ஏசாயா 30:18,19 உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார் ஏசாயா 54:7,8; புலம்பல் 3:32; மீகா 7:18,19; சங்கீதம் 4:1; சங்கீதம் 9:14; சங்கீதம் 27:7; சங்கீதம் 31:9; சங்கீதம் 51:1; சங்கீதம் 56:1; சங்கீதம் 57:1; சங்கீதம் 86:3
1. பயந்தவர்களுக்கு இரங்குகிறார்
சங்கீதம் 103:13 (10-13)தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகி றதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
லூக்கா 15:11-32 இளைய குமாரனுக்கு இரங்கிய தகப்பன்
2. எளியவருக்கு இரங்குகிறார்
சங்கீதம் 72:13 (12-13) பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.
உபாகமம் 15:7-10 எளியவனான உன் சகோதரனுக்கு தாராளமாய்க் கொடுப்பாயாக
3. பார்வையற்றவருக்கு இரங்குகிறார்
மாற்கு 10:47,48 (46-52) பர்திமேயு குருடன் இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான்... அவனோ தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான்.
மத்தேயு 20:30,31; லூக்கா 18:37,38
4. நோயுற்றவருக்கு இரங்குகிறார்
மத்தேயு 17:15 (14-18) ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்...
மத்தேயு 15:22 (22-28) கானானிய பெண்: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
நீங்களும் மனமிரங்குங்கள்
நீதிமொழிகள் 14:21 தரித்திரனுக்கு இரங்குங்கள்
நீதிமொழிகள் 19:17 ஏழைக்கு இரங்குங்கள்
மத்தேயு 18:33 (21-35) கடனாளிக்கு இரங்குங்கள்
Author: Rev. M. Arul Doss