எரிகோ நகரில் அருட்பணி

கர்த்தராகிய இயேசு எருசலேம் நோக்கிய தனது இறுதி பயணத்தில் எரிகோவை வந்தடைந்தார் (லூக்கா 18:35-43; 19:1-27; மத்தேயு 20:29-34; மாற்கு 10:46-52). எருசலேம் எரிகோவிலிருந்து 15 மைல் தொலைவில் இருந்தது. உலகத்தில் மிகத் தாழ்வான பகுதியில் இருந்த குடியிருப்பு என்றால் அது எரிகோ தான். இது உலகின் மிகப் பழமையான நகரம் என்றும் சிலர் கூறுகின்றனர். இது கடல் மட்டத்திலிருந்து 240 மீட்டர் தாழ்வாக உள்ளது. எருசலேம் கடல் மட்டத்திலிருந்து 754 மீட்டர் உயரத்தில் இருந்தது.  இது எரிகோவிலிருந்து எருசலேமுக்கு செங்குத்தான ஏறுதலாகும்.  பழைய நகரமான எரிகோ யூதர்களின் நகரம். புது எரிகோவை ஏரோது தனது குளிர்கால அரண்மனையாகக் கட்டினார்.

இரண்டு சம்பவங்கள்:
இரு நகரங்களுக்கு இடையே குருடனை குணப்படுத்தும் நிகழ்வு நடந்தது. மத்தேயுவும் மாற்கும் கர்த்தராகிய இயேசு பழைய நகரமான எரிகோவை விட்டு புறப்படும்போது என்று எழுதியுள்ளனர்;  லூக்கா இதே சம்பவத்தைப் பற்றி எழுதும்போது அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும் போது என்பதாக குறிப்பிடுகிறார். திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்பதை மாற்கு பதிவு செய்துள்ளார். சகேயுவுடனான சம்பவம் அநேகமாக புதிய எரிகோவில் நடந்திருக்கும், அங்குதான் உயரடுக்கு ஜனங்களும் புறஜாதிகளும் வாழ்ந்தனர்.

இரண்டு சமூக நிலைகள்:
பர்திமேயு ஒருவேளை வீடு, குடும்பம் மற்றும் வாழ்வாதாரம் இல்லாமல் இருந்திருக்கலாம்.  பார்வை இழந்ததால் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பான். எனவேதான் அவன் தனது பார்வையை மீட்டெடுக்க அல்லது திரும்ப பார்வை வேண்டி ஜெபித்தான் (மாற்கு 10:51). இதற்கு நேர்மாறாக, சகேயு செல்வந்தராக இருந்தான், வரி வசூலிப்பவனாக பொறுப்பு வகித்தான். இருவரும் ஆவிக்குரிய ரீதியில் பின்தங்கியிருந்தனர்.  வரி வசூலிப்பதினால், யூதர்கள் சகேயுவை புறக்கணித்தனர்.  பார்வையற்றவர் என்பதால், பர்திமேயுவால் வழிபாடுகளுக்கு செல்ல முடியவில்லை.

இரண்டு தேவைகள்:
பார்திமேயு தான் குணமடைந்து பார்வை பெறவும், தன்னிறைவு பெறவும், வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும் விரும்பினான். சகேயு செல்வந்தராகவும், சக்தி வாய்ந்தவராகவும், உயரடுக்கினராகவும் இருந்தாலும், தனிமையாக உணர்ந்தான். அவனுக்கு சமூகத்தோடு நல் உறவும், நண்பர்களும், அர்த்தமுள்ள உறவுகளும் தேவைப்பட்டது.

இரண்டு அணுகுமுறைகள்:
பர்திமேயு ஆண்டவராகிய இயேசு வருவதை அறிந்தான், கூட்டத்தில் இருந்தவர்கள் அவனை அமைதிப்படுத்த முயன்றபோதும் அவன் கத்தினான், கெஞ்சினான், வேண்டினான். சகேயு கூச்சம் உள்ளவனாக காணப்பட்டான், அவனது கதறல், அழுகை மற்றும் மன்றாட்டு அவனது இதயத்திலிருந்து வெளிப்பட்டது, ஆனால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.

இரண்டு பிரதியுத்ரங்கள்:
இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஆண்டவர் நிறுத்தப்பட்டார்; அவர்களை அழைத்தார்.  பர்திமேயு தனது வஸ்திரத்தை எறிந்து விட்டு கர்த்தராகிய இயேசுவிடம் வந்தான். பார்வையடைந்த பர்திமேயு சீஷனாக இயேசுவின் பின் சென்றான்.  சகேயு ஆண்டவரின் அழைப்பிற்கு இணங்கி, தான் மனந்திரும்புவதாகவும், தான் சட்டவிரோதமாக சம்பாதித்ததை திரும்ப நாலத்தனையாக அளிப்பதாகவும் தனது ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிப்பதாகவும் கூறினான்.

 பார்திமேயு அல்லது சகேயு போல நான் கர்த்தரிடம் வந்திருக்கிறேனா?

Author: Rev. Dr. J. N. ManokaraTopics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download