1. பிரிப்பவன் யார்? (அவருடைய அன்பைவிட்டு)
ரோமர் 8:36-39 கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மை பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாச மோசமோ, பட்டயமோ?... வேறெந்த சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயத்திருக்கிறேன்.
2. பறிப்பவன் யார்? (அவருடைய கரத்தில் இருந்து)
யோவான் 10:27-29 நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக் கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையில் இருந்து பறித்துக்கொள்வதுமில்லை
யோவான் 10:18 ஒருவனும் அதை என்னிடத்தில் இருந்து எடுத்துக்கொள்ள மாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துகொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு.
3. மறிப்பவன் யார்? (அவரை எதிர்த்து)
யோபு 9:10-13 இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை மறிப்பவன் யார்? நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்?
4. தரிப்பவன் யார்? (அவருடைய கோபத்துக்கு)
நாகூம் 1:1-7 அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிரகோபத்திலே தரிப்பவன் யார்?
சங்கீதம் 76:7 நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
5. தடுப்பவன் யார்? (அவர் செய்கிறதை)
ஏசாயா 43:11-14 நாள் உண்டாகாததற்குமுன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?
அப்போஸ்தலர் 11:17 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்கு தேவன் வரத்தையே அநுக்கிரகம்பண்ணினதுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே அநுக்கிரகம்பண்ணியிருக்கும்போது தேவனைத் தடுக்கி றதற்கு நான் எம்மாத்திரம் என்றான்.
Author: Rev. M. Arul Doss