சகரியா 6:13 அவர் மகிமைப்பொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத் தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்
1. அனைத்தையும் ஆளுகிறவர்
1நாளாகமம் 29:12 (1-14) தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு.
2. ராஜ்யங்களை ஆளுகிறவர்
1நாளாகமம் 20:6 (1-6) தேவரீர் ஜாதிகளுடைய ராஜ்யங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது,
3. ஜாதிகளை ஆளுகிறவர்
சங்கீதம் 22:27,28 (23-31) பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்... ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.
4. சமுத்திரத்தை ஆளுகிறவர்
சங்கீதம் 89:9; லூக்கா 8:24 (22-25) தேவரீர் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப் பண்ணுகிறீர்.
5. சர்வத்தையும் ஆளுகிறவர்
சங்கீதம் 103:19 (1-22) கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரீகம் சர்வத்தையும் ஆளுகிறது.
6. சதாகாலமும் ஆளுகிறவர்
சங்கீதம் 145:13 (1-21); தானியேல் 4:3; 6:26 உம்முடைய சதா காலங்களிலுமுள்ள ராஜ்யம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலை முறையாகவும் உள்ளது.
7. பூமியெங்கும் ஆளுகிறவர்
சகரியா 9:10 அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும் நதிதொடங்கி பூமியின் எல்லைகள் பரியந்தம் செல்லும்.
Author: Rev. M. Arul Doss