சங்கீதம் 50- விளக்கவுரை

முக்கியக் கருத்து

 - ஆசாப் என்னும் பாடகர் குழு தலைவன் பாடிய சங்கீதம்.
 - கர்த்தருடைய இரண்டாம் வருகையை குறித்த தீர்க்கதரிசனம்.
 - தேவ மக்களுக்கும், துன்மார்க்கருக்கம் எச்சரிப்பு.

1.  தேவன் தமது பரிசுத்த நகரமாகிய சீயோனில் வல்லமையாய் பிரகாசிக்கிறார். அங்கிருந்து இந்த உலகத்தை நியாயந்தீர்க்க சீக்கிரமாக இறங்கி வருவார். ஆகவே, முன்கூட்டியே எச்சரிப்பின் போதனையை அளிக்க வானத்தையும் பூமியையும் சாட்சியாக கூப்பிடுகிறார் (வச.1-4).

"கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்' (2 பேதுரு 2:9).

"கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்' (2 பேதுரு 3:10).

2.  இதன் காரணமாக, தேவ மக்களுக்குக் கர்த்தர் எச்சரிப்பின் போதனையை கொடுக்கிறார் (வச.5-15)
"நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; ...' என்று 1 பேதுரு 4:17 ஆம் வசனத்தில் வாசிக்கிறோம்.

 .  வீண் பலிகளை செலுத்தவேண்டாம் (5-13) காயீனும் சவுலும் வீண் பலிகளைச் செலுத்தி தேவனுக்குப் பிரியமில்லாதவர்களானார்கள் என்று ஆதியாகமம் 4:5,7 வசனங்களிலும் 1 சாமுவேல் 15:22,23 வசனங்களிலும் வாசிக்கிறோம்.

 .  தேவன் விரும்பும் ஸ்தோத்திர பலிகளை செலுத்தவேண்டும் (வச.14).

 .  தேவனுக்குப் பொருத்தனை பலிகளை செலுத்தவேண்டும் (14).
தாவீது தேவனுக்கு எப்போதும் ஸ்தோத்திர பலிகளையும் பொருத்தனை பலிகளையும் செலுத்தி தேவனுக்குப் பிரியமானவனாகக் காணப்பட்டான்.

 .  ஆபத்துக்காலத்தில் தேவனை நோக்கி கூப்பிட்டு, விடுதலை அடைந்து கர்த்தரை மகிமைப்படுத்தவேண்டும் (வச.15).

3.  துன்மார்க்கனுக்கும் கர்த்தர் எச்சரிப்பின் வார்த்தைகளை கூறுகிறார் (வச.16-22).

 .  வேதவசனத்தை அசட்டை செய்கிறவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தை உரிமைப்பாராட்ட முடியாது (ரோமர் 1:30-32).

 .  சிந்தித்து சீர்பட்டால் பிழைப்பீர்கள். இல்லையேல் அழிவீர்கள். (கலாத்தியர் 6:16).

4.  ஆகவே, நாம் நம்முடைய வழிகçá செவ்வைபடுத்திக் கொண்டு தேவனுக்கு ஸ்தோத்திர பலிகளை ஏறெடுக்க விரும்பும்போது தேவன் நம்மை இரட்சித்து அழிவுக்கு தப்புவிப்பார் (வச.23).
"காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்' (மாற்கு 1:15).

Author: Rev. Dr. R. Samuel



Topics: Tamil Reference Bible Psalm

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download