அதிகாரம்- 18
‘மகா பாபிலோன் விழுந்தது ! விழுந்தது !’
‘Babylon the great is fallen ! is fallen !’
வெளி (Rev) 18: 1
முன்னுரை:-
1. மகாபாபிலோனிய வேசிமார்க்கம் அந்திகிறிஸ்துவாலேயே சுட்டெரிக்கப்படுகிறது. (17: 16)
2. மகாபாபிலோனிய பாவ வர்த்தக மையம் கிறிஸ்துவினால் சுட்டெரிக்கப்படுகிறது.(18: 8)
மகா பாபிலோன் பின்னணி
1. பாபிலோன் என்ற வார்த்தை ‘பாபேல்’ என்ற வார்த்தையிலிருந்து வந்தது.ஆதி 11: 4
2. பொய் மத, மார்க்க வழக்கங்கள்(various religious cults), துர் உபதேசங்கள் (false teachings) போன்ற ஆவிக்குரிய வேசித்தன மார்க்கங்களை நிம்ரோத் என்ற மன்னனும் அவனுடைய மனைவி, மகன் தம்மூஸ் இவர்களால் பூர்வீக பாபிலோனில் (ancient Babylon)உருவானதால் மெய் தேவ பக்திக்கு எதிரான எல்லா ஆவிக்குரிய உலக வேசிமார்க்கங்களும் மகாபாபிலோன் என்றழைக்கப்படுகிறது.
3. பூர்வீக பாபிலோன் அழிக்கப்பட்டது.( எரேமியா 50: 1,2. 51: 1,2). நவீன பாபிலோனும் அழிக்கப்படும்.
17 : 1- 5- 1) மகாவேசி என்றழைக்கப்படுகிற ஸ்திரீ ஆவிக்குரிய வேசித்தனத்தையே குறிக்கிறது. ஏசாயா 1:21, எரே 3: 9, யாத் 4:4
மேலும், இரகசியம் மகாபாபிலோன் என்பது.
- அரசியல், பொருளாதாரம், மதம் இவற்றில் பாவத்தையும் பலவித துன்மார்க்கத்தையும் புகுத்தும் மார்க்கத்தை பொதுவாகவும், ஓசியா 4: 12
- கள்ள போதகம், துர்உபதேசம், புறஜாதி மார்க்க பழக்கங்கள் இவற்றை கொண்ட விழுந்து போன சபையை குறிப்பாகவும் காண்பிக்கிறது. மத் 24: 24
2) அந்தி கிறிஸ்துவோடு இணைந்துள்ள உலக ராஜ்ஜியங்களின் ஆதரவோடு இவள் செயல்படுகிறாள்.
17: 6 – முதலாம் நூற்றாண்டு துவங்கியே கிறிஸ்துவின் சுவிசேஷத்தினிமித்தம் இரத்தசாட்சிகளை கொன்ற பழியினிமித்தம் இவளுக்கு ஆக்கினை வரும்.
கி.பி.67-நீரோ என்ற ரோம பேரரசனும், கி.பி 81- டொமீஷியன் என்ற மன்னனும் சபையை துனடபுத்தினர். 4 ஆம் நூற்றாண்டில் கான்ஸ்டான்டைன் கிறிஸ்தவத்தை தழுவி பின்னர் கிறிஸ்தவத்தை அகில உலக மதமாக( (Universal Religion) மாற்றி பறஜாதி மார்க்கத்தின் பழக்கங்களை சபையில் கொண்டு வந்தான். சுபையின ஒரு பகுதி விழுந்து போன சபையாகிவட்டது.
பாட்டு 208- 1,2.
17: 7- 14- 1. ஏழு மலைகள் கொண்டது ரோம நகரம் - விழுந்துபோன சபை ரோமாபுரியிலிருந்து அரசியலையும் சபையையும் ரோம சாம்ராஜ்ஜியத்தின் காலத்திலிருந்து ஆட்கொண்டு வந்தது.
2. ஏழு தலைகள் - இதுவரை உலகத்தை ஆண்ட ஏழு சாம்ராஜ்ஜியங்களை குறிக்கிறது.
3. பத்து கொம்புகள்- அந்திகிறிஸ்துவோடு இணையப்போகும் பத்து ஐரோப்பிய ராஜ்ஜியங்கள்.
அந்தி கிறிஸ்துவோடு சேர்ந்து இவர்கள் அர்மெகெதோன் என்ற இடத்தில் கிறிஸ்துவுடன் கடைசி யுத்தம் செய்து அழிக்கப்படுவார்கள்.
17: 15- 17- இந்த ராஜாக்களே அந்திகிறிஸ்துவின் அழிவுக்குமுன் மகாபாபிலோனை வெறுத்து சுட்டெரித்துப்போடுவார்கள்.
17: 18- ஸ்திரீ என்ற விழுந்துபோன சபை மகாநகரமாகிய ரோமாபுரியின் பெயர்தரித்துள்ளது.
18: 1- 3- உலக ராஜ்ஜயங்களை வர்த்தக பொருளாதார ஆடம்பர பாவ வாழ்க்கையில் ஈடுபடுத்தும் மகாபாபிலோன் இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.
18: 4- தேவ ஜனத்திற்கு எச்சரிப்பு- ஏசாயா 52: 1,2. 2 தீமொத் 3: 5,1 யோவான் 2: 15- 17
பாட்டு 180- 5,6.
18: 5- 8- அந்தி கிறிஸ்துவின் ஆட்சியின் இறுதிகாலத்தில் மீண்டம் பூர்வீக பாபிலோன் உலக வர்த்தகத்தின் மைய இடமாகும். இந்த நவீன பாபிலோனும் தனது அநியாய பாவத்தினிமித்தம் அழிக்கப்படும். 1 கொரி 7: 31
18: 9- 19- உலக ஆடம்பரம், களியாட்டுகள் இவற்றையே வாழ்க்கையென கொண்ட ராஜ்ஜியங்கள் மகாபாபிலோனின் அழிவினிமித்தம் புலம்புவார்கள்.
18: 20- ஆனால் நித்திய ஜீவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்த தேவஜனமோ அவள் அழிவினிமித்தம் களிகூறுவார்கள்.தங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தார்.
18: 21- 24: மகாபாபிலோன் என்ற வேசி மீண்டம் வராதபடி முற்றிலும் அழிக்கப்பட்டாள்.
Author: Rev. Dr. R. Samuel