நேற்றும் இன்றும் என்றும் மாறாத கர்த்தர்

எபிரெயர் 13:8 இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறார்

1. மாறாத கர்த்தருடைய மனம் 
சங்கீதம் 110:4 நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார்; மனம் மாறாமலுமிருப்பார்
எண்ணாகமம் 23:16-24  பிலேயாம் பாலாக்கைப் பார்த்து: பொய்சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல 
1சாமுவேல் 15:29 சாமுவேல் சவுலைப் பார்த்து: இஸ்ரவேலின் ஜெயபல மானவர் பொய் சொல்லுகிறதுமில்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ் தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல 

2. மாறாத கர்த்தருடைய குணம் 
மல்கியா 3:6 நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை
சங்கீதம் 102:1-28 அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; மாறிபோகும். நீரோ மாறாதவராயிருக்கிறீர்
எபிரெயர் 1:1-14 ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போகும்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது

3. மாறாத கர்த்தருடைய வரம் 
ரோமர் 11:25-36 தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.
யாக்கோபு 1:17 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்தில் இருந்து உண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்தில் இருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில்  யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.

4. மாறாத கர்த்தருடைய வசனம் 
ஏசாயா 45:23; ரோமர் 14:11 முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயில் இருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லை 
பிலிப்பியர் 2:10 முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்…

Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download