வியாதியின் படுக்கையை மாற்றுகிறவர்

சங்கீதம் 41:1-13 படுக்கையின்மேல் வியாதியாய் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.

1. படுக்கையிலே கிடந்த வியாதியஸ்தன் (38 வருஷம்)
யோவான் 5:1-9 முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான். படுத்திருந்த அவனை இயேசு கண்டு, எழுந்திரு உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்துபோனான்.

2. படுக்கையிலே கிடந்த திமிர்வாதக்காரன்
மத்தேயு 9:1-8 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார். உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான்.

3. படுக்கையிலே கிடந்த திமிர்வாதக்காரன் (ஐனேயா)
அப்போஸ்தலர் 9:32-35 எட்டு (8) வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க் கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனுஷனைக் கண்டான். பேதுரு அவனைப் பார்த்து: ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான்.

மாற்கு 6:55-56 பிணியாளிகளைப் படுக்கைகளில் கிடத்தி, இயேசு வந்திருக்கிறாரென்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்து கொண்டு வந்தார்கள்... அவரைத் தொடும்படி வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் யாவரும் சொஸ்தமானார்கள்
அப்போஸ்தலர் 5:15-16 பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின் மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் தொடும்படிக்கு கொண்டுவந்தார்கள்... அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள்
Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download