லூக்கா 16:19-31

16:19 ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.
16:20 லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,
16:21 அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.
16:22 பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்.
16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
16:24 அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.
16:25 அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
16:26 அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிக்கிறது என்றான்.
16:27 அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்து பேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,
16:28 நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
16:29 ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.
16:30 அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.
16:31 அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான் என்றார்.




Related Topics



நரகம் என்பது உல்லாசப் போக்கிடம் அல்ல-Rev. Dr. J .N. மனோகரன்

எலான் மஸ்க் (Elon Musk) என்பவர் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர், அமெரிக்க தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் முதலீட்டாளர் ஆவார். உலகின் மிகப் பெரிய...
Read More




சுயநல பணக்காரனா? அல்லது சுயநலமற்ற பணக்காரனா?-Rev. Dr. J .N. மனோகரன்

மருத்துவரான லூக்கா தனது நற்செய்தியில் நான்கு பணக்காரர்களை அறிமுகப்படுத்துகிறார்.  துரதிர்ஷ்டவசமாக, அவர்களில் மூன்று பேர் தேவனுடைய சித்தத்தைச்...
Read More




நரகம் ஒரு நிஜமான இடம்-Rev. Dr. J .N. மனோகரன்

ஐசுவரியவான் மற்றும் லாசருவின் உவமை, மரணத்திற்குப் பின் இருக்கும் வாழ்க்கையைப் பற்றி கற்பிக்கிறது (லூக்கா 16:19-31). இரண்டு வாழ்வு: பணக்காரர் மற்றும்...
Read More




உவமையிலிருந்து கிடைக்கும் சத்தியம்-Rev. Dr. J .N. மனோகரன்

நரகம் என்பது உண்மையா? நரகத்தை நம்பாத சிலருக்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஐசுவரியவான் மற்றும் லாசருவின் உவமை ஒரு கற்பனையாகும் (லூக்கா 16:19-31)....
Read More




தன் பாவங்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

சுயம் மீதான நம்பிக்கை: பொதுவாக, மக்கள் தன்னம்பிக்கை நல்லது என்று கருதுகிறார்கள்.  சீஷர்களைப் பொறுத்தமட்டில் நம்பிக்கையிலிருந்து...
Read More




ஏழைகளை கேலி செய்யாதீர்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

சில போதகர்களும், பிரசங்கியார்களும் தங்கள் பிரசங்கங்களில் ஏழைகளை கேலி கிண்டல் செய்கிறார்கள்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்குப்...
Read More




பார்க் ஏர்! -Rev. Dr. J .N. மனோகரன்

ஒவ்வொரு பயணியும் விஐபியாக (மிக முக்கியமான நாய்க்குட்டி) கருதும் உலகின் முதல் ஜெட் சார்ட்டர் நிறுவனம் இப்போது களத்தில் இறங்கியுள்ளது.  BARK Air என்பது...
Read More



ஐசுவரியமுள்ள , ஒரு , மனுஷன் , இருந்தான்; , அவன் , இரத்தாம்பரமும் , விலையேறப்பெற்ற , வஸ்திரமும் , தரித்து , அநுதினமும் , சம்பிரமமாய் , வாழ்ந்துகொண்டிருந்தான் , லூக்கா 16:19 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 16 TAMIL BIBLE , லூக்கா 16 IN TAMIL , லூக்கா 16 19 IN TAMIL , லூக்கா 16 19 IN TAMIL BIBLE , லூக்கா 16 IN ENGLISH , TAMIL BIBLE Luke 16 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 16 TAMIL BIBLE , Luke 16 IN TAMIL , Luke 16 19 IN TAMIL , Luke 16 19 IN TAMIL BIBLE . Luke 16 IN ENGLISH ,