1. வெறுப்பில் சாவை விரும்பும் மோசே
எண்ணாகமம் 11:4-15 இஸ்ரவேல் ஜனங்கள் இறைச்சிக்காக அழுது மோசேயிடம் கேட்கும்போது, என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும் என்று வேண்டிக்கொண்டான்.
எண்ணாகமம் 12:2-8 பிறகு கர்த்தர் முகமுகமாய் பேசினார்
2. பயத்தில் சாவை விரும்பும் எலியா
1இராஜாக்கள் 19:1-8 எலியா தீர்க்கத்தரிசி ஆகாப் ராஜாவின் மனைவி யேசபேலுக்கு பயந்து, தன் பிராணனைக் காக்க வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாக வேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும் என்று வேண்டுகிறான்.
2இராஜாக்கள் 2:9-11 பிறகு எலியா மரணத்தைக் காணாமல் பரலோகத்திற்கு ஏறிபோனான்.
3. கோபத்தில் சாவை விரும்பும் யோனா
யோனா 4:1-8 நினிவே மக்களை அழிக்காததினால் யோனாவுக்கு மிகவும் விசனமாயிருந்தது. இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னை விட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.
4. சாபத்தில் சாவை விரும்பும் யோபு
யோபு 3:1-11யோபு தன் பிறந்தநாளைச் சபித்து, நான் கர்ப்பத்தில் தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே சாகாமலும் போனதென்ன? என்று சபிக்க துவங்கினான்.
யோபு 42:12-17 யோபு இரட்டிப்பான ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டான்.
5. சோகத்தில் சாவை விரும்பும் எரேமியா
எரேமியா 20:17,18(14-18) என் தாயார் எனக்குப் பிரேதக்குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத சூழலுமாய் இருக்கத்தக்கதாகக் கர்ப்பத்திலே நான் கொலைசெய்யப்படாமற் போனதென்ன? நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன? நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்தில் இருந்து வெளிப்பட்டதென்ன?
Author: Rev. M. Arul Doss