பெண்களுக்கான தேவனுடைய தெய்வீக ஒழுங்குமுறை

தேவன் ஆதாமையும் ஏவாளையும் தமது சாயலின்படி சிருஷ்டித்து,  பூமியின் மீது ஆளுகையை அளித்து, நன்மைத் தீமை அறியத்தக்க மரத்தின் கனியை புசிக்கக்கூடாது என்று கட்டளையிட்டார். ஏவாள் சாத்தானால் சோதிக்கப்பட்டு கனியைப் புசித்து தன் புருஷனுக்கும் கொடுத்தாள். இருவரும் கீழ்ப்படியாததினால், தேவ சந்னிதியிலிருந்து பிரிக்கப்பட்டார்கள். மேலும், பிசாசினிடமிருந்து ஏவாளைப் பாதுகாக்கும்படி அவளை தனது புருஷனின் கண்காணிப்பின் கீழ் தேவன் வைத்தார். ஆதாமின் விலா எலும்பிலிருந்து எடுக்கப்பட்ட ஏவாள் அவனுடன் சமமாக, உறுதுணையாக நிற்க வேண்டியவள், இப்பொழுது கீழ்ப்படியும் நிலையில் காணப்படுகிறாள். 

மனிதனின் வீழ்ச்சியின் பலனாக ஒரு தெய்வீக ஒழுங்கை தேவன் நிலைப்படுத்தியதை காணலாம். வேதாகமம் முழுவதிலும் இந்த தெய்வீக ஒழுங்கு வேத வசனத்துடன், இந்த பூமியில் உறவை நிலைநாட்டுவது மட்டுமின்றி, கிறிஸ்துவின் அழகான கீழ்ப்படிதலுள்ள மணவாட்டியுமாக மாறுவதற்கு நம்மை அனுமதிக்கிறது.

1 கொரிந்தியர் 11: 3 ல் இந்த பாதுகாப்புக் குறித்து கூறப்பட்டுள்ளது. தேவன் கிறிஸ்துவுக்கு தலையாக இருக்கிறார். கிறிஸ்து புருஷனுக்கு தலையாக இருக்கிறார். புருஷன் ஸ்திரீக்கு தலையாக இருக்கிறான். இந்த அதிகாரததின் சங்கிலியில் ஒவ்வொருவரும் தங்களை கீழ்ப்படிந்து அர்ப்பணிக்கும் போது பாதுகாக்கப்படுகிறார்கள். அப்பொழுது மட்டுமே எல்லாவற்றிற்கும் பாதுகாப்பாக இருக்கும். தேவனால் சரியான ஐக்கியத்துடனிருக்கும் போது பாதுகாக்கப்படுகிறார்கள்.

1 கொரிந்தியர் 11: 10 ல் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின் மேல் முக்காடிட்டுக் கொள்ள வேண்டும் என்றுள்ளது. இதன் அர்த்தம் என்ன? தூதர்களிடமிருந்து நம்மை மறைத்துக்கொள்ள முக்காடு போடுகிறோமா, முக்காடு போட்டுக் கொண்டால் தூதர்களால் நம்மை பார்க்க முடியாதா? கிறிஸ்துவ குடும்பம் என்ற புத்தகத்தில் லாரி கிறிஸ்டனசன் என்பவர் இதற்கு ஒரு வியாக்கியானத்தை கூறுகிறார். 10 ம் வசனத்தில் உள்ள தூதர்கள் ( ஏஞ்சல்லோஸ) என்ற கிரேக்க சொல். தேவனுக்கு உண்மையாயிருந்த ஆவிகளையும் அல்லது கீழ்ப்படியாமலிருந்த சாத்தானின் ஆவிகளையும் குறிப்பதாக கூறுகிறார். இந்த வசனத்தின் தொடர்பின்படி, கணவனின் அதிகாரத்தினால் பாதுகாக்கப்படாத பெண்மணி பொல்லாத தூதர்ளின் செயல்களுக்கு ஆளாக்கப்படுவார்களென்று பவுல் கூறுவதாக கிறிஸ்டன்சன் நம்புகிறார். ஆகவே, முக்காடு என்பது நான் ஒரு அதிகாரத்திற்கு உட்;பட்டிருக்கிறேன் என்பதை வெளிப்படுத்துவதற்கான ஒரு அடையாளமே தவிர வேறல்ல. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலைவன் புருஷனே.

எபேசியர் 5: 22- 24 ல் மனைவிகளே, கர்த்தருக்கு கீழ்ப்படிகிறது போல, உங்கள் சொந்தப் புருஷருக்கு கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருப்பது போல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான். அவரே சரீரத்திற்கும் இரட்சகராய் இருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிகிறது போல, மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷருக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்று பவுல் எழுதுகிறார்.

