வெளிப்படுத்தின விசேஷம் 21- விளக்கவுரை

அதிகாரம்- 21
‘பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும்……புதிய எருசலேமையும் கண்டேன்’
‘Then I saw a new heaven a new earth…..the new Jerusalem’
வெளி (Rev) 21: 1

முன்னுரை:-
1. ஒரு புதிய வானம், புதிய பூமி, புதிய எருசலேம் தேவனால் படைக்கப்படுகிறது!
2. புதிய எருசலேம் நகரத்தின் அமைப்பு வருணிக்கப்படுகிறது !
3. நகரத்தின் வெளிச்சத்தில் நடப்பவர்கள் யார் ?
4. நகரத்திற்கு புறம்பே இருப்பவர்கள் யார்?

வச 1,2: வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்கு பிறகு இப்போதுள்ள உலகம் முற்றிலும் அழிக்கப்பட்டு
புதிய சிருஷ்டிப்பு உண்டாக்கப்படுகிறது.
ஆதி 1: 1,2.  2 பேதுரு 3: 7,10- 14.
பாட்டு 346- 4, 5.

வச3-6: தேவன் புதியதாக சிருஷ்டிக்கும் பரலோகத்தில் மூன்று பிரிவுகள் காணப்படும்.
1) புதிய எருசலேம்
2) புதிய வானம்
3) புதிய பூமி
இந்த மூன்று பகுதிகளில் வாசம் செய்யப்போகும் பரிசுத்தவான்கள் யார்?

புதிய எருசலேம்
வச2,7, 10,27: மணவாட்டி சபையாகிய ஜெயங்கொண்ட கிறிஸ்தவர்கள் மாத்திரமே புதிய எருசலேமில் 
பிரவேசித்து,வாசம் செய்து கிறிஸ்துவோடு ஆளுகை செய்வார்கள்.
எபிரேயர் 12: 21-24, எபேசியர் 2: 7.

நகரத்தின் அமைப்பு
வச 11-13: பன்னிரண்டு வாசல்கள் - இஸ்ரவேல் கோத்திரத்தார் சுதந்தரிக்கத் தவறியதால், இயேசுவின்
இரத்தத்தால் மீட்கப்பட்ட ஒரு புதிய சிருஷ்டிகள் சுதந்தரித்துக் கொள்வார்கள். எபேசி 2: 15, எபி 11: 10, 39,40.

வச 14: பன்னிரண்டு அஸ்திபாரங்கள் - 12 அப்போஸ்தலர்களை குறிக்கிறது. கிறிஸ்து மூலைக்கல். மத் 16: 18, எபேசி 2: 20, 1 பேதுரு 2: 6

வச 17: நகரத்தின் மதில் - விசுவாசிகளை சத்துருவினிடமிருந்து காக்கும் இரட்சிப்பே நகரத்தின் மதில். ஏசாயா 26: 1, எபி 2: 4.

வச 18, 21: பொன் - விசுவாசிகளின் விலையேறப்பெற்ற விசவாசம். 1 பேதுரு 1: 7, 2 தீமொத் 1: 5.
விலையேறப்பெற்ற கற்கள்- அப்போஸதலர்களின் விசுவாசிகளின் உறுதி, பிரகாசமான குணங்கள்,கிரியைகள், அர்ப்பணம், பிரதிஷ்டைகள் 1 கொரி 3: 11- 13, சங்கீதம் 48: 12, 13.
பாட்டு 331- 1,2,3.

புதிய வானம்
புழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள். மணவாட்டி சபை அல்ல. ஆனாலும் புதிய பூமியில் வசிக்கும் பரிசுத்தவான்களை காட்டிலும் மேலான பரிசுத்த வாழ்க்கையம் அர்ப்பணிப்பும் பிரதிஷ்டையும் செய்தவர்கள்.

புதிய பூமி
வச 22, 23: புதிய எருசலேமிலிருந்து வரும் ஒளியின் பிரகாசம் புதிய பூமியில் விழும். அந்த வெளிச்சத்தில் நடக்கும் விசுவாசிகள் கிறிஸ்துவின் மேல்வைத்த விசுவாசத்தினால் இரடச்சிக்கப்பட்டவர்கள். ஆனால், ஆவிக்குரிய ஜீவியத்தில் அதிகம் முன்னேராதவர்கள். யோவான் 3:3, அப் 16: 31, ரோமர் 1: 16

நகரத்திற்கு புறம்பே
வச 8,27: அருவருப்பிலும் பாவத்திலும் ஜீவிக்கிறவர்கள்.

Author: Rev. Dr. R. Samuel Topics: Tamil Reference Bible Revelation

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download