சுயநல பணக்காரனா? அல்லது சுயநலமற்ற பணக்காரனா?

மருத்துவரான லூக்கா தனது நற்செய்தியில் நான்கு பணக்காரர்களை அறிமுகப்படுத்துகிறார்.  துரதிர்ஷ்டவசமாக, அவர்களில் மூன்று பேர் தேவனுடைய சித்தத்தைச் செய்யத் தவறிவிட்டனர், ஒருவர் மனந்திரும்பினார், புது சிருஷ்டியானார்.

சுயநலம் கொண்ட பணக்காரன்:
பணக்காரன் ஒருவனுக்கு வயல் இருந்தது.  அந்த குறிப்பிட்ட பருவத்தில் அவனுக்கு ஏராளமான விளைச்சல் கிடைத்தது.  இது ஒரு போனஸ் மற்றும் மகத்தான அறுவடை.  உடனே அவனுக்கு அதையெல்லாம் நன்கு சேமித்து வைக்க வேண்டும், அதற்காக அவன் சேமிப்பு கிடங்கை விரிவுபடுத்தி பல ஆண்டுகள் கவலையற்று இருக்க வேண்டும் என நினைத்தான்.  ஆம், நல்ல நிதானமாக உண்டு குடித்து வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கலாம் என தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.  ஆனால் ஆண்டவரோ அவனைப் பார்த்து மதிகேடனே என்றழைத்து இது பூமியில் உன் கடைசி இரவாக இருந்தால் என்னவாகும் எனக் கேட்டார்? (லூக்கா 12: 13-21). எல்லா பேராசைகளுக்கும் எதிராக தேவன் எச்சரித்தார், மேலும் வாழ்க்கையின் அர்த்தமும் நோக்கமும் செல்வத்தின் மிகுதியில் இல்லை என்றார்.

சுயதிருப்தி கொண்ட பணக்காரன்:
இந்த பணக்காரன் எப்படிப்பட்டவன் என்றால் இராத்தம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் என நவநாகரீக ஆடைகளை அணிவதையே விரும்பினான். மேலும் தினமும் நல்ல ஆடம்பரமான விருந்தும் உண்டு மிக பகட்டாக வாழ்ந்து கொண்டிருந்தான்.   துரதிர்ஷ்டவசமாக, அவன் கண்ணுக்கு முன்பதாக ஒரு ஏழை மனிதனான லாசரு என்றொருவன் இருந்தான், ஆனால் இந்த பணக்காரனுக்கோ  இந்த ஏழைக்கு உதவ எண்ணமேயில்லை. ஒருநாள் இருவரும் மரித்தனர், பணக்காரன் நரகத்தில் தள்ளப்பட்டான், ஏழையான லாசரு ஆபிரகாமின் மடியில் இருந்தான். வாழ்ந்த காலங்களில் பணக்காரன் தான் நல்ல விஷயங்களை அனுபவிக்க பிறந்தவன் என்றும் ஏழை மனிதன் கஷ்டங்களை அனுபவிக்க பிறந்தவன் என்ற எண்ணம் இருந்தது.  செல்வம் என்பது அவனுக்கு கொடுக்கப்பட்ட வாழ்வியல் சோதனை என்பதை அவன் ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை, அதில் அவன் தோல்வியடைந்தான் (லூக்கா 16:19-31).

சுயத்தின் மீது நம்பிக்கை கொண்ட பணக்காரன்:
செல்வந்தனாகவும், உயர் பதவி வகிப்பனாகவும், புத்திசாலியாகவும், மோசே பிரமாணத்தின்படி குற்றமற்றவனாகவும் காணப்பட்ட ஒரு ஐசுவரியமுள்ள இளைஞன் இருந்தான். இவை அனைத்தையும் கொண்டிருந்த அவனுக்கு நித்திய ஜீவனையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது.  இந்த இளைஞனின் விஷயத்தை பொறுத்தமட்டில் அவன் செல்வத்தை ஆளவில்லை, அவனை செல்வம் ஆட்கொண்டது.  இதற்கான மாற்றுமருந்து என்பது  இந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதே. அதன் தீர்வாக தான் ஆண்டவர் அவன் செல்வங்களை விற்று ஏழைகளுக்குக் கொடுக்கச் சொன்னபோது, ​​மிகுந்த வருத்தம் அடைந்து அந்த இடத்தை விட்டு வெளியேறினான் (லூக்கா 18:18-30).

சுயத்தை விட்ட பணக்காரன்: 
சகேயு பேராசை கொண்டவன், தனது வாடிக்கையாளர்களை சுரண்டினான், பெரும் செல்வத்தை குவித்தான்.  அவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சந்தித்தபோது, ​​அவனுடைய வாழ்க்கை மாறியது.  கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை அபராதத்துடன் திருப்பித் தருவதாகவும், தனது செல்வத்தில் பாதியை ஏழைகளுக்குப் பங்கிடுவதாகவும் வாக்குறுதி அளித்தான்  (லூக்கா 19:1-10).

 கொடுப்பதில் செல்வந்தரான சகேயுவைப் போல நான் இருக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download