2பேதுரு 3:7-14

3:7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
3:8 பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.
3:9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
3:10 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்.
3:11 இப்படி இவைகளெல்லாம் அழிந்துபோகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்!
3:12 தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.
3:13 அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
3:14 ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.




Related Topics


இப்பொழுது , இருக்கிற , வானங்களும் , பூமியும் , அந்த , வார்த்தையினாலேயே , அக்கினிக்கு , இரையாக , வைக்கப்பட்டு , தேவபக்தியில்லாதவர்கள் , நியாயந்தீர்க்கப்பட்டு , அழிந்துபோகும் , நாள்வரைக்கும் , காக்கப்பட்டிருக்கிறது , 2பேதுரு 3:7 , 2பேதுரு , 2பேதுரு IN TAMIL BIBLE , 2பேதுரு IN TAMIL , 2பேதுரு 3 TAMIL BIBLE , 2பேதுரு 3 IN TAMIL , 2பேதுரு 3 7 IN TAMIL , 2பேதுரு 3 7 IN TAMIL BIBLE , 2பேதுரு 3 IN ENGLISH , TAMIL BIBLE 2Peter 3 , TAMIL BIBLE 2Peter , 2Peter IN TAMIL BIBLE , 2Peter IN TAMIL , 2Peter 3 TAMIL BIBLE , 2Peter 3 IN TAMIL , 2Peter 3 7 IN TAMIL , 2Peter 3 7 IN TAMIL BIBLE . 2Peter 3 IN ENGLISH ,