யோசேப்பும் அவனது சொப்பனமும்

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், யோசேப்பின் வாழ்க்கை அவனது கனவுகளைச் சுற்றியே இருந்தது (ஆதியாகமம் 37, 39,40,41).

சொப்பனக்காரன்:
யோசேப்புடன் பிறந்தோர் அநேகம் பேர் இருக்க  ஆனால் தேவனோ யோசேப்பை தேர்ந்தெடுத்தார் மற்றும் கனவுகள் மூலம் அவனது வாழ்க்கை நோக்கத்தை மற்றும் தரிசனத்தை வெளிப்படுத்தினார்.  யோசேப்பு தனது கனவுகளை தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்டபோது,  தனது தந்தையால் கண்டிக்கப்பட்டான் மற்றும் அவனது சகோதரர்கள் பொறாமைப்பட்டார்கள். 

சொப்பனக்காரன் தாக்கப்படல்:
யோசேப்பின் சகோதரர்கள் கனவு காண்பவனைக் கொல்வதன் மூலம் கனவை அழிக்க முடியும் என்று நினைத்தார்கள்.  கனவைக் கொடுத்தவர் கனவை நிறைவேற்றுவார் என்பதை புரிந்து கொள்ளாமல் முட்டாளாக இருந்தார்கள்.  அவன் அடிமையாக விற்கப்பட்டு போத்திபாரின் வீட்டில் அடைக்கப்பட்டான்.  அவனுடைய வாழ்க்கையில் தேவ நோக்கத்தை நிறைவேற்ற தேவனே அவனை அழைத்துச் சென்று ஒரு இடத்தில் வைத்தது என்பது தேவனின் அற்புதமான பாதுகாப்பு.

 சொப்பனத்திலும் நினையாத பணி:
 ஒரு அடிமைக்கு, போத்திபாரின் வீட்டில் வேலை செய்வது என்பது அதுவும் முழு எஸ்டேட்டின் மேலாளராக இருப்பது என்பது உண்மையாகவே ஒரு கனவு தான். அவன் மனித வளங்கள், கருவூலம் மற்றும் கடைகள் என அதிகாரமிக்கவனாக இருந்தான்.  அவனது எஜமானர் அவனை நம்பினார் மற்றும் அவனது சிறந்த நிர்வாகத்திலும் நேர்மையிலும் மகிழ்ச்சியடைந்தார்.

சொப்பனம் கலைதல்:
போத்திபாரின் மனைவிக்கு, யோசேப்பு ஒரு ‘கனவு நாயகன்'. சில அறிஞர்கள் போத்திபார் ஒரு அண்ணகன் என்றும், அவனுடைய மனைவி வாடகைத் தந்தையை விரும்புவதாகவும் நினைக்கிறார்கள்.  அவள் யோசேப்பை மயக்கி சிக்க வைக்க முயன்றாள்.  அவன் மறுத்ததால், அவள் கோபமடைந்து, அவனுடைய வாழ்க்கையை சிதைத்தாள்.  எந்த நியாயமான விசாரணையும் இல்லாமல் சிறையில் தள்ளப்பட்டான்.

சொப்பனத்திற்கு விளக்கமளித்தல்:
 சிறையில், பார்வோனின் அரண்மனையில் முன்பு பணியாற்றிய இரண்டு கைதிகளின் கனவுகளை யோசேப்பு விளக்கினான்.  யோசேப்பு கனவை சரியாக விளக்கினான்; ஆம்,  சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப்போட்டான்; அதே சமயம் பானபாத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்.

சொப்பனக்காரனை மறத்தல்:
யோசேப்பு, பார்வோனிடம் தன் சார்பாகப் பரிந்து பேசுமாறும், வீட்டிற்குச் செல்ல உதவுமாறும் அந்த மனிதனிடம் கெஞ்சினான்.  இருப்பினும், அந்த நபர் முழுமையாக இரண்டு வருடங்கள் யோசேப்பை மறந்துவிட்டான்.

சொப்பனக்காரனை நினைவு கூர்தல்: 
இரண்டு கனவுகள் மூலம் தேவன் பார்வோனை எச்சரித்தார்.  எவராலும் கனவுகளுக்கு விளக்கம் கொடுக்க முடியவில்லை.  அப்பொழுது பானபாத்திரக்காரன் யோசேப்பின் நினைவு வர பார்வோனிடம் சொன்னான்.  உடனே, யோசேப்பு பார்வோனிடம் வரவழைக்கப்பட்டான்.

 சொப்பனம் நிறைவேறுதல்:
 யோசேப்பு கனவை விளக்கினான் மற்றும் பார்வோனின் பார்வையில் தயவு பெற்றான்.  பட்டினி, உணவுக் கலவரங்கள் மற்றும் பஞ்சம் என ஏற்படக்கூடிய மரணங்களைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த அவன் பணிக்கப்பட்டான்.  இஸ்ரவேலை ஒரு தேசமாக நிலைநிறுத்த தேவன் அவனைப் பயன்படுத்தினார்.

 தேவனிடமிருந்து எனக்கு தரிசனம் உண்டா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download