சுயம் மீதான நம்பிக்கை:
பொதுவாக, மக்கள் தன்னம்பிக்கை நல்லது என்று கருதுகிறார்கள். சீஷர்களைப் பொறுத்தமட்டில் நம்பிக்கையிலிருந்து துண்டிக்கப்பட்ட தன்னம்பிக்கை பேரழிவை ஏற்படுத்தும். இஸ்ரவேல் தேசம் எரிகோவை தோற்கடித்த பிறகு தன்னம்பிக்கை அடைந்தது மாத்திரமல்ல, அதீத நம்பிக்கையுடன் காணப்பட்டது மற்றும் ஆய் பட்டண யுத்தம் ஏதோ குழந்தைகளின் விளையாட்டு போல எண்ணினார்கள், மிக மோசமாக தோற்கடிக்கப்பட்டனர் (யோசுவா 7:1-26).
சுய தேடல்:
எரேமியாவின் எழுத்தாளரான பாரூக் ஒரு படித்த மனிதர் மற்றும் அவரது சகோதரன் சிதேக்கியா ராஜாவின் கீழ் அதிகாரியாக பணியாற்றினார் (எரேமியா 51:59) எரேமியாவும் பாரூக்கும் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக எகிப்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தேவன், பெரிய காரியங்களைத் தேட வேண்டாம் என்று எச்சரித்தார் (எரேமியா 45:5). அதைதான் பவுல்; "உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்" (ரோமர் 12:3) என்று எச்சரிக்கிறார்.
சுய விருப்ப நுகர்வு:
பணக்காரர் தனது வாசல்களில் இருக்கும் ஏழைகளைப் பற்றி கவலைப்படவில்லை. 'பார்வைக்கு அப்பால், மனதிற்கு அப்பால்' என்பது ஒரு பழமொழி. ஆனால் ஏழை லாசரு கண்ணுக்குத் தெரிந்தான், ஆனால் பணக்காரர் அவனை தன் மனதை விட்டு விலக்க முயன்றார் மற்றும் பல்சுவை உணவில் தன் கவனத்தைச் செலுத்தினார் (லூக்கா 16:19-31).
சுய அன்பு:
கடைசி நாட்களில், மக்கள் சுயத்தை நேசிப்பவர்களாக இருப்பார்கள் என்று பவுல் எழுதுகிறார் (1 தீமோத்தேயு 3:1-5). இப்போதெல்லாம் மக்கள் தங்களைப் பற்றி நன்றாக உணர விரும்புகிறார்கள்.
சுயநலப்போக்கு:
"சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை" (நீதிமொழிகள் 21:17). மக்கள் தங்களைக் குறித்தும், தங்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் ஆர்வமாக உள்ளனர், மற்றவர்கள் கஷ்டப்பட்டாலும் அல்லது எதையாவது இழந்தாலும் கவலைப்படுவதே இல்லை. "அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக" (பிலிப்பியர் 2:4).
சுய பச்சாதாபம்:
மார்த்தாள் சேவை செய்வதில் மூழ்கி, தன் உடன்பிறந்த சகோதரி மீது பொறாமை கொண்டாள். மரியாள் எவ்வித கவலையும் இன்றி ஆண்டவரின் பாதத்தருகே இருப்பதைக் கண்ட மார்த்தாள், தான் மிகவும் பாவம் என்பது போல் தன்னைக் குறித்து மிகவும் பரிதாபப்பட்டாள். இருப்பினும், எது பிரதானமானது என்பதைக் கண்டறிய ஆண்டவர் அவளுக்கு உதவினார்; ஆம், அவரின் பாதத்தில் அமர்ந்து அவரின் வார்த்தைகளைக் கேட்பது அல்லவா மேலானது (லூக்கா 10:38-42).
சுயநல லட்சியம்:
வாழ்க்கையில் லட்சியம் இருப்பது நல்லது, ஆனால் அது தேவ சித்தத்தின் படி இருக்க வேண்டும்; சுயநல லட்சியம் ஆபத்தானது (யாக்கோபு 3:14-15). ஒரு இளைஞன் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியம் இருந்தால், அது நல்லது. ஆனால் இளைஞன் பணம் சம்பாதிக்கவும், செல்வத்தை உருவாக்கவும், பெரியவராகவும் மருத்துவராக விரும்பினால், அது ஆபத்தான சுயநல லட்சியம் ஆயிற்றே.
சுய மனநிறைவு:
பலர் தங்கள் ஆசைகளில் ஈடுபடவும் மற்றவர்களின் தேவைகளை புறக்கணிக்கவும் விரும்புகிறார்கள் (ரோமர் 2:8).
சுய வழிபாடு:
பின்-நவீனத்துவ தலைமுறையினர் தங்கள் சொந்த சரீரத்தைப் பற்றி அதீத உணர்வோடு இருக்கிறார்கள், உண்மையில் தங்கள் சொந்த உடலை வணங்குகிறார்கள்.
நான் என்னை ஜீவ பலியாக பலிபீடத்தில் ஒப்புக் கொடுக்கிறேனா? (ரோமர் 12:1)
Author: Rev. Dr. J .N. மனோகரன்