கண்ணியம் மற்றும் மரியாதை

பிரிந்து போன தம்பதிகள் கெட்ட வார்த்தைகள் பேசுவதற்கு பாட்னா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது, அதாவது ஒருவரையொருவர் பேயே பிசாசே என அழைப்பதுண்டு, ஆனால் கொடுமைக்கு சமமானதல்ல (இந்தியா டுடே  மார்ச் 30, 2024). குடும்பம் மற்றும் கணவன்-மனைவி உறவுகள் தொடர்பான மதிப்புகள் எவ்வாறு குறைந்த மதிப்பிற்கு உட்பட்டுள்ளன? 

உதவி மற்றும் துணை: 
சிருஷ்டிப்பு பற்றிய பதிவு, ஏவாள் உருவாக்கம் பற்றிய விவரங்களைத் தருகிறது.  ஆதாம் தூங்கும் போது, தேவன் அவனது விலா எழும்பிலிருந்து ஒரு விலா எலும்பை எடுத்து ஏவாளைப் படைத்தார் (ஆதியாகமம் 2:22-24). மத்தேயு ஹென்றி இப்படியாக எழுதினார்; “ஆதாமின் தலையிலிருந்து ஏவாள் எடுக்கப்படவில்லை, அவனால் மிதிக்கப்படுவதற்கோ, அவனுடைய கால்களினால் நசுக்கப்படுவதற்கோ அல்ல, ஆனால் அவனுடைய பக்கத்திலிருந்து அவனுக்குச் சமமாக, அவனுடைய தோளுக்கு கீழ் அவனால் பாதுகாக்கப்பட வேண்டும், அவனுடைய இதயத்திற்கு அருகில் அவனால் நேசிக்கப்பட வேண்டும்”. ஆம், ஒரு மனைவியை அடிமை அல்லது பணிப்பெண்ணைப் போல் நடத்தினால், உறவு முறிந்துவிடும்.   சில கலாச்சாரங்களில், கணவன் கடவுள் மற்றும் மனைவி வெறும் வழிபாடு செய்பவள், கணவன் துன்புறுத்தினாலும் அதை ஏற்றுக் கொண்டு சரிசெய்து கொண்டு போக வேண்டும்; மற்ற கலாச்சாரங்களில், மனைவி என்பது ஒரு சொத்து மற்றும் உடைமையாக கருதப்படலாம். 

அவமதிப்பு வார்த்தைகள் 
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வார்த்தைகளில் விவேகமாகவும், கண்ணியமாகவும், ஞானமாகவும் இருக்க கற்றுக்கொடுத்தார்.   தன் சகோதரனை முட்டாள் அல்லது மூடனே என்று அழைத்தால் அந்நபர் நியாயந்தீர்க்கப்படுவான். ஒருவரை முட்டாள் என்று அழைப்பது அவர்களின் குணத்தை அவமதிப்பதாகும்.  அதே போல, ஒருவரை மூளை இல்லாதவனே என்று அழைப்பது அந்த நபரின் அறிவாற்றலை அவமதிப்பதாகும் (மத்தேயு 5:22-24). உடன்பிறந்தோரை அவமதிப்பதையே கண்டனத்திற்குரியது என்றால், மனைவியை இழிவாக நடத்தும் போது என்னவாகும்! கணவன்-மனைவி உறவு என்பது புனிதமான, உடன்படிக்கையான உறவாகும் (ஆதியாகமம் 2:24)

கண்ணியமும் மரியாதையும் 
பவுல் கணவர்களுக்கு, தங்கள் மனைவிகளை நேசிக்க வேண்டும் என்று கட்டளையிட்டு எழுதியுள்ளார்.   அன்பு கொடுத்தால் அன்பு கிடைக்கும். அவமரியாதைக்கு அவமதிப்பு அல்லவா கிடைக்கும் (எபேசியர் 5:25-29). அந்த அன்பின் அடிப்படையில் மனைவிகள் கீழ்ப்படிய வேண்டும்.  கர்த்தராகிய ஆண்டவர் திருச்சபையை நேசிப்பது போல புருஷர்களும் மனைவியில் அன்பு கூர வேண்டும்.‌  இதன் பொருள் தியாகம், தன்னையே கொடுத்தல் மற்றும் நிபந்தனையற்ற அன்பு ஆகும்.   சட்ட கோரிக்கைகள் அல்ல, ஆனால் அன்பு கட்டளைகள் மதிக்கப்படும். 

எனது மனைவியிடம் எனது அணுகுமுறை, வார்த்தைகள் மற்றும் செயல்கள் என்ன? 

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download