரை வாசித்தால், தாவீது கோத்திரத்தார் அதாவது இஸ்ரவேல் தேசத்தார் யாவரும் மனங்கசந்து அழுவார்கள் (செப். 1:14). மேசியாவைப் புறக்கணித்து சிலுவையிலறைந்ததற்காய் கோத்திரம் கோத்திரமாக அழுவார்கள். புறஜாதியார் ஏன் அழுவார்கள்? இவர்தான் மெய்யான தேவன் என்று அறியாமற் போனோமே என்று அழுவார்கள். நாமும் பாவம் செய்யும் பொழுது அவரை சிலுவையில் அறைகிறோம். அவர் வரும்பொழுது நாமும் உயிர்ப்பிக்கப்படுவோம். நாம் செய்த பாவங்களும் அக்கிரமங்களும் நமது நினைவிற்கு வரும்பொழுது, ஐயோ என்னை சந்திக்கும் கிருபையின் காலத்தை அறியாமற்போனேனே! மனந்திரும்பாமற் போனேனே! என்று புலம்புவோம். அவருடைய வருகையில் நான் புலம்பாமல் மகிழ்ந்து பாட வேண்டுமென்றால், செப். 2:1-3வரை உள்ளபடி வாழ வேண்டும். இதை வாசிக்கிற சகோதரனே! நீர் எப்படி? புலம்புவீரா அல்லது பாடுவீரா? மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யடி சமீபித்திருக்கிறது, அப்படியே ஆகும் ஆமென்; இது நிச்சயமாய் நடக்கும், அப்படியே நடக்கட்டும் . அப்பொழுதுதான் யூதர்கள் ரட்சிக்கப்பட முடியும்,

வ 8: தேவன் காலத்தைக் கடந்தவர். அவரே ஆதியும், அந்தமுமானவர். ஆரம்பமும், முடிவுமில்லாதவர். அல்பாவும், ஒமேகாவுமானவர். ஒரு வட்டம் காலத்தைக் குறிக்கும். எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறதென்று சொல்ல முடியுமா? முடியாது. அதேபோல தேவனும் ஆரம்பமும் முடிவுமில்லாதவர், ஆனால் சிருஷ்டிக்கு ஆரம்பமும், முடிவும்  உண்டு. தோற்றமும், அழிவுமுண்டு. கால வட்டத்திற்கு உட்பட்டது.

வ 9: உங்கள் சகோதரன்: நாம் அனைவரும் இயேசுவின் பிள்ளைகள், ஆகவே நாமும் யோவானோடு கிறிஸ்துவுக்குள் சகோதரர். யோவான் கிறிஸ்துவின் நிமித்தம் அனுபவித்த உபத்திரவங்கள் நமக்கும் வரும். அவருடைய ராஜ்யத்திற்கும், பொறுமைக்கும் பங்காளியாகிய யோவானாகிய நான் குற்றம் செய்து பத்மு தீவில் சிறை வைக்கப்படாமல், தேவ வசனத்தினிமித்தமும், கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும் சிறையிலடைக்கப்பட்டிருக்கறேன் என்றான். டொமீஷியன் என்ற. கொடிய ராயன் கிறிஸ்தவர்களைச் சித்ரவதைப்படுத்துவதில் மகிழ்பவன், அவன்தான் யோவானை பத்முவில் சிறை வைத்தவன். இந்திய சுதந்தரத்திற்காய் போராடியவர்களை, பிரிட்டிஷ் அரசாங்கம் அந்தமான் தீவுகளில் சிறையிலடைத்துக் கொடுமைப்படுத்தியது. அதே போல கிறிஸ்துவின் ராஜ்ஜியத்திற்காய் பாடுபட்ட யோவானை டொமீஷியன்  பத்முவில் சிறை வைத்தான். பவுலுக்கும் இப்படியே நடந்தது. பிலி.1.12-14ல் தன் கட்டுகளும் கிறிஸ்துவுக்கானவைகளே! தவறு செய்து, துரோகம் பண்ணி சிறைக்குள் தள்ளப்படவில்லை. சுவிசேஷத்திற்காகவே சிறைப்பட்டேன் என்கிறான். யோவானும் இதையே சொல்கிறான், டொமீஷியன் மரித்த பின் ராயனான நெவேரா யோவானை விடுவித்து எபேசுவுக்கு கிபி.96ல் அனுப்பி விட்டான் என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

வ 10 கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்: இந்த கர்த்தருடைய நாளென்பது வருகையின் நாளுமல்ல, யூதர்களின் ஓய்வுநாளுமல்ல, இது கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள், புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாம் இந்த நாளையே ஓய்வு நாளாகக் கொண்டாடுகிறோம், இந்த நாளில் யோவான் ஆவியினால் நிரப்பப்பட்டான், ஆவியானவரால் நிரப்பப்படுவதே ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டிய சரியான முறை, ஏசாயா 58:13ன்படி நாம் நடந்தால் நமக்கும் ஆவியானவரின் நிறைவு கிடைக்கும், நமக்கும் தேவனின் சத்தம் கேட்கும், அதற்குக் கீழ்ப்படிந்தால் ஆவியானவர் நம்மையும் வழி நடத்துவார், அந்த நாள் நமக்கு மனமகிழ்ச்சியின் நாளாயிருக்கும், வருகையில் நாம் புலம்ப மாட்டோம்.

யோவானுக்குப் பின்னாக எக்காள சத்தம் போன்ற பெரிதான சத்தம் கேட்டது. யோவானால் அதைக் கேட்காமல் இருந்திருக்கவே முடியாது. தேவன் நம்மிடம் பேசுவாரென்றால் அந்த சத்தமும் தெளிவாகக் கேட்கும், தேவனுடைய சத்தம் எனக்குக் கேட்கவில்லையென்றோ, அது தேவசத்தமோ இல்லையோ என்று என்னால் அறிய முடியவில்லையென்றோ ஒருவரும் சாக்குப்போக்கு சொல்ல முடியாது.

வ 11 அது: நான் அல்பாவும், ஒமேகாவும், முந்தினவரும், பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புத்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா,பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது

ஆசியாவில் இந்த ஏழு பட்டணங்கள் மட்டும்தான் இருந்தனவா? அல்லது வேறு பட்டணங்களும் இருந்தனவா? வேறு பட்டணங்களும், சபைகளுமிருந்தன. அந்தியோகியா கொலோசே பட்டணங்களும் இருந்தனவே! அப்படியானால் இந்த ஏழு சபைகளை மட்டும் தெரிந்தெடுக்கக் காரணமென்ன? தேவன் அவற்றைத் தெரிந்து கொண்டார். அவ்வளவுதான் தெரியும், ஒருவேளை இந்த ஏழு சபைகளும் யோவானின் கண்காணிப்பில் இருந்திருக்கலாம்,

இந்த சபைகள் இன்றும் உள்ளனவா?

ஏழு சபைகளும், ஏழு நகரங்களும்

               பெயர்                                                     அர்த்தம்                                        இன்றைய பெயரும் நிலையும்
              எபேசு          விரும்பப்படத்தக்கது           அலாசாலிக் மண்மேடு
            சிமிர்னா               நறுமணம், கசப்பு    இஸ்மிர் குக்கிராமம் ஆராதனை உண்டு
           பெர்கமு           உயர்த்தப்பட்டது            பெர்கமா மண்மேடு
              தியத்தீரா       மனத்தாழ்மையின் பலி              அக் ஹிசார் மண்மேடு
               சர்தை              புதுப்பித்தல்           ஸார்ட் மேய்ப்பர்களின் இடம்
           பிலதெல்பியா           சகோதர அன்பு                 அல் செகீர் மண்மேடு
       லவோதிக்கேயா      ஜனங்களை  நியாயந்தீர்த்தல்   டெனிசில் நரிகள் ஓநாய்கள் வசிக்கும் இடம்

இவை அனைத்தும் மேற்கு துருக்கியிலிருந்த முக்கிய நகரங்கள், ஆனால் இன்று இவை முக்கியத்தை இழந்து
மண்மேடுகளாகியிருக்கின்றன புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் இவற்றைத் தோண்டி ஆராய்ந்து வருகின்றனர். சர்தை ஒரு ஆடு - மாடு மேய்ப்பர்களின் குக்கிராமமாயிருக்கிறது. லவோதிக்கேயாவில் நரிகளையும் ஓநாய்களையும் தவிர மனிதர்களே கிடையாது, சிமிர்னா தீசியஸ் என்பவரால் கட்டப்பட்ட நகரம், அதற்கு தன் மனைவியின் பெயரையே சிமிர்னா என்று வைத்தார். இன்றும் அது ஒரு சிறு கிராமமாக உள்ளது. 

எபேசு சபை: பவுலால் ஆரம்பிக்கப்பட்ட சிறந்த பெரிய சபை, எபேசு பட்டணம் ரோம மாகாணமாகிய ஆசியாவின் தலைநகரம். ஆசியாவின் வெளிச்சம் என்றும், ஆசியாவின் முதன்மை நகரமென்றும் அழைக்கப்பட்டது. 7 உலக அதிசயங்களில் ஒன்றான தியானாளின் ஆலயம் இங்குதானிருந்தது துன்மார்க்கம் நிறைந்த பட்டணம், “விரும்பப்படத்தக்கது” என்ற அர்த்தமுடைய இந்தப் பட்டணம் இன்று அழிந்து, மண்மேடாக மாறி அலா சாலிக் என்ற இடமாக மாறி விட்டது. வீடுகளே கிடையாது, தேவனுக்கென்று பக்தி வைராக்கியமாயிருந்த சபைகள் இப்படி அழிந்து போகக் காரணமென்ன? மூன்று காரணங்களைக் கூறலாம்.

1. கிறிஸ்தவத்தை எதிர்த்து அழிக்கும் பேரரசுகள்
2. மனித அறிவினால் உருவாக்கப்படும் மத சடங்காச்சாரங்களும், மூட நம்பிக்கைகளும்.
3. கிறிஸ்தவ ஒழுக்க நெறிகளைத் தங்கள் வசதிக்கேற்ப திரித்துக் கொள்ளுதல். 

பத்மு தீவிலிருந்து யோவான் விடுதலையான பின், எபேசுவிலிருந்து ஊழியம் செய்தான். இயேசுவின் தாயாகிய மரியாளையும் எபேசுவில் வைத்துப் பராமரித்தான் என்றும் சொல்லப்படுகிறது. தீமோத்தேயுதான் இந்த சபையின் தூதன் என்பார்கள்.

வ 12-13 அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பின போது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும் அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.

யோவான் திரும்பி நிலையங்கி தரித்து மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்தவரைக் கண்டான். அது இயேசுவே. உயிர்த்தெழுந்த இயேசு ஆசாரியனாகவும், ராஜாவாகவும் யோவானுக்குதரிசனமானார். நிலையங்கி ஆசாரியத்துவத்தைக் காட்டும், பொற்கச்சை ராஜாவுக்கே உரியது. (எபி, 4:14-16; 7:24, 26; 9:11-12). இயேசு பிரதான ஆசாரியராக இன்று நமக்குச் செய்வதென்ன? 1 யோவான் 2:1 ஐ வாசியுங்கள். ஒருவன் பாவஞ் செய்வானானால், நீதிபரராயிருக்கிற இயேசு நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். அவர் நமக்காகப்பரிந்துபேசுவதால்தான், நாம்நிர்மூலமாகாமல் ஜீவனோடிருக்கிறோம்.

வ14 தேவனைத் தரிசித்தவர்கள்

பல பரிசுத்தவான்கள் தேவனை தரிசனத்தில் கண்டிருக்கிறார்கள். ஏசாயா தேவாலயத்தில் தேவனைக் கண்ட போது, அவருடைய பரிசுத்தத்தின் வல்லமைக்குமுன் நிற்க முடியாமல் ஐயோ! அதமானேன்! நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன் என்று அலறினான் (ஏசாயா 6:5).

எசேக்கியேல் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் மத்தியிலே இருக்கும் பொழுது வானங்கள் திறக்கப்பட தேவதரிசனங்களைக்கண்டான் (எசேக் 1-1 ),26-28) நீலரத்தினம் போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும், அந்த சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷ சாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது. அவருடைய இடுப்பாகக் காணப்பட்டது முதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக் கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டது முதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச்சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக் கண்டேன்.

அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன். தானியேல் தேவனை தரிசித்தான். தானி. 7:13ல் நான் பார்த்துக் கொண்டிருக்கையில் இதோ, மனுஷ குமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்.

தானி 10:4-6ல் நான், இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையிலிருந்து என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன், அவருடைய சரீரம் படிகப்பச்சையைப் போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப் போலவும், அவருடைய புயங்களும், அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப் போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப் போலவும் இருந்தது.

யோவான் கண்ட தரிசனம்

அவருடைய சிரசும் மயிரும் வெண் பஞ்சைப்போலவும், உறைந்த மழையைப் போலவும் வெண்மையாயிருந்தது: வெண்மை அவருடைய பரிசுத்தத்தைக் குறிக்கும். அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப்போலிருந்தது: அவருடைய பார்வைக்கு மறைவான ருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடையகண்களுக்குமுன்பாகநிர்வாணமாயும், வெளியரங்கமுமாயிருக்கிறது. (எபிரேயர் 4:13) அக்கினிமயமான கண்கள், இருதயத்தை ஊடுருவும் வல்லமையும், பரிசுத்தமும் நிறைந்தவை! அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது: வெண்கலம் தேவனுடைய நீதியைக் குறிக்கும், அதனால் தான் பாவத்திற்குக் கிரயமாக ரத்தம் சிந்தப்படும் பலிபிடத்தை மாத்திரம் பொன்னினால் மூடாமல், மோசே வெண்கலத்தால் மூடினான்.

அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சல் போலிருந்தது: ஆர்ப்பரித்து விழும் அருவியினருகில் நாம் ஒருவரோடொருவர் பேச முடியாது. ஏனென்றால் அருவியின் சத்தம் அவ்வளவு அதிகமாயிருக்கும். சில கல்யாண மண்டபங்களில் ஒலிபெருக்கியின் சத்தம் அதிகமாயிருந்தால் நம் பக்கத்திலிருப்பவருடன்கூட பேச முடிவதில்லை. அப்படியானால் தேவன் பேசும் பொழுது வேறு ஒருவருடைய சத்தமும் கேட்காது. சாத்தானின் சத்தமும் கூட கேட்காது.

வ 16: தமது வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்தக்கொண்டிருந்தார். நட்சத்திரங்கள் பூமியைவிட பல கோடி மடங்கு பெரியவை. அதில் ஏழு நட்சத்திரங்களை தமது கரத்தில் ஏந்திக்கொண்டிருப்பவராகக் காட்சியளித்தால் அது எவ்வளவு பயங்கரமானதாயிருந்திருக்கும்!

மேலும் அவருடைய வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது: பெருவெள்ள இரைச்சல் போன்ற சத்தத்தோடு அவர் வாயிலிருந்து தேவனுடைய வார்த்தை புறப்பட்டது. அதாவது தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பேசினார். அவருடைய முகம் வல்லமையாய் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது, எந்த ஒரு மனிதனும் சூரியனை வெறுங்கண்ணால் பார்க்க முடியாது. மத். 17:2ல் மறுரூப மலையில் இயேசுவின் முகம் சூரியனைப்போல் பிரகாசித்தது. அதைக்கண்ட சீஷர்கள் பயந்தார்கள்.

யோவான் முன்பே இதைப் பூலோகத்தில் கண்டிருந்தும் இப்பொழுது செத்தவனைப்போல கீழே விழுந்தான்.

ஏசாயா, எசேக்கியேல், தானியேல் இயோவான் அனைவரும் தேவனை அக்கினிமயமாகவே கண்டார்கள். இவர்களுடைய தரிசனங்களுக்கிடையில் பல நூற்றாண்டுகள் கடந்திருந்தாலும் தேவன் கிருபையிலும், பரிசுத்தத்திலும் மாறாதவராகவே இருந்தார். இன்றும் அவர் மாறவேயில்லை. நம் வலக்கரத்தைப் பிடித்து “பயப்படாதே” என்றே சொல்கிறார். இந்த தேவன் நமது தேவனாயிருப்பது எவ்வளவு பெரிய சிலாக்கியம்!

வ17-20 இயேசு யோவானுக்குக் கொடுத்த கட்டளை: யோவான் கடைசி ராப்போஜனத்தில் அவர் மார்பில் சாய்ந்திருந்தது உண்மைதான். ஆனாலும் அவர் தம்முடைய மகிமையில் வரும்பொழுது அவரை சகிப்பவன் யார்?

வெளி. 6:15-17 இதை விளக்கமாகக்கூறுகிறது. மத்தேயு17:7ல் செய்தது போலவே இப்பொழுதும் இயேசு தம்முடையவலது கரத்தை யோவான்மேல் வைத்து, பயப்படாதே என்றுதைரியப்படுத்தினார். என்ன சொல்லி பெலப்படுத்தினார்? பயப்படாதே! முன்பு உன்னோடிருந்தவரும் இப்பொழுது உயிருள்ளவருமாயிருக்கிற இயேசு நானே. நீ அறிந்திருக்கிறபடி நான் சிலுவையில் மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து சதாகாலமும் ஜீவிக்கிறேன். மரணம் பாதாளம் ஆகியவற்றின் மேலுள்ள அதிகாரத்தை சாத்தானிடமிருந்து பறித்துக்கொண்டேன். அவைகள் இப்பொழுது என் அதிகாரத்தில் இருக்கின்றன. நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும் இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது, இரண்டாம்விசை யோவானுக்கு இந்த கட்டளை கொடுக்கப்படுகிறது, என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன்குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது,

ஏழு நட்சத்திரங்களும், ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம், சபையின் தூதன் என்பது சபையை நடத்தும் மூப்பனாகவோ, ஊழியக்காரனாகவோ இருக்கலாம்.

சபை ஒரு பொன் குத்துவிளக்கு, பொன் சோதிக்கப்பட்ட விசுவாசத்தைக்குறிக்கும். விளக்கு சாட்சியான வாழ்க்கையைக் குறிக்கும். சாட்சியாய் வாழும் விசுவாசிகளின் ஐக்கியமே சபை, அதுவே இயேசுவின் மணவாட்டி.

ஆசியாவில் அநேகம் சபைகளிருந்தன. இந்த ஏழு சபைகளை மட்டும் தேவன் தெரிந்தெடுத்து, அவைகளுக்கு யோவானைக் கொண்டு கடிதம் எழுதச் சொன்னது ஏன்? இந்தச் சபைகள் ஒரே காலகட்டத்தில் செயல்பட்டாலும், முற்றிலும் ஈறுபட்ட குறைகளும், நிறைகளும் கொண்டவை. ஒன்றிற்குறிய ஆலோசனை வேறு எந்த சபைக்கும் பொருந்தாது. அப்படியென்றால் இந்த ஏழு சபைகளைத் தெரிந்து கொண்டதின் நோக்கம் என்ன? கிறிஸ்தவ சபையின் சரித்திரத்தைக் கால அடிப்படையில் ஏழு (7) பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.  ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு சபையின் தன்மையையும் நடத்தையையும் பிரதிபலிப்பதாக உள்ளது.

1. எபேசு சபை காலம்: பெந்தேகோஸ்தே நாளிலிருந்து முதலாம் நூற்றாண்டு-கிபி100 வரை உள்ள காலம், அக்கினிமயமான நாவுகள் இறங்கியபொழுதிருந்த பக்தி வைராக்கியம் படிப்படியாகக் குறைந்து போன காலம், ஆதி அப்போஸ்தலர்கள் மரித்துப்போகும் வரையுள்ள காலம். ஆதி அன்பு தணிந்துபோன காலம்,

2. சிமிர்னா சபை காலம்: சபை துன்பப்படுத்தப்பட்ட காலம், கிபி100 - கிபி313 வரை

ரோமப்பேரரசு கிறிஸ்தவர்களை சிங்கங்களுக்கும், வாளுக்கும், அக்கினிக்கும் இரையாக்கின காலம், கான்ஸ்டன்டைன் பேரரசனாக வரும்வரை உபத்திரவம் தொடர்ந்தது, இக்காலத்தில் தான் இரத்த சாட்சிகள் சிந்தின ரத்தம், சபைகள் முளைத்துப் பெருகுவதற்கான விதையென்பது விளங்கினது..

3. பெர்கமு சபை காலம்: கிபி 314 - கிபி 590 வரை சபைகளுக்குள் தவறான போதனைகள் (பிலேயாமின் போதனையும், நிக்கொலாய் மதப் போதனையும்) சபைகளுக்குள் நுழைந்து வேசித்தனம், விபச்சாரம், விக்கிரகங்களுக்குப் படைத்ததவைகளைப் புசித்தல் போன்ற பாவங்கள் சபைகளில் காணப்பட்ட காலம்,,

4. தியத்தீரா சபை காலம்: கிபி 590 - கிபி1517 வரை கத்தோலிக்க சபையின் கை ஓங்கிய காலம், சாதாரண மனிதனுக்கு சத்தியம் மறைக்கப்பட்டு வேதாகமம்: தடை செய்யப்பட்ட இருண்ட காலம். இதை சாத்தானின் இருண்ட ஆயிர வருட ஆட்சி என்பர்.

5. சர்தை சபை காலம்: கிபி 1514 _ கிபி1700 வரை சபை மறுமலர்ச்சியடைந்த காலம், விக்ளிஃப், ஜாண் ஹஸ், லுத்தர், நாக்ஸ் போன்ற பக்தர்களால் மறுமலர்ச்சி அடைந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல சபை செயலற்று செத்தது போலாயிற்று, காரணம் கொள்கை வித்தியாசங்களினால் பல திருச்சபை பிரிவுகள் தோன்றின .

6. பிலதெல்பியா சபை காலம்: கிபி 1700 - கிபி 1900 வரை தேவன் வல்லமையாக அசைவாடி சபைகளில் பெரியஎழுப்புதல் ஏற்பட்ட காலம்.

சபைகளில் சுவிசேஷம் அறிவிக்கும் வாஞ்சை பொங்கி வழிந்தது. வெஸ்லி சகோதரர்கள், மூடி பிரசங்கியார், சார்ல்ஸ் ஃபின்னி, வில்லியம் கேரி, டேவிட் லிவிங்ஸ்டன், ஹட்ஸன் டெய்லர், அதோனிராம் ஜட்சன் போன்ற மிஷனரிகள் உலகத்தின் பல பகுதிகளில் சுவிசேஷ ஒளியேற்றிய காலம். தேவன் சபையை நேூத்ததால் இப்படிப்பட்டவர்களையும், இவர்களைத் தாங்கிய மிஷனரி சங்கங்களையும் எழுப்பி, அழிவின் விளிம்பிலிருந்த சபையை மீட்டு உயிர்ப்பித்தார். உலகெங்கும் தேவன் 'திறந்த வாசலை” வைத்ததால் மிஷனரி ஊழியம் வேகமாகப் பரவினது.

7. லவோதிக்கேயா சபை காலம் கிபி 1900 - இன்று வரை. நவீன இருச்சபை காலம், குளிரும் அனலுமற்ற காலம், தேவபக்கியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்கிற காலம், வெதுவெதுப்பான காலம். சபையின் கிரியைகளை தேவன் அங்சகரிக்காத காலம். தேவனுக்கும், உலகப் பொருளுக்கும் ஊழியம் செய்ய முயற்சிக்கும் காலம்,

தாலாகாலமாய் சபையில் ஏற்பட்ட மாறுதல்களையும், மாற்றங்களையும் பார்க்கும் பொழுது ஒன்று தெளிவாகிறது. நம்மைநாமே ஆராய்ந்து பார்த்து. தேவனுக்குப் பிரியமில்லாதவைகளை நம்மிடத்திலிருந்து நீக்கிப்போட்டு மனந்திரும்பி பரிசுத்தமும். தாழ்மையுமாய் வேதத்தின்படி வாழ வேண்டும்.
வசனத்திற்குத் இரும்புவோம்; தேவனிடத்திற்குத் திரும்புவோம்.

Author: Rev. S.C. EdisonTopics: Tamil Reference Bible Revelation Tamil Reference Bible Revelation

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download