1. இரத்தத்தைச் சிந்தின கர்த்தர்
யோவான் 19:34 போர்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.
மத்தேயு 27:4; 1பேதுரு 1:19 குற்றமில்லாத இரத்தம்
எபிரெயர் 9:14; 1யோவான் 1:7 சுத்திகரிக்கும் இரத்தம்
மத்தேயு 26:28; மாற்கு 14:24 உடன்படிக்கைக்குரிய இரத்தம்
யோவான் 6:53 மெய்யான பானமாகிய இரத்தம்
யோவான் 6:54 அவருடைய இரத்தத்தினால் ஜீவன் உண்டு
யோவான் 6:56 அவருடைய இரத்தத்தினால் நிலைத்திருக்கிறோம்
எபேசியர் 2:13 அவருடைய இரத்தத்தினால் சமீபமானீர்கள்
கொலோசெயர் 1:20 அவருடைய இரத்தத்தினால் சமாதானம்
எபிரெயர் 9:12 அவருடைய இரத்தத்தினால் நித்திய மீட்பு
எபேசியர் 10:20 அவருடைய இரத்தத்தினால் தைரியம்
எபேசியர் 1:7; கொலோசெயர் 1:14; எபிரெயர் 9:22 பாவமன்னிப்பு
2. கண்ணீரைச் சிந்தின கர்த்தர்
யோவான் 11:35(32-36) இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள். அவள் அழுகிற தைக் கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து...கண்ணீர் விட்டார்.
லூக்கா 19:41 (41-44) அவர் எருசலேம் நகரத்துக்கு சமீபமாய் வந்தபோது நகரத்தைப் பார்த்து, அதற்காக கண்ணீர் விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந் தாயானால் நலமாயிருக்கும்
3. வியர்வைச் சிந்தின கர்த்தர்
லூக்கா 22:44(39-44) பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவ மலைக்குப் போனார்... அவர் முழங்கால்படியிட்டு, ஜெபம்பண்ணினார். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான். அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளி களாய்த் தரையிலே விழுந்தது
Author: Rev. M. Arul Doss