மரியாள் - கிருபை பெற்றவள்!
'கிருபை பெற்றவர்களும்' 'ஆசீர்வாதமாக' இருக்கும் ஜனங்களின் வாழ்க்கையும் 'சுகபோகத்துடனும்' 'கடினமற்ற' வாழ்க்கையாவும் இருப்பதாக அநேகர் நினைக்கின்றனர். அவர்கள் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும், அனைத்திலும் சிறந்து விளங்குபவர்களாகவும் மற்றும் அவர்கள் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது உற்சாகம் உடையதாகவும் காணப்படுகிறது. இருப்பினும், அவர்கள் என்னவோ பெரும்பாலான நேரங்களில் கிருபைக் கிடைக்கப்பட்டும் மனக்குமுறலுடன் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். "அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்" (லூக்கா 1:28).
1) ஆவிக்குரிய வாழ்வு:
தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் பொதுவாக ஆவிக்குரிய போராட்டத்தை எதிர்கொண்டே ஆக வேண்டும். எருசலேமில் இருந்த சிமியோன் என்னும் பேர் கொண்ட மனிதன் மரியாளிடம்; "உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்" (லூக்கா 2:35). ஆம், தேவனுடைய நோக்கத்தை அல்லது அவரின் திட்டத்தை நிறைவேற்றும் மக்களை சாத்தான் எப்போதும் தாக்குவான். தானியேலும் தேவனால் அதிகம் விரும்பப்பட்டவன், ஆனால் பாருங்கள் எவ்வளவு பாடுகளையும் ஆவிக்குரிய சோதனைகளையும் அவன் எதிர் கொள்ள வேண்டியிருந்தது (தானியேல் 10: 11,19).
2) உணர்வுபூர்வமான வாழ்வு:
இயேசுவின் 'கன்னித் தாயான மரியாள்' என்ற இந்த வார்த்தையின் சுமையை அவள் தாங்க வேண்டியிருந்தது. மேலும் தனிமையாக இருக்க வேண்டிய சூழ்நிலை, தனிமை என்பது மிக கொடுமையானது, அது மிகவும் கடினமாக இருந்திருக்கக்கூடும். ஆதலால், அவள் தனக்கு ஆறுதலைப்பெற அதாவது ஆவிக்குரிய ஊக்கத்தையும், தன் மனநிலைமையை தைரியமாக்கிக் கொள்ளவும் எலிசபெத்தைக் காண சென்றாள் (லூக்கா 1: 39-45). அதுமட்டுமல்ல, இயேசுவை பிரசவித்த நேரத்தில்கூட யோசேப்பைத்தவிர, அவளுக்கு உதவ யாரும் இல்லையே.
3) சரீர வாழ்வு:
சரீர அளவிலும் அவள் துன்பங்களை தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்பட வேண்டுமென்று அகஸ்துராயனிடமிருந்து கட்டளை இருந்ததால், கர்ப்பிணியான மரியாள் பெத்லகேமில் சென்று இயேசுவை பிரசவிக்க கிட்டத்தட்ட 100 கி.மீ. பயணம் செய்ய வேண்டியிருந்தது. இன்றைக்கு இருக்கும் நவீன போக்குவரத்து இல்லாமல் பயணம் மிகவும் கடினமாக இருந்திருக்க வேண்டும். தங்குவதற்கு அவர்களுக்கு எங்குமே இடமில்லை, "சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்" என வேதாகமத்தில் வாசிக்கிறோமே.
4) சமூக வாழ்வு:
நிச்சயமாக, அவள் கர்ப்பத்தைப் பற்றி ‘வதந்திகள்’ அவளைச் சூழ்ந்திருக்கும், சமூகம் ஏற்படுத்தும் இக்களங்கத்தை சகித்திருப்பாள். கர்த்தராகிய இயேசுவை ‘பாவிகளின் நண்பர்’, 'மனநிலை சரியில்லாதவர்', ‘பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூல்' என்றெல்லாம் முத்திரை குத்தப்படும்போது அவளுக்கு அதுவும் வேதனையாக இருந்திருக்க வேண்டும் (மத்தேயு 12: 24-27).
5) அரசியல் வாழ்வு:
புதிதாகப் பிறந்த கர்த்தராகிய இயேசுவை ஏரோதுவின் தீய நோக்கத்திலிருந்து பாதுகாக்க யோசேப்பும் மரியாளும் குழந்தையோடு எகிப்துக்குத் தப்பிச் செல்ல வேண்டியிருந்தது (மத்தேயு 2:13).
தேவனிடம் தயவைப் பெறுவது என்பது மக்களிடமும் இந்த உலகத்திடமிருந்தும் தயவைப் பெற்று விட்டோம் என்று அர்த்தமாகாது. "வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது, இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்" (யோவான் 15:24). அதாவது காரணமே இல்லையென்றாலும் கூட மக்கள் நம்மை வெறுப்பார்கள் என்பதாக இயேசு கிறிஸ்து எச்சரித்துள்ளார், ஒரு விழிப்புணர்வை அளித்துள்ளார் என்றும் கூறலாம். "ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்" (ரோமர் 8:18). கர்த்தருக்கு ஒரு நல்ல போர்ச்சேவகன் போல மரியாள் ‘கடினத்தன்மையை’ சகித்தாள் (2 தீமோத்தேயு 2: 3).
எனக்கு துன்பம் நேருகையில் நான் கர்த்தரிடம் தயவைப் பெற்றவர் என்பதை நினைவில் கொள்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran