இருதயம் பார்க்கும் கர்த்தர்

1சாமுவேல் 16:7 மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்
எரேமியா 20:11-12 உள்ளந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே

1. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக
யோவான் 14:1 உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்
யோசுவா 1:9 பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் கர்த்தர் உன்னோடே இருக்கிறார்
1நாளாகமம் 28:20 நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு... அவர் உன்னை விட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.
2நாளாகமம் 20:15,17 நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்
2நாளாகமம் 32:7 நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்

2. உங்கள் இருதயம் பயப்படாதிருப்பதாக
யோவான் 14:27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துபோகிறேன், என்னு டைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை, உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக
ஏசாயா 41:10,13,14 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்
ஏசாயா 43:1,5 பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்
ஏசாயா 54:4 பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை
வெளிப்.2:10 நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே

3. உங்கள் இருதயம் துவளாதிருப்பதாக
உபாகமம் 20:3 இஸ்ரவேலரே, கேளுங்கள்; இன்று உங்கள் சத்துருக்களு டன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம்
எரேமியா 51:46 உங்கள் இருதயம் துவளாமலும், தேசத்தில் கேட்கப் படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமலும் இருங்கள்.

Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download