ரோமர் 11:25-36

11:25 மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.
11:26 இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்;
11:27 நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது.
11:28 சுவிசேஷத்தைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைஞராயிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக்குறித்து அவர்கள் பிதாக்களினிமித்தம் அன்புகூரப்பட்டவர்களாயிருக்கிறார்கள்.
11:29 தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.
11:30 ஆதலால், நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாதிருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம்பெற்றிருக்கிறதுபோல,
11:31 அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு உங்களுக்குக்கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள்.
11:32 எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.
11:33 ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!
11:34 கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?
11:35 தனக்குப் பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?
11:36 சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.




Related Topics


மேலும் , சகோதரரே , நீங்கள் , உங்களையே , புத்திமான்களென்று , எண்ணாதபடிக்கு , ஒரு , இரகசியத்தை , நீங்கள் , அறியவேண்டுமென்றிருக்கிறேன்; , அதென்னவெனில் , புறஜாதியாருடைய , நிறைவு , உண்டாகும்வரைக்கும் , இஸ்ரவேலரிலொரு , பங்குக்குக் , கடினமான , மனதுண்டாயிருக்கும் , ரோமர் 11:25 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 11 TAMIL BIBLE , ரோமர் 11 IN TAMIL , ரோமர் 11 25 IN TAMIL , ரோமர் 11 25 IN TAMIL BIBLE , ரோமர் 11 IN ENGLISH , TAMIL BIBLE Romans 11 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 11 TAMIL BIBLE , Romans 11 IN TAMIL , Romans 11 25 IN TAMIL , Romans 11 25 IN TAMIL BIBLE . Romans 11 IN ENGLISH ,