எண்ணாகமம் 12:2-8

12:2 கர்த்தர் மோசேயைக் கொண்டுமாத்திரம் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்.
12:3 மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.
12:4 சடுதியிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் நோக்கி: நீங்கள் மூன்றுபேரும் ஆசரிப்புக் கூடாரத்துக்குப் புறப்பட்டுவாருங்கள் என்றார்; மூன்றுபேரும் போனார்கள்.
12:5 கர்த்தர் மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் போனார்கள்.
12:6 அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.
12:7 என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.
12:8 நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற்போனதென்ன என்றார்.




Related Topics


கர்த்தர் , மோசேயைக் , கொண்டுமாத்திரம் , பேசினாரோ , எங்களைக்கொண்டும் , அவர் , பேசினதில்லையோ , என்றார்கள் , கர்த்தர் , அதைக் , கேட்டார் , எண்ணாகமம் 12:2 , எண்ணாகமம் , எண்ணாகமம் IN TAMIL BIBLE , எண்ணாகமம் IN TAMIL , எண்ணாகமம் 12 TAMIL BIBLE , எண்ணாகமம் 12 IN TAMIL , எண்ணாகமம் 12 2 IN TAMIL , எண்ணாகமம் 12 2 IN TAMIL BIBLE , எண்ணாகமம் 12 IN ENGLISH , TAMIL BIBLE Numbers 12 , TAMIL BIBLE Numbers , Numbers IN TAMIL BIBLE , Numbers IN TAMIL , Numbers 12 TAMIL BIBLE , Numbers 12 IN TAMIL , Numbers 12 2 IN TAMIL , Numbers 12 2 IN TAMIL BIBLE . Numbers 12 IN ENGLISH ,