1. நம்மை நினைத்துக்கொள்பவர்
சங்கீதம் 115:12(9-18) கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்
சங்கீதம் 40:17 கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்.
சங்கீதம் 136:23 தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்.
1சாமுவேல் 1:19 கர்த்தர் அன்னாளை நினைந்தருளினார்.
நியாயதிபதிகள் 16:28 கர்த்தர் சிம்சோனை நினைத்தார்.
2இராஜாக்கள் 20:3 கர்த்தர் எசேக்கியாவை நினைத்தார்.
லூக்கா 23:42 சிலுவையில் இருந்த கள்ளனை நினைத்தார்
2. நம்மை அணைத்துக்கொள்பவர்
லூக்கா 15:20 (11-32) கெட்டக்குமாரனை மன்னித்து, மறந்து, கட்டி அணைத்து மீண்டும் மகனாக சேர்த்துக்கொண்ட தகப்பன்...
மாற்கு 10:16 (13-16) சிறுபிள்ளைகளை அணைத்து ஆசீர்வதித்தார்
மாற்கு 9:36(35-37) சிறுபிள்ளையை அணைத்துக்கொண்டு...
ஏசாயா 66:13 ஒரு தாய் தேற்றுவதுபோல் நான் தேற்றுவேன்
எண்ணாகமம் 11:12 தகப்பன் சுமந்துகொண்டுபோவதுபோல,
யோவான் 13:23(21-27) இயேசுவுக்கு அன்பாயிருந்த சீடன் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்.
3. நம்மை இணைத்துக்கொள்பவர்
ஏசாயா 54:7 இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும், உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.
சங்கீதம் 27:10 என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார்.
அப்போஸ்தலர் 2:47(38-47) இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.
மத்தேயு 23:37 கோழி தன் குஞ்சுகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக, எத்தனையோ தரம் கூட்டிச்சேர்க்க மனதாயிருந்தேன்.
செப்பனியா 3:20 உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்; உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன்
ஆகாய் 2:23 உன்னை நான் சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Author: Rev. M. Arul Doss