முக்கியக் கருத்து
- இஸ்ரவேலின் இளவயது முதலான சாட்சி.
- தேவ மக்களை சத்துரு மேற்கொள்வதில்லை.
1. (வச.1-4) - தேவ ஜனமாகிய இஸ்ரவேலரின் இளவயது முதலான சாட்சி
ஆதி.12:2, யாத்.33:17, ஏசாயா 43:12
* உருவான கால முதலே சத்துருக்களால் நெருக்கப்பட்டார்கள். யாத்.1:8,11, எரேமியா 2:2,3
* ஆனாலும் சத்துருக்கள் மேற்கொள்ளவில்லை. யாத்.15:1, எரேமியா 1:19
* நீதியின் தேவன் வெற்றியும் விடுதலையும் தந்தார். யாத்,23:25, யோசுவா 23:1, ஓசியா 11:1.
2. கிறிஸ்துவின் சபையுடைய சாட்சி
* ஆதி அப்போஸ்தல கால முதலே சபை எதிர்ப்புகளையும் துன்பங்களையும் சந்தித்து வந்தது. அப்.4:1-3, 6:12,13, 9:1, எபே.3:1 1 தெச.1:6.
* ஆனாலும், சபையை எவராலும் அழிக்க முடியவில்லை. மத்,16:18 அப்,4:4, 2 தெச.2:4, மத்.16:18
* கிறிஸ்துவானவர் தம் சபையை வெற்றி சிறக்கச் செய்து வருகிறார். 2 கொரி.2:14.
3. உத்தம விசுவாசிகளின் சாட்சி
* விசுவாச வாழ்க்கையின் ஆரம்ப முதலே சோதனை உண்டு.
மத்தேயு 3:16,17 4:1
* ஆனாலும், உலகம், பிசாசு, எதிரிகள் உண்மை விசுவாசிகளை மேற்கொள்வதில்லை.
மத்.4:10,11, ஆதி.3:15, 1 யோவான் 3:8 வெளி.11:8
* கர்த்தர் இயேசு விசுவாசிகளாகிய நமக்கு ஜெயமும் சமர்தானமும் கொடுக்கிறார்.
ரோமர் 8:37 ஏசாயா 51:11
பல்லவி
சேனைகளின் கர்த்தர் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பவரே
சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்
சோதனை வென்றிட தந்தருள்வார்
சரணம்
4. ஏசு நம் யுத்தங்கள் நடத்துவார்
ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி
யாவையும் ஜெயித்து வானத்தில் பறந்து
ஏசுவை சந்தித்து ஆனந்திப்போம்
பாட்டு - சகோதரி சாராள் நவரோஜி.
2. (வச.5-8) தேவ மக்களைப் பகைத்து அவர்களுக்கு எதிராக எழும்புகிறவர்கள் தழைப்பதில்லை. இறுதியில் அவர்கள் வெட்கப்பட்டுப் புல்லைப்போல உலர்ந்து உதிர்ந்து போவார்கள். கர்த்தரின் நாமத்தில் அப்படிப்பட்டவர்கள் வாழ்த்துதலைப் பெறமாட்டார்கள். சங்கீதம் 1:4,6 2 பேதுரு 3:10,14.
ரூத் 2:4 பகுதியிலிருந்து ஒரு நடைமுறை உதாரணம் வழக்குச் சொல்லாக இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது .
Author: Rev. Dr. R. Samuel