சங்கீதம் 103:1-22

103:1 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.
103:2 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
103:3 அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,
103:4 உன் பிராணனை அழிவுக்கு விலக்கிமீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
103:5 நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது.
103:6 ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.
103:7 அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார்.
103:8 கர்த்தர் உருக்கமும், இரக்கமும் நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
103:9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.
103:10 அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.
103:11 பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.
103:12 மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.
103:13 தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
103:14 நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
103:15 மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது, வெளியின் புஷ்பத்தைப்போல பூக்கிறான்.
103:16 காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று, அது இருந்த இடமும் இனி அதை அறியாது.
103:17 கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.
103:18 அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.
103:19 கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.
103:20 கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.
103:21 கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.
103:22 கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி.




Related Topics



ஆளுகை செய்யும் ஆண்டவர்-Rev. M. ARUL DOSS

  சகரியா 6:13 அவர் மகிமைப்பொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத் தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார் 1. அனைத்தையும் ஆளுகிறவர் 1நாளாகமம் 29:12 (1-14)...
Read More



என் , ஆத்துமாவே , கர்த்தரை , ஸ்தோத்திரி; , என் , முழு , உள்ளமே , அவருடைய , பரிசுத்த , நாமத்தை , ஸ்தோத்திரி , சங்கீதம் 103:1 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 103 TAMIL BIBLE , சங்கீதம் 103 IN TAMIL , சங்கீதம் 103 1 IN TAMIL , சங்கீதம் 103 1 IN TAMIL BIBLE , சங்கீதம் 103 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 103 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 103 TAMIL BIBLE , PSALM 103 IN TAMIL , PSALM 103 1 IN TAMIL , PSALM 103 1 IN TAMIL BIBLE . PSALM 103 IN ENGLISH ,