லூக்கா 19:1-10

19:1 அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,
19:2 ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,
19:3 இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,
19:4 அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
19:5 இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
19:6 அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான்.
19:7 அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படிபோனார் என்று முறுமுறுத்தார்கள்.
19:8 சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.
19:9 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.
19:10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.




Related Topics



தேடி வந்த தெய்வம்-Rev. M. ARUL DOSS

1. காணாமற்போனதைத் தேடிவந்தவர் லூக்கா 15:4-7 காணாமற்போன ஆடு  லூக்கா 15:8-10 காணாமற்போன காசு  லூக்கா 15:11-32 காணாமற்போன இளையமகன் எசேக்கியேல் 34:16(1-31) நான்...
Read More




சுயநல பணக்காரனா? அல்லது சுயநலமற்ற பணக்காரனா?-Rev. Dr. J .N. மனோகரன்

மருத்துவரான லூக்கா தனது நற்செய்தியில் நான்கு பணக்காரர்களை அறிமுகப்படுத்துகிறார்.  துரதிர்ஷ்டவசமாக, அவர்களில் மூன்று பேர் தேவனுடைய சித்தத்தைச்...
Read More




சமூக தீமைகளுக்கான எதிர்ப்பு-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தராகிய இயேசு தொழுநோயாளிகளைத் தொட்டார், ஒரு பாவப்பட்ட பெண் கண்ணீரால் அபிஷேகம் செய்ய அனுமதித்தார், மேலும் வரி வசூலிப்பவர் சகேயுவின்...
Read More




நான் நேசிக்கப்படுவதாக எப்போதெல்லாம் உணர்ந்தேன்?-Rev. Dr. J .N. மனோகரன்

மக்களிடம் கேட்கப்பட்ட போது: நீங்கள் எப்போது நேசிக்கப்பட்டதாக உணர்ந்தீர்கள் என மக்களிடம் கேட்கப்பட்ட போது கணக்கெடுப்பில் ஆறு முக்கிய பதில்கள்...
Read More



அவர் , எரிகோவில் , பிரவேசித்து , அதின் , வழியாக , நடந்துபோகையில் , , லூக்கா 19:1 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 19 TAMIL BIBLE , லூக்கா 19 IN TAMIL , லூக்கா 19 1 IN TAMIL , லூக்கா 19 1 IN TAMIL BIBLE , லூக்கா 19 IN ENGLISH , TAMIL BIBLE Luke 19 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 19 TAMIL BIBLE , Luke 19 IN TAMIL , Luke 19 1 IN TAMIL , Luke 19 1 IN TAMIL BIBLE . Luke 19 IN ENGLISH ,