கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்த தீர்க்கத்தரிசனங்கள்

1. கன்னிகைமூலம் பிறப்பார்
ஏசாயா 7:14 ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். 
மத்தேயு 1:23(18-23); லூக்கா 1:26-35 இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.

2. பெத்லேகமில் பிறப்பார்
மீகா 5:2 எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லேகமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும் இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்...
லூக்கா 2:5,6 கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லேகம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.

3. விசேஷ நட்சத்திரம் உதிக்கும்
எண்ணாகமம் 24:17 அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலில் இருந்து...
மத்தேயு 2:9,10 இதோ, அவர்கள் கேட்டுப்போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்கு முன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். 

4. அவர் ஒரு தீர்க்கத்தரிசியாயிருப்பார்
உபாகமம் 18:15,18 உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கத்தரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிக்கொடுப்பீர்களாக... என் வார்த்தைகளை அவர் வாயிலே அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.
யோவான் 6:14 இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கத்தரிசி என்றார்கள். அப்போஸ்தலர் 3:22-26; யோவான் 4:19(1-19)

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download