ஆகாய் 2:1-9

2:1 ஏழாம் மாதம் இருபத்தோராந்தேதியிலே ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று; அவர்:
2:2 நீ செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனோடும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனோடும், ஜனத்தில் மீதியானவர்களோடும் சொல்லவேண்டியது, என்னவென்றால்:
2:3 இந்த ஆலயத்தின் முந்தின மகிமையைக் கண்டவர்களில் உங்களுக்குள்ளே மீந்திருக்கிறவர்கள் யார்? இப்பொழுது இது உங்களுக்கு எப்படிக் காண்கிறது? அதற்கு இது உங்கள் பார்வையில் ஒன்றுமில்லாததுபோல் காண்கிறதல்லவா?
2:4 ஆனாலும் செருபாபேலே, திடன்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனே நீ திடன்கொள்; தேசத்தின் எல்லா ஜனங்களே, நீங்கள் திடன்கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்களுடனே இருக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
2:5 நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கை பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்.
2:6 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: கொஞ்சக்காலத்துக்குள்ளே இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன்.
2:7 சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
2:8 வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
2:9 முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.




Related Topics


ஏழாம் , மாதம் , இருபத்தோராந்தேதியிலே , ஆகாய் , என்னும் , தீர்க்கதரிசியின் , மூலமாய் , கர்த்தருடைய , வார்த்தை , உண்டாயிற்று; , அவர்: , ஆகாய் 2:1 , ஆகாய் , ஆகாய் IN TAMIL BIBLE , ஆகாய் IN TAMIL , ஆகாய் 2 TAMIL BIBLE , ஆகாய் 2 IN TAMIL , ஆகாய் 2 1 IN TAMIL , ஆகாய் 2 1 IN TAMIL BIBLE , ஆகாய் 2 IN ENGLISH , TAMIL BIBLE Haggai 2 , TAMIL BIBLE Haggai , Haggai IN TAMIL BIBLE , Haggai IN TAMIL , Haggai 2 TAMIL BIBLE , Haggai 2 IN TAMIL , Haggai 2 1 IN TAMIL , Haggai 2 1 IN TAMIL BIBLE . Haggai 2 IN ENGLISH ,