உம்மைத்தவிர வேறே யாருமில்லை

ஏசாயா 64:4 தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீ செய்பவை களை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டது மில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை
சங்கீதம் 73:25 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.

1. உம்மைத் தவிர தேவன் இல்லை
ஏசாயா 45:22 (21-23) பூமியின் எல்லையெங்கும் உள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.
1சாமுவேல் 2:2 கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மை யல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையுமில்லை.

2. உம்மைத் தவிர இரட்சகர் இல்லை
ஏசாயா 43:11(9-13) நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை 
அப்போஸ்தலர் 4;12 அவராலேயன்றி வெறொருவராலும் இரட்சிப்பு இல்லை
தானியேல் 3:29 இரட்சிக்கத்தக்க தேவன் வெறொருவரும் இல்லை

3. உம்மையல்லாமல் உலகம் இல்லை
யோவான் 1:3,10 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டான தொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை
1கொரிந்தியர் 8:6 இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது

4. உம்மையல்லாமல் ஒருவனும் இல்லை
யோவான் 3:13 மனுஷக்குமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை
யோவான் 14:6(1-6) நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்

5. உம்மையல்லாமல் ஒன்றும் இல்லை
யோவான் 15:5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னி லும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.  

Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download