முக்கியக் கருத்து
- கர்த்தர் உடன் இருந்து வாழும் வாழ்க்கையே பிரயோசனமுள்ளது.
- ஆசீர்வாதமான சந்ததி.
1. (வச.1-2) - கர்த்தருடன் இணைந்த வாழ்க்கை
கர்த்தருடன் அவர் சித்தப்படி கட்டும் வீடு, குடும்ப வாழ்க்கை, ஊழியம் இவைகளே ஆசீர்வாதமானதாகவும் பிரயோசனமாகவும் இருக்கும். மற்றவை வீண். மாற்கு 8:36, பிரசங்கி 1:2,3. கர்த்தர் நம்முடன் இருக்கும்போது வாழ்க்கையின் எல்லாவற்றையும் நிறைவேற்றுவானாலும் நமக்கு சமாதானமும், மன அமைதியும் கிடைக்கும். இல்லையேல் நமது பிரயாசங்களில் வெற்றிபோல தோன்றினும் அவை கவலை, மன அழுத்தம் இவற்றையே தரும். மத்தேயு 6:31,32 பிலிப்.4:6,7.
பல்லவி
இயேசுவோடு இணைந்த வாழ்வினை
தேடித் தெரிந்து கொண்டேன் - இதுவே
தூய தேவ அன்பே - போதும்
மாய உலகினிலே
சரணம்
1. மனித அன்பு மாறி மறையும்
மாறிடாத தேவ அன்பே
இணையில்லாத நல்ல பங்கே
இதற்கு நிகர் எதுவும் இல்லையே
இம்மை மறுமையிலே - இயேசுவோ
பாட்டு- சகோதரி சாராள் நவரோஜி
2. (வச.4-6) - ஆசீர்வாதமான சந்ததி
அனேக பிள்ளைகள், பெரிய குடும்பம் இவைகளே ஆசீர்வாதத்திற்கு அடையாளம் என்பது பழைய ஏற்பாட்டு பிரமாணம். ஏனென்றால், கர்த்தர் தமது ஜனம் சரீரபிரகாரமாக பலுகி பெருக கட்டளையிட்டிருந்தார் ஆதி.24:60 ஆதி.30:2,18,33:5, உபா.7:3. ஆனால், புதிய ஏற்பாட்டு உபதேசத்தில் இதை நாம் காணமுடியாது. புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கு வேதம் கூறும் கட்டளை, பிள்ளைகள் தேவ பக்தியில் வளர்க்கப்பட்டு கர்த்தருக்குள் ஜீவிக்கும் தேவபக்தியுளளை சந்ததியாக இருப்பதே ஆசீர்வாதமானதாகும். எபேசியர் 6:1,4 1 தீமோத்.3:1,2,4,12.
பிள்ளைகளே இல்லாமலிருந்தும், விவாகமே செய்யாமலிருந்தும் கர்த்தருக்கு முழுதும் ஒப்புக்கொடுத்து செய்யும் வாழ்க்கையும் மிகுந்த ஆசீர்வாதத்தை அருளுகிறதாக இருக்கும் என்றும் 1 கொரி.7:6-8,24, 1 தீமோத்.4:1-3 வசனங்களிலும் வாசிக்கிறோம். ஆவிக்குரிய அநேகம் பிள்ளைகளை பெறுகிற அனுபவமாகி ஊழியப்பணி, அதாவது அநேகரை கர்த்தருயை மந்தையில் சேர்க்க அவர்களை இரட்சிப்புக்குள் நடத்தும் பணி நித்திய ஆசீர்வாதத்தை தரும் என்றும் புதிய ஏற்பாட்டு உபதேசத்தில் வாசிக்கிறோம். யோவான் 17:12, எபிரெயர் 2:13, 1 கொரி. 4:15.
Author: Rev. Dr. R. Samuel