சங்கீதம் 71:6 நான் கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் உம்மால் ஆதரிக்கப் பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே
சங்கீதம் 119:116,117 நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த் தையின்படி என்னை ஆதரித்தருளும்... அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எக்காலமும் உம்முடைய பிரமாணங்களின் பேரில் நோக்கமாயிருப்பேன்
1. பாரமுள்ளவரை ஆதரிக்கிறவர்
சங்கீதம் 55:22 கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்
மத்தேயு 11:28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்...
2. ஆபத்திலுள்ளவரை ஆதரிக்கிறவர்
சங்கீதம் 18:18; 2சாமுவேல் 22:19 என் ஆபத்து நாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவு
சங்கீதம் 20:1,2 ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக... சீயோனிருந்து உம்மை ஆதரிப்பாராக
ஆதியாகமம் 45:7; 47:12,17 யோசேப்பு தன் சகோதரருக்கு ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான்.
ஆதியாகமம் 48:14-20 யாக்கோபு யோசேப்பின் பிள்ளைகளாகிய எப்ராயீமையும் மனாசேயையும் ஆசீர்வதித்தல்
லேவியராகமம் 25:35 உன் சகோதரனை ஆதரிக்கவேண்டும்
3. திக்கற்றவரை ஆதரிக்கிறவர்
சங்கீதம் 146:9 பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார்.
ஏசாயா 1:17 ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும் விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்
ஏசாயா 42:1 நான் ஆதரிக்கிற என் தாசன்
ரூத் 2:20(12-16) நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளி போவாஸ்
Author: Rev. M. Arul Doss