நாகூம் 1:1-7

1:1 நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம்.
1:2 கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர், அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர்.
1:3 கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்துக்குள்ளாயிருக்கிறது.
1:4 அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகப்பண்ணி, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார். பாசனும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும்.
1:5 அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கடந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் பூமியும் சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போம்.
1:6 அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிரகோபத்திலே தரிப்பவன் யார்? அவருடைய எரிச்சல் அக்கினியைப்போல இறைக்கப்படுகிறது; அவராலே கன்மலைகள் பேர்க்கப்படும்.
1:7 கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.




Related Topics



கர்த்தர் அறிந்திருக்கிறார்-Rev. M. ARUL DOSS

  சங்கீதம் 139:1 (1-24)  கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்; உட்காருதல் எழுந்திருக்குதல் அறிந்திருக்கிறீர். 1. நம்புகிறவர்களை...
Read More



நினிவேயின் , பாரம் , எல்கோசானாகிய , நாகூமின் , தரிசனப் , புஸ்தகம் , நாகூம் 1:1 , நாகூம் , நாகூம் IN TAMIL BIBLE , நாகூம் IN TAMIL , நாகூம் 1 TAMIL BIBLE , நாகூம் 1 IN TAMIL , நாகூம் 1 1 IN TAMIL , நாகூம் 1 1 IN TAMIL BIBLE , நாகூம் 1 IN ENGLISH , TAMIL BIBLE Nahum 1 , TAMIL BIBLE Nahum , Nahum IN TAMIL BIBLE , Nahum IN TAMIL , Nahum 1 TAMIL BIBLE , Nahum 1 IN TAMIL , Nahum 1 1 IN TAMIL , Nahum 1 1 IN TAMIL BIBLE . Nahum 1 IN ENGLISH ,