முக்கியக் கருத்து
- எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளி வந்த பிறகுதான் இஸ்ரவேல் தேவனுடைய ராஜ்ஜியமாயிற்று.
- அதன்பின்பு, இஸ்ரவேலின் வாழ்க்çயில் தேவன் அற்புதங்களை நடப்பித்தார்.
- யாக்கோபு என்ற பெலவீனமானவனுக்கு பெலமுள்ள தேவன் கிரியை நடப்பித்ததால் பூமியும், கடலும், மலைகளும் துள்ளிக் குதித்தன.
1. (வச.1-2) தேவனுக்கு சொந்தமாவது எப்போது?
சாலொமோன் ராஜாவுக்குப் பிறகு இஸ்ரவேல், யூதா என்று தேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட காலக்கட்டத்தில் இந்த சங்கீதம் எழுதப்பட்டதாக தோன்றுகிறது. இஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து முற்றிலும் வெளிவந்த பிறகுதான் தேவனுக்கு சொந்தமான ராஜ்ஜியமாகவும், அவர் தங்கியிருக்கக்கூடிய ஸ்தானமாக மாறினர்.
உலக பாவ வாழ்க்கையின் அடிமைத்தனத்தைவிட்டு நாம் முற்றிலும் வெளிவந்ததால்தான் ஆண்டவருக்கு சொந்த ஜனங்களாக மாறமுடியும். கர்த்தர் நம்மை இரட்சிப்பது அவருடைய கிரியைகளின் ஆரம்பம். அதற்குப் பிறகு நம்மோடு அவர் தங்கி இருந்து தமது வல்லமையான கிரியைகளை நடப்பிப்பார். மத்தேயு 1:21-23, ரோமர் 6:22,23, எபேசியர் 2:1,4,5, 12,13.
2. (வச.3,8) தேவனுடைய வல்லமை விளங்குகிறது
பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுலை செய்யப்பட்ட தமது ஜனத்திற்கு கர்த்தர் தம்முடைய மகா பெலத்தினாலே அற்புத கிரியைகளை நடப்பிக்கும்போது எந்த சக்தியும் அவரை எதிர்க்கவோ, தடை செய்யவோ முடியாது. செங்கடல், யோர்தான் போன்ற சீறும் சமுத்திர வெள்ளங்களும் அவருக்கு முன் அடங்கி நின்று விலகி ஓடும்.
இரட்சிக்கப்பட்ட தேவ ஜனமாகிய விசுவாசிகளின் வாழ்க்கையிலும் கர்த்தருடைய வல்லமையான கரம் அற்புதங்களை நடப்பிக்கும்போது சகல தடைகளும் விலகி ஓடும். சகரியா 4:7.
3. (வச.4-7) பூமி, கடல், மலை ஏன் அதிரவேண்டும்?
கடல்விலகி ஓடவும், மலைகள் துள்ளவும், பூமி அதிரவும் காரணம் என்ன? பெலவீனமான யாக்கோபு போன்ற மனிதனுக்கு முன் செங்கடல், யோர்தான் போன்றவை பிளக்கப்படவும், சீனாய்மலை போன்றவை அதிரவும், பூமி அதிரவும் செய்கின்றன. மகா பெலமுள்ள கர்த்தர் கிரியை செய்வதினாலும். தமது அன்பையும், இரக்கத்தையும் வல்லமையையும் தமது பேலவீன ஜனத்திற்காக மடை திறந்த வெள்ளம்போல பெருகச் செய்ததால் சகல சிருஷ்டிப்புகளும் மகிழ்ச்சியால் துள்ளுகின்றன.
ஏசாயா 55:12,13, ஆபகூக் 3:1-19
Author: Rev. Dr. R. Samuel