ஒரு முறை என் கணவர், நானும் என் தோழியும் கடைக்குச் செல்வதற்காக ஒரு வேனை வாடகை;கு அமர்த்திவிட்டு சென்றுவிட்டார். சில மணி நேரம் கழித்து என் வீட்டிற்கு அந்த வேன் வந்தது. நானும் என் தோழியும் நம் இருவருக்காக எதற்கு இவ்வளவு பெரிய வேன், பணம்; அதிகமாகுமே, கடைத்தெருவில் வாகனத்தை நிறுத்துவதும் சிரமமாக இருக்குமே என்று யோசித்து, காரை வாடகைக்கு எடுக்க தீர்மானித்து அந்த டிராவல்ஸ் உரிமையாளரிடம்; பேசினோம். இப்பொழுதுதான் கார் வேறு இடத்திற்கு சென்றுவிட்டது மேடம் என்றார். வேறு வழியில்லாமல் அந்த வேனிலேயே கடைக்கு சென்றோம்;. அப்பொழுது என் மனதில் சில கேள்விகள், ஆண்டவரே, நான் பணம், நேரம், சிரமம் எல்லாவற்றையும் யோசித்துதானே முடிவெடுத்தேன். என் கணவர் ஒன்றையும் யோசிக்காமல் ஒரு முடிவு எடுத்தார். அவர் சொன்னது தானே நடந்தது. நான் நினைத்தது ஏன் நடக்கவில்லை? என்னை நீங்கள் நேசிக்க வில்லையா? என்னில் ஏதாவது பாவம் இருக்கிறதா? எப்பொழுதும் இப்படியே நடக்கிறதே என்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். அப்பொழுது ஆண்டவர், ஹெலன் உன் கணவன் சொல்வதற்கெல்லாம் அப்படியே கீழ்ப்படி என்றார். என் கணவரிடம் நான் முரட்டாட்டம் பண்ணினதில்லை. அவருக்கு தெரியாமல் எதையும் செய்ததுமில்லை. செய்ய மாட்டேன் என்று எதிர்த்துப் பேசினது இல்லை. ஆனால், அவர் சொல்லும் காரியத்துக்கு உடனே நான் வேறு ஆலோசனை சொல்லுவேன். தேவன் இந்த காரியத்தை எனக்கு உணர்த்தினார். அவர் சொல்வதற்கு உடனே சரி என்று சொல்ல முயற்சிக்கிறேன். தேவைப்பட்டால் என்னுடைய கருத்துக்களைக் கூறுவேன். ஆனால், முடிவெடுக்கும் பொறுப்பை அவரிடம் விட்டு விடுவேன். ஏனெனில் அவரே வீட்டின் தலைவர்.

தானாக முடிவெடுத்த வேதாகமப் பெண்கள் சிலர் தங்கள் வாழ்க்கையில் சாபத்தை கொண்டு வந்துள்ளனர்.

ஏவாள்: ஏதேன் தோட்த்திலே இருந்தது இரண்டே பேர் தான். ஏவாளிடம் சாத்;தான் பழத்தை சாப்பிட சொன்னபோது, உடனே தன் கணவனிடம் ஆலோசித்திருக்கலாம். ஆனால் அவளே முடிவெடுத்து சாப்பிட்டுவிட்டாள். தனக்கும், மனுகுலத்துக்கும் சாபத்தை கொண்டு வந்துவிட்டாள்.

ரெபேக்காள்: ஈசாக்கு ஏசாவை ஆசீர்வதிக்க விரும்பினார். ஆனால் தேவ சித்தம் யாக்கோபு ஆசீர்வதிக்கப்பட்வனாக இருப்பான் என்பதே. (ஆதி: 25:21-23) ரெபேக்காள் ஈசாக்கிடம் தேவ சித்தத்தை ஞாபகப்படுத்தி இருந்திருக்கலாம். ஆனால் அவள் பதறிப்போய், யாக்கோபு ஈசாக்கை ஏமாற்ற வைத்து, அவனிடமிருந்து ஆசீர்வாதத்தை பெற வைக்கிறாள். ஈசாக்கிடம் போகும் முன் யாக்கோபு, ரெபேக்காளை நோக்கி,  ஒரு வேளை தகப்பன் என்னைக் கண்டுபிடித்துவிட்டு ஆசீர்வாதத்திற்கு பதிலாக சபித்துவிட்hல் என்ன செய்வது என்கிறான். ரெபேக்காளோ, மகனே உன் மேல் வரும் சாபம் என் மேல் வரட்டும் என்று சொல்லி அனுப்புகிறாள். சாபத்தை தானே வருவித்துக் கொள்கிறாள். மாமன் வீட்டிற்கு தப்பி ஓடின யாக்கோபை கடைசி வரை பார்க்காமல் இறந்து போகிறாள்.

சாராள்: மலடியாய் இருந்த சாராள் ஆபிரகாமை நோக்கி தன் அடிமைப் பெண் ஆகாரோடு சேரும்படி சொன்னாள். அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். தேவனுடைய சித்தம் நிறைவேற காத்திருக்காமல்,  பதட்டப்பட்டு தானே ஒரு முடிவை எடுத்தாள் சாராள், அதனால் இஸ்மவேலின் சந்ததி இன்றும் கிறிஸ்துவர்களுக்கு எதிரிகளாகவே இருக்கிறார்கள். ஆகவே, சகோதரிகளே பதற்றபட்டு கணவனை ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்காதீர்கள். உங்கள் கணவருக்கு கீழ்ப்படியுங்கள்.

கர்த்தரை நம்பி நீங்கள் உங்கள் கணவருக்கு கீழ்ப்படியும் போது கட்டாயம் தேவன் உங்கள் வாஞ்சைகளை நிறைவேற்றுவார். கணவனுக்கு கீழ்ப்படிவது என்பது பெண்களை தாழ்ந்தவராக நினைப்பது அல்ல. உங்கள் கணவர் உங்களை அப்படி நினைத்தால். நடத்தினால் சோர்ந்து போகாதிருங்கள். உங்கள் உள்ளத்தில் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளளாமல், குடும்பம் என்கிற இயக்கம் சரியாக செயல்பட ஒரு கட்டமைப்பு தேவை, அதில் நம் பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம். சகோதரிகளே!  நாம் ஒரு அதிகாரத்துக்கு கீழ்ப்பட்;டிருப்பது நமக்கு பாதுகாப்பு. நம் கணவருக்கும் அதிகாரி உள்ளார். அவர் கிறிஸ்து. நாம் காணக்கூடிய ஒரு தலைவர் நமக்கு இருப்பது நமக்கு பாக்கியம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

Author:  Mrs. Helen JacobTopics: Bible Articles Women Bible Study

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